Press "Enter" to skip to content

தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் தேவைக்காக நிதி முறைகேடு செய்த கனானி – அதிர வைக்கும் ரகசியங்கள்

புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், உலகின் பல நாடுகளில் இருந்து பல பெரிய வங்கிகள் மூலம் இயங்கும் இந்த நிதி முறைகேட்டு வலையமைப்பை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

நிதி மோசடி குற்றங்களைத் தடுக்கும் அமெரிக்க அமைப்பான ஃபின்சென்(ஃபைனான்சியல் குற்றம்ஸ் என்ஃபோர்ஸ்மென்ட் நெட்வொர்க்)-ன் அறிக்கையில் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து துபை மற்றும் அமெரிக்காவரை பரவியுள்ள ஒரு பெரிய மோசடி வலையமைப்பு குறித்தும் SAR வெளிப்படுத்துகிறது.

‘சஸ்பிஷியஸ் ஆக்டிவிடி அறிக்கை’ என்பது தான் “எஸ்ஏஆர்” என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான கோப்புகளை சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் அமைப்பு – இன்டர்நேஷனல் கன்சார்ட்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்ஸ் (ஐ.சி.ஐ.ஜே) ஆய்வு செய்துள்ளது. இது பல ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளது, பிபிசியும் ஐ.சி.ஐ.ஜே உடன் இணைந்துள்ளது.

இந்த நிதி மோசடிகளின் வலையமைப்பை அல்தாஃப் கனானி என்ற பாகிஸ்தான் குடிமகன் இயக்கி வந்துள்ளார். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிமின் நிதி நிர்வாகத்தைக் கவனித்து வரும் முக்கிய நபராக இவர் அறியப்படுகிறார்.

நியூயார்க்கின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி தாக்கல் செய்த இந்த எஸ்.ஏ.ஆர் அறிக்கைகளை ஐ.சி.ஐ.ஜே-வுடன் இணைந்து, இந்திய நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை செய்தது.

ஃபின்சென் கோப்புகள் மூலம் வெளிவந்த ரகசிய ஆவணங்கள், பெரிய வங்கிகள், குற்றவாளிகளை உலகம் முழுவதும் எவ்வாறு பரிவர்த்தனை செய்ய அனுமதித்தன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-க்காக நிதி முறைகேடு செய்த கனானி

இந்தச் சூழலில் தான் எஸ் ஏ ஆர், கனானியின் நிதிச் செயல்பாடுகள், பல தசாப்தங்களாக போதைப்பொருள் மாஃபியாக்களுக்காகவும், தலிபான் மற்றும் அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்காகவும், சுமார் 14 முதல் 16 டிரில்லியன் டாலர் வரை பரிவர்த்தனை செய்ததாகக் கூறுகிறது.

கனானியின் இந்த வணிகத்தை அமெரிக்க அதிகாரிகள் ‘மனி லாண்டரிங் ஆர்கனைசேஷன்’ என்று பெயரிட்டுள்ளனர். இது சுருக்கமாக எம்.எல்.ஓ என்று குறிப்பிடப்படுகிறது.

உலக அளவிலான விசாரணைக்குப் பின்னர், 11 செப்டம்பர் 2015 அன்று பனாமா விமான நிலையத்தில் கனானி கைது செய்யப்பட்டு மியாமியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜூலை 2020 இல், தடுப்புக்காவல் முடிந்ததும், நாடு கடத்தப்படுவதற்காக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் இதன் பின்னர் அமெரிக்க அதிகாரிகள் அவரை பாகிஸ்தானுக்கு நாடுகடத்தியுள்ளார்களா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அனுப்பினார்களா என்பது தெளிவாகவில்லை.

அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), கனானி கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை அறிவித்தபோது,​​ தாவூத் இப்ராஹிமுடனான அவரது தொடர்புகள் குறித்த ஆவணங்களைத் தயார் செய்தது.

தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-க்காக நிதி முறைகேடு செய்த கனானி

11 டிசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், “கனானியின் எம்.எல்.ஓ, பல நிதி நிறுவனங்களுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவியல் அமைப்புகளுக்கு உலகளவில் டிரில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியது. கனானி எம்.எல்.ஓ மற்றும் அல்-ஜுரானி எக்ஸ்சேஞ்சின் தலைவரான அல்தாஃப் கனானி இந்த வழக்கில் தலிபான்கள் வரையில் கூட பண மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் லஷ்கர்-இ-தைபா, தாவூத் இப்ராஹிம், அல்கொய்தா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியோருடனும் தொடர்பு வைத்துள்ளார்” என்று ஓ எஃப் ஏ சி குறிப்பிட்டுள்ளது.

கனானியின் கைது ஒரு பெரிய வெற்றியாக இந்திய உளவு அமைப்புகளால் கருதப்பட்டது – குறிப்பாக, லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகளுடன் கனானியின் நேரடித் தொடர்புகளை OFAC வெளியிட்டிருந்ததால்.

கனானி மீதான கட்டுப்பாடுகளை அறிவிக்கும் மூல அறிவிப்பாணை வெளியான ஒரு வருடம் கழித்து, 10 அக்டோபர் 2016 அன்று, OFAC கனானி மற்றும் கனானி எம்.எல்.ஓ-வுடன் தொடர்புடைய மற்ற சிலரின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது என்பதும் ஒரு முக்கியமான உண்மை. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானில் இருந்து கொண்டு, கனானி மற்றும் அவரின் வலையமைப்புக்கு உதவியதாக, கனானியின் குடும்பத்தைச் சேர்ந்த பலரின் பெயர்களும் சில அமைப்புகளின் பெயர்களும் இருந்தன.

தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-க்காக நிதி முறைகேடு செய்த கனானி

இந்த நிறுவனங்களின் பட்டியலில் துபாயில் உள்ள மஸாகா ஜெனரல் டிரேடிங் நிறுவனத்தின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இன்று, அந்தத் தடைகள் அறிவிக்கப்பட்ட சரியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘மாஸ்கோ மிரர் நெட்வொர்க்கில்’ கனானி எம்.எல்.ஓவின் பொருளாதார ஊடுருவல் எவ்வளவு ஆழமானது என்பதை ஃபின்சென் கோப்புகள் வெளிப்படுத்துகின்றன.

‘மிரர் டிரேடிங்’ என்பது ஒரு முறைசாரா வணிகமாகும், அதில் தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒரு இடத்திலிருந்து பாதுகாப்புயைப் பெற்று எந்த ஒரு நிதி ஆதாயமும் இன்றி, மற்றொரு இடத்திற்கு விற்கின்றன. இதனால், தொகையின் அசல் மூல மற்றும் இறுதி இலக்கு பற்றிய தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

ஃபின்சென் கோப்புகளில் 54 ஷெல் நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட இருபது பக்க உளவுத்துறை அறிக்கை உள்ளது. எந்தவொரு உண்மையான வியாபாரமும் செய்யாமல் நிதிப் பரிவர்த்தனைகளுக்காக மட்டுமே வெறும் காகிதங்களில் பதிவாகியுள்ள நிறுவனங்களை ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கிறோம்.

2011 முதல் இந்த 54 நிறுவனங்கள் ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் சந்தைகளில் ஆண்டுதோறும் டிரில்லியன் டாலர்கள் வரை முறைகேடாக ஈடுபட்டுள்ளன என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஃபின்சென் புலனாய்வு அறிக்கையின்படி, மஸாகா ஜெனரல் டிரேடிங் நிறுவனத்திற்கு, மார்ச் 2013 மற்றும் அக்டோபர் 2016 க்கு இடையில், மக்கள் விரும்பத்தக்கதுகோ மிரர் நெட்வொர்க் நிறுவனங்கள் மூலம் 49.78 மில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது. இதனுடன், மஸாகா, சிங்கப்பூரில் உள்ள ‘ஆஸ்க் டிரேடிங் பி.டி.இ’ என்ற நிறுவனத்துடனும் பரிவர்த்தனை செய்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் கொடுக்கும் கனானி, மனி லாண்டரிங் ஆர்கனைசேஷனுக்கு உதவி செய்ததால், மஸாகா நிறுவனத்திற்குக் OFAC கட்டுப்பாடு விதித்தது.

தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-க்காக நிதி முறைகேடு செய்த கனானி

கனானி மற்றும் மஸாகாவின் விவகாரத்தில் இந்திய தொடர்புகளும் இருப்பதாகத் தெரிகிறது. கசிந்துள்ள ஆவணங்களின்படி, நியூயார்க்கின் ஜே.பி. மோர்கன் மற்றும் சிங்கப்பூரின் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடாவின் துபாய் கிளை ஆகியவை மஸாகா ஜெனரல் டிரேடிங் மற்றும் ஆஸ்க் டிரேடிங் பி.டி.இ இடையிலான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, மஸாகா ஜெனரல் டிரேடிங்கின் கணக்குகளை ஆராய்ந்த பின்னர், புதுடில்லியின் ‘ரங்கோலி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயர் வெளிவருகிறது. மொத்த ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் 2009 இல் நிறுவப்பட்டது.

ரங்கோலி இன்டர்நேஷனலின் பெயரில் சுமார் 70 பரிவர்த்தனைகளை ஃபின்சென் கோப்புகள் பதிவு செய்கின்றன. இது பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் போன்ற பல இந்திய வங்கிகள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்தது.

17 இடங்களிலிருந்து இயங்கும் இந்த முறைகேட்டின் மொத்தத் தொகை 10.65 மில்லியன் வரை செல்கிறது. இதில் ஒரு முக்கியமான பரிவர்த்தனையாக, ஜூன் 18, 2014 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் மஸாகா ஜெனரல் டிரேடிங்க்-கு 136,254 டாலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ரிஜிஸ்ட்ரார் ஆஃப் நிறுவனம்ஸ் (ஆர்ஓசி) துறையின் ஆவணங்கள், மார்ச் 2014 இல், ரங்கோலி இன்டர்நேஷனலின் இலாபங்களில் கடும் சரிவு காணப்பட்டதைக் காட்டுகிறது.

இந்த நேரத்தில், நிறுவனம் 339.19 கோடி வருவாயில் 74.87 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. 2015-க்குப் பிறகு இந்நிறுவனம், பங்குதாரர்களின் வருடாந்தரக் கூட்டத்தைக் கூட்டவில்லை. தவிர, அதன் வருடாந்தர இருப்புநிலைக் குறிப்பையும் சமர்ப்பிக்கவில்லை.

பல இந்திய வங்கிகளும் ரங்கோலியின் குறைபாடுகள் குறித்து எச்சரிக்கைகள் விடுத்துள்ளன. இந்தியன் யூனியன் மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் வசூலுக்காக, ரங்கோலி இன்டர்நேஷனலின் அசையாச் சொத்தை ஏலம் விட அறிவிப்பு அனுப்பியிருந்தன.

அலகாபாத் வங்கி இந்த நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டிலேயே அதன் முதல் 50 நான் பர்ஃபார்மிங் அஸ்ஸட்ஸ் பட்டியலில் சேர்த்தது.

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பின் (ஐ.சி.ஐ.ஜே) தரப்பிலிருந்து தொடர்பு கொண்டபோது,​​ அல்தாஃப் கனானியின் வழக்கறிஞர் மெல் பிளாக், “கனானி தனது தவறை ஒப்புக் கொண்டார், அதற்கான நீண்ட சிறை தண்டனையையும் அவர் அனுபவித்துவிட்டார். அந்த நேரத்தில், அவர் தனது குடும்பத்திலிருந்து பிரிந்து இருந்தார். அப்போது அவரது சகோதரரும் இறந்தார். அவரிடம் இப்போது பணம் எதுவும் இல்லை, அனைத்துக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் OFAC விதித்த தடை காரணமாக, அவர் மீண்டும் பணம் ஈட்டும் அனைத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மேலும் அவர், சட்டத்தை நம்பும் ஒரு சாதாரண குடிமகனின் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்”. என்று கூறினார்.

ரங்கோலி இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் லவ் பரத்வாஜைத் ​​தொடர்பு கொண்டபோது,​​ “2013 மற்றும் 2014 க்கு இடையில் நீங்கள் கேட்கும் 70 பரிவர்த்தனைகள் குறித்து எங்களிடம் எந்தப் பதிவும் இல்லை, எனவே இது குறித்து எதுவும் கூற முடியாது” என்றார்.

“நாங்கள் ஆடை வியாபாரம் செய்கிறோம். பொருட்களை விற்ற பிறகு எங்கள் கணக்குகளில் பணம் பெறுவது ஒரு வழக்கமான விஷயம். 18 ஜூன் 2014 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் நீங்கள் குறிப்பிடும் பரிவர்த்தனை குறித்த எந்தப் பதிவும் எங்களிடம் இல்லை. மஸாகா ஜெனரல் டிரேடிங் மற்றும் அல்தாஃப் கனானியுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை, எங்களுக்கு அவரைத் தெரியாது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

22 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:42 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »