வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 3 லட்ச ஆணுறைகளை சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 3 லட்ச ஆணுறைகளை சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3,20,000 ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு காவல் துறையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பழைய வடிவத்திற்கு கொண்டுவந்து மீண்டும் புதிதான ஒன்று போல பேக் செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

ஆணுறைகள்

இது தொடர்பாக வெளியான காணொளியில் வியட்நாமின் வட பின் டுஆங் மாகாணத்தில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையில் 360 கிலோ எடை கொண்ட பல பைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் இருந்தன.

இந்த கிடங்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ ஆணுறைகளுக்கு 0.17 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற பயன்படுத்தப்பட்ட எத்தனை ஆணுறைகள் ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிய வரவில்லை.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

எஸ்பிபி

திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வியாழக்கிழமை மாலை அறிவித்த பிறகு அவரது உறவினர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்து எஸ்.பி.பியின் குடும்பத்தினரை நடிகர் கமல் ஹாசன் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.பி.பி நலமுடன் இருக்கிறார் என சொல்ல முடியாது, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று மட்டுமே கூற முடியும் என்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

புதுச்சேரி வீட்டில் 74 தொன்மையான கோயில் சிலைகள்

புதுச்சேரி சிலைகள்

புதுச்சேரியில் ஒரே நபரிடம் இருந்து 74 தொன்மை வாய்ந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நகர்ப் பகுதியில் உள்ள ரோமன் ரொலான் வீதியில், தனி நபருக்குச் சொந்தமான வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புதுச்சேரியில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) சோதனை மேற்கொண்டனர்.

பிக் பாஸ் தமிழ் பருவம் 4 – அக்டோபர் 4 முதல் ஆரம்பம்

கமல்

பிக் பாஸ் பருவம் 4 வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மற்ற மூன்று பருவம்களை போலவே இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இது தொடர்பாக விண்மீன் விஜய் தொலைக்காட்சி அதன் டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனின் காணொளி இடம்பெற்ற விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்

டீன் ஜோன்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார்.

விண்மீன் விளையாட்டு தொலைக்காட்சியின் வர்ணனையாளர் குழுவில் இருந்த அவருக்கு 59 வயதாகிறது.

கிரிக்கெட் விமர்சகராக இருந்த டீன் ஜோன்ஸ், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருக்கு, யூ டியூப் வர்ணனையாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman