ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாலியல் வல்லுறவு கலாசாரம்: பாகிஸ்தான் பெண்களின் உரிமைக் குரல்
பெற்ற குழந்தைகள் கண் முன்னரே பாகிஸ்தான் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது நாடு முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலையில் அவர் சென்றிருக்கக் கூடாது என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியது எதிர்ப்பிற்கு உள்ளானது.
பாதிக்கப்பட்ட பெண்களே பழியும் சுமக்க வேண்டுமா என்று பாகிஸ்தான் பெண்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நள்ளிரவுக்கு மேல் எங்களுக்கு பாதுகாப்புக்கு இல்லையா என்று அவர்கள் கேட்கிறார்கள்.
சுதந்திரமாக இருக்கும் பெண்களை ஆணாதிக்க சமூகம் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது என்பது அவர்கள் கருத்து .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com