பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழுமையான முதலாவது தடுப்பூசியின் யாருக்கு முதலில் போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி அந்நாட்டின் அரசு ஊடகத்தில் பணியாற்றும் இருவருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஸ்பூட்னிக்-V தடுப்பூசி மருந்து தயாரிப்பு தலைமை விஞ்ஞாஞனி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி அந்த தடுப்பூசி மருந்து தயாரிப்பு, மூன்றாவது கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கிடையே, கொரோனா வைரஸால் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களுக்கு அந்நாடு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தவிர, சுமார் 400 பேருக்கு தனியாக பரிசோதனை நிலையிலான முழுமையான கட்டத்தை எட்டிய தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரசு ஊடக செய்தியாளர்கள் யார்?
ரஷ்ய அரசு நடத்தும் செய்தி முகமைகளான RIA ,VGTRK ஆகியவற்றில் உள்ள இரு செய்தியாளர்களுக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைதான் ரஷ்யா-1, ரஷ்யா-1 ஆகிய அரசு தொலைக்காட்சிகளை நிர்வகித்து வருகின்றன.
தன்னார்வ அடிப்படையில் அவற்றின் செய்தியாளர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளது.
எனினும் ஆர்ஐஏ நிறுவனம், தனது ஊழியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை வெளியிடவில்லை.
ஆர்ஐஏ, விஜிடிஆர்கே நிறுவனம் இரண்டும் மக்கள் விரும்பத்தக்கதுகோவில் உள்ளன.
அவற்றின் ஊழியர்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பாக, அனைவரும் ஆரம்பகால மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
ரஷ்ரயாவில் மிகவும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆபத்தை எதிர்கொள்ளும் பணியில் ஈடுபடுவோராக சுகாதார ஊழியர்கள், செய்தியாளர்கள், ஆசிரியர்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு ஒரு பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது. இதனால், அவர்கள் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திட்டத்துக்காக தன்னார்வலர்களாக பதிவு செய்து கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமது மகள்களில் ஒருவர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை மருந்தை போட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார். ஆனால், அது தொடர்பான கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை.
தொடக்கத்தில் ரஷ்யாவின் கொரோனா பரிசோதனை தடுப்பூசி மருந்தை பெற்றுக் கொள்ள பதிவுகள் வரவேற்கப்பட்டபோது 100க்கும் குறைவானவர்களே ஆர்வம் காட்டினர். ஆனால், பிறகு முதல் கட்ட பரிசோதனைகள் தொடங்கிய சில நாட்களிலேயே 40 ஆயிரம் பேர் வரை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளும் தன்னார்வலர்களாக விண்ணப்பித்தனர்.
ஸ்பூட்னிக்-V நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி மருந்து அந்நாட்டு மருந்துக கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை கமாலயா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையை நிறைவு செய்தால், இதுவே உலகின் முதலாவது முழுமையான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி மருந்தாக திகழும்.
உலக அளவில் கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க பலகட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் முழுமையான கட்டத்தை எட்டியதாகக் கூறி ரஷ்யா அதன் குடிமக்களில் பலருக்கு ஏற்கெனவே நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசியை போட்டுள்ளது. சீனாவும் முழுமையாக பரிசோதனை கட்டத்தை நிறைவுசெய்யும் முன்பாக, தமது குடிமக்களுக்கு பரிசோதனை நிலையிலான நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்தை போடத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நிலவரம்
India’s #COVID19 tally reaches 63,94,069 with a spike of 81,484 new cases & 1,095 deaths reported in last 24 hours.
The total cases include 9,42,217 active cases, 53,52,078 cured/discharged/migrated & 99,773 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/XxeMtrrlpa
— ANI (@ANI)
Twitter பதிவின் முடிவு, 1
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,94,069 ஆக பதிவாகியுள்ளது. இதில் ஆக்டிம் நோயாளிகள் எண்ணிக்கை 9,42,217 ஆக உள்ளது. இதுவரை 99,773 பேர் உயிரழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 484 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது என்றும் 1,005 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதார அமைச்சக தரவுகள் கூறுகின்றன.
தொடர்புடைய காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com