பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இவருக்கு முன்பு ஆட்சிக்காலத்தின் போதே தீவிரமான உடல்நலக் கோளாறுக்கு உள்ளான நான்கு அமெரிக்க அதிபர்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.
ஜார்ஜ் வாஷிங்டன் (1789 – 1797)

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் முதல் அதிபரான இவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. அமெரிக்காவில் வேடிக்கையாகச் சிலர் வாஷிங்டனுக்கு 9 உயிர் என்று கூறுவர். அதாவது அவருக்கு 9 உடல்நலக் கோளாறுகள் இருந்தன.
அவருக்கு காசநோய் இருந்தது, தீவிர வயிற்றுப்போக்கு இருந்தது. மலேரியாவால், நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். தொண்டை கட்டியால் அவதியுற்றார். அவர் முகத்தில் இரு வீக்கங்கள் இருந்தன, புற்றுநோய் என அனைவரும் நினைத்தனர். ஆனால், வேறொரு அழற்ச்சியில் பாதிக்கப்பட்டார் அவர்.
அதாவது அவர் பதவிக்காலம் முழுவதும் ஏதேனும் ஓர் உடல்நல கோளாறால் அவதியுற்றார் வாஷிங்டன்.
வூட்ரோ வில்சன் (1913 – 1921)
அமெரிக்காவின் 28வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வூட்ரோ வில்சன். கல்வியாளர் மற்றும் சீர்திருத்தவாதியான இவர், இரு முரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சொல்லப்போனால் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் இவர்தான்.
முதலாம் உலகப் போர் சமயத்தில் பாரீஸ் சென்று இருந்த இவர், ஸ்பேனிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டார்.
பாரீஸ் வந்து இறங்கியவுடன் அவருக்கு உடல் வெப்பம் அதிகரித்தது. அவரால் அமரவே முடியவில்லை. அவர் உடலுக்கு என்ன ஆகிறது என்பதை யாராலும் கூறமுடியவில்லை. அவருடைய மருத்துவ உதவியாளர் வில்சன் பாரீஸ் பருவநிலை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு பிறகு அவரது உடல்நிலை சீரானாலும், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகை இதுகுறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. அவருக்கு ஏதோவொரு உடல்நல சிக்கல் இருக்கிறது என மக்கள் கண்டுபிடித்தனர். ஆனால், குறிப்பாக இந்த சிக்கல்தான் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியவில்லை.
டுவைட் டி. ஐசனாவர் (1953 -1961)

பட மூலாதாரம், Getty Images
அதிபராக பதிவியேற்ற இரண்டு வருடங்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் ஐசனாவர்.
ஆனால், ஊடகங்களுக்குக் கொடுத்த முதல்கட்ட தகவல்களில் அவருக்கு செரிமான பிரச்சனை இருந்ததாகக் கூறியது வெள்ளை மாளிகை.
அவரது உடல்நிலை கருதி அவரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஐசனாவர் தன் உடல்நிலை குறித்த தகவளை வெளியே பெரிதாக பகிரவில்லை.
மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். வெல்லவும் செய்தார்.
1957இல் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்த போது ஐசனாவருக்கு பக்கவாதம் வந்தது. 1958 வரை அவர் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை.
ஆனால், எல்லா உடல் உபாதைகளையும் கடந்து பதிவிகாலம் முழுவதும் ஆட்சி செய்தார் அவர்.
ரொனால்ட் ரீகன் (1981 -1989)
டிரம்புக்கு முன்பு வரை, அதிக வயதுடைய அமெரிக்க அதிபராக இருந்தவர் ரொனால்ட் ரீகன்.
குடியரசு கட்சி தலைவரான இவருக்கு ஏராளமான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன. இதன் காரணமாக சிலர் இவர் அதிபராகவே இருக்க தகுதியற்றவர் என சிலர் கருதினர்.
புற்றுநோய் சார்ந்த பிரச்சனைகளுடன் இருந்தார்.
1985ஆம் ஆண்டு, அவருக்கு பெருங்குடலில் ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன.
1987ஆம் ஆண்டு மூக்கில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் திசு அகற்றப்பட்டது.
ஆனால், அவரது உடலை மிக மோசமாக பாதித்தது, கொலை முயற்சிதான்
1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரி கொல்ல முயற்சி நடந்தது. இதில்தான் அவர் மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக அவர் விரைவாக குணமானார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com