அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: கொரோனா தொற்று குறித்து டிரம்ப், ஜோ பைடன் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: கொரோனா தொற்று குறித்து டிரம்ப், ஜோ பைடன் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் விவாதம் தற்போது நடந்து வருகிறது.

விவாதத்தின் தொடக்க நிமிடங்களில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் பெரிதும் உணர்ச்சிகளை காட்டாமல் பேசினர்.

இரு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் பேச அனுமதித்தனர். இருவரும் மரியாதையான சொற்களை பேசினர்.

இதற்கு முந்தைய விவாதத்தில் ஜோ பைடனை பெரிதும் பேச விடாமல் இடை இடையில் பேசிக் கொண்டிருந்த டொனால் டிரம்ப் இந்த விவாத்தில் அமைதி காத்து பேசி வருகிறார்.

எனவே இந்த முறை அதிபர் போட்டிக்கான விவாதத்தில் மக்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் கூச்சல்போடுவதையல்ல என்ற முடிவில் இருக்கிறார்கள்.

கோவிட் – 19 குறித்த விவாதம்

இந்த விவாதத்தில் வெளிநாட்டு கொள்கை குறித்து அதிகம் பேசப்பட வேண்டும் என டிரம்ப் தரப்பு வலியுறுத்தியது ஆனால் இந்த விவாதத்தில் கோவிட் – 19 மையமாக வைத்து விவாதம் நடைபெற்று வருகிறது.

எனவே இதன்மூலம் அமெரிக்க மக்கள் அதிகம் அக்கறை கொண்டுள்ள ஒரு விஷயம் தொடர்பாக இந்த விவாதம் நடைபெற்று வருகிறது.

தேர்தல் எப்போது? யார் யார் வேட்பாளர்கள்?

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற இருக்கிறது.

பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.

அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒன்று அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப்தான், இந்த முறையும் இக்கட்சியின் அதிபர் வேட்பாளர்.

தாராளவாத கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராகப் பதவி வகித்தவர்.

இந்த இரு அதிபர் வேட்பாளர்களுமே 70 வயதைக் கடந்தவர்கள். டொனால்டு டிரம்புக்கு 74 வயது. ஜோ பைடன் இந்த முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபரபாக அவர் இருப்பார். அவருக்கு வயது 78.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman