கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு முழு ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு முழு ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்க அரசு முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்.டி.ஏ), கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளும் காலத்தை ரெம்டெசிவிர் சராசரியாக ஐந்து நாட்கள் குறைப்பது மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறுகிறது.

“கொரோனா சிகிச்சைக்கு எங்களது ஒப்புதல் பெறும் முதல் மருந்து வெக்லரி (ரெம்டெசிவரின் வர்த்தக பெயர்)” என்று எஃப்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

“12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தது 40 கிலோ உடல் எடை கொண்ட, மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இதை பயன்படுத்தலாம்.”

கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதில் ரெம்டெசிவிரின் பங்கு சிறிதளவு முதல் பூஜ்யம் வரை மட்டுமே உள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

தங்களது தனிப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக இதுகுறித்து தெரியவந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த கூற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலிட் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் அவசர தேவைகளுக்காக மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ரெம்டெசிவிர் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது

Presentational grey line

“எல்டிடிஈ தடை: ஆதாரம் காட்டும் இலங்கை, தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தலைவர்கள்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

Presentational grey line

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

21 அக்டோபர், 2020, பிற்பகல் 2:25 IST

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman