கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்து: அமெரிக்காவின் அனுமதிக்கு விண்ணப்பித்து இருக்கும் பிஃபிசர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்து: அமெரிக்காவின் அனுமதிக்கு விண்ணப்பித்து இருக்கும் பிஃபிசர்

அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி கேட்டு பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நேற்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை), விண்ணப்பித்து இருக்கின்றன.

இந்த மருந்தை பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பாதுகாப்பானது தானா? என்பதை தீர்மானிப்பது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (எஃப்.டி.ஏ) என்ற அமைப்பின் பணி.

இந்த எஃப்.டி.ஏ அமைப்பு, இந்த மருந்தைக் குறித்து முழுமையாக படிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மருந்தை, அமெரிக்க அரசு, வரும் டிசம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் அனுமதிக்கலாம்.

இந்த மருந்தின் மேம்பட்ட சோதனையில் இருந்து கிடைத்த தரவுகள், இந்த மருந்து, 65 வயதுக்கு மேற்பட்ட 94% பேரைப் பாதுகாக்கிறது எனக் காட்டுகின்றன.

பிரிட்டன், ஏற்கனவே இந்த மருந்தை 40 மில்லியன் டோஸ் முன் கூட்டி வாங்கியு இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் மருந்து வந்து சேரும்.

அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவையை, கடந்த வியாழக்கிழமை, கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையே வெளிப்படுத்துகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, ஒரே நாளில் 2,000 பேருக்கு மேல் இறந்து இருக்கிறார்கள்.

Vials of vaccine against the coronavirus

எப்போது கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்?

அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அனுமதி அடுத்த மாதம் முதல் பாதியில் வந்தால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராக இருக்கும் என, ப்ஃபிசர் நிறுவனத் தரப்பே சொல்லி இருக்கிறது.

ஜெனடிக் கோட் விவரிக்கப்பட்ட 10 மாதங்களில், ஒரு தடுப்பூசி விவகாரத்தில், இத்தனை வேகமான மேம்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக, அமெரிக்காவில் ஒரு தடுப்பு மருந்து அனுமதிக்கப்பட 8 ஆண்டுகள் ஆகலாம்.

கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பிப்பது, உலகுக்கு, கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என, பிஃபிசர் சி.இ.ஓ ஆல்பர் போர்லா சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மருந்துகள் பற்றாக்குறை இருக்கலாம், இருப்பினும், அமெரிக்காவின் சிடிசிபி அமைப்பினர்தான், யாருக்கு முதலில் மருந்து கொடுக்க வேண்டும் என தீர்மானிப்பார்கள்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்து

இந்த ஆண்டுக்குள், ஐரோப்பிய ஒன்றியம் வேகமாக செயல்படலாம் என, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சில எச்சரிக்கைகள் உள்ளன என்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் மருந்தகவியல் நோயியல் பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ் சொல்கிறார். எஃப்.டி.ஏ மற்றும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) என இரண்டு அமைப்பும் “மிகவும் கவனமாக கொரோனா தடுப்பு மருந்தை மதிப்பீடு செய்யும்” என்கிறார்.

பிபிசி சுகாதார நிருபர் நவோமி கிரிம்லி கூறுகையில், இந்த தடுப்பூசி இன்னும் பரவலான பயன்பாட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஏனெனில் இது முன்னர் அங்கீகரிக்கப்படாத ஒரு சோதனை தொழில்நுட்பத்தின் அடிப்படையை பின்பற்றுகிறது என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman