Press "Enter" to skip to content

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு: அரசி மீதான அவரது தளராத விசுவாசம் கொண்டாடப்படும்

பட மூலாதாரம், Getty Images

எடின்பரோ கோமகன் ஃபிலிப்புக்கு அரசியிடம் இருந்த அசைக்கமுடியாத விசுவாசம், அவர் நாட்டுக்கு செய்த சேவை, அவரது தைரியம் போன்றவை அவரது இறுதிச் சடங்கின்போது கொண்டாடப்படும்.

கோமகன் ஃபிலிப்புக்கு பிரிட்டனின் ராயல் கப்பற்படையோடு இருந்த உறவு, கடலோடு இருந்த காதல்தான் வின்சர் கோட்டையில் நடக்கவிருக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் மையக் கருவாக இருக்கும்

இளவரசரின் விருப்பப்படி, எந்த பிரசங்கமும் நடக்காது.

மாட்சிமை பொருந்திய இளவரசரின் இறுதிச் சடங்கில் 730-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின் படி புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்த 30 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

இளவரசரின் இறுதிச் சடங்கு நிகழ்ந்ச்சி பிபிசி ஒன்-னில் ஒளிபரப்பாகும். பிரிட்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பு தொடங்கும். பிரிட்டன் நேரப்படி மாலை 3.00 மணிக்கு, இளவரசர் காலமானதற்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும்.

இளவரசர் ஃபிலிப் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி, தன் 99-வது வயதில் வின்சர் கோட்டையில் காலமானார்.

வின்சர் கோட்டையின் ‘ஸ்டேட் என்ட்ரன்ஸ்’ என்றழைக்கப்படும் நுழைவாயிலில் வைக்கப்படுவதற்கு முன், அவரது உடல் வின்சர் கோட்டையில் உள்ள தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இளவரசரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சவப் பெட்டி, மாற்றியமைக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் காரில் வைக்கப்பட்டு புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படும். அந்த தேரை வடிவமைக்க இளவரசரே உதவினார்.

கன்டர்பரி பேராயரின் ஆசிர்வாதத்தோடு, அவரது இறுதிச் சடங்கு சேவைகளை வின்சரின் மதகுரு நடத்தி வைப்பார்.

வின்சரின் மதகுரு, இளவரசர் ஃபிலிப்பின் “இரக்க குணம், நகைச்சுவை உணர்வு, மனிதாபிமானம்” போன்றவைகளை நினைவு கூர்ந்தும், “பல வழிகளில் அவரது நீண்ட வாழ்கை நமக்கு ஆசிர்வாதமாக இருந்திருக்கிறது” என்று அஞ்சலி செலுத்துவார் என பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள வாங்குதல் ஆஃப் சர்வீசில் கூறப்பட்டுள்ளது.

“அரசியாரிடம் இளவரசருக்கு இருந்த அசைக்கமுடியாத வாய்மை தவறாத விசுவாசம் நம்மை ஊக்கமடையச் செய்கிறது. அவரது தைரியத்தாலும், வலிமை மற்றும் நம்பிக்கையாலும் அவர் இந்த நாட்டுக்கும், காமன்வெல்த் நாடுகளுக்கும் செய்த சேவைகள் நம்மை ஈர்க்கின்றன” என வின்சர் மதகுரு இறுதி அஞ்சலியின் போது கூறுவார்.

பொதுசுகாதார விதிகளை கவனத்தில் கொண்டு

இளவரசரின் இறுதி அஞ்சலித் திட்டங்கள் பொது சுகாதார விதிமுறைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன என பக்கிங்காம் அரண்மனை கூறியுள்ளது.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அனைத்தும் கோட்டைக்குள்ளேயே நடைபெறும். எனவே மக்கள் கோட்டையிலோ அல்லது மற்ற அரச குடும்ப வீடுகளின் முன்போ கூட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கெடுப்பவர்கள் முழுமையாக முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியோடு பங்கேற்பார்கள். அரசி தனியே அமர்ந்திருப்பார்.

இளவரசர் ஃபிலிப்பின் விருப்பப்படி, அவரது இறுதிச் சடங்குகள் நடக்கும். அவருக்கு ராணுவத்தோடு இருந்த தொடர்பு மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்கைக் கூறுகள், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வில் பிரதிபலிப்பதாக இருக்கும்.

1860-ம் ஆண்டு வில்லியம் விட்டிங் என்பவரால் எழுதப்பட்ட ‘Eternal Father, Strong to Save’ என்கிற பாடல் இசைக்கப்படும். இப்பாடல் கடல் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் கப்பற்படையில் இருப்பவர்களோடு தொடர்புடையது.

இளவரசர் ஃபிலிப் மற்றும் அரசியார்

பட மூலாதாரம், The Countess of Wessex

இளவரசருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடக்கவிருக்கும் இந்த நேரத்தில், அபர்தின்ஷரில் அரசியும் இளவரசரும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் அரசி.

அரசியின் பால்மோரல் எஸ்டேட்டுக்கு அருகில் இருக்கும் ‘கோயல் ஆஃப் மியூக் பியூட்டி’ என்கிற இடத்தில், அரசியும், இளவரசரும் புல்வெளியில் ஓய்வாக இருப்பது போல அமர்ந்திருக்கும் அப்படத்தை வெஸ்ஸெக்ஸ் கோமகள் 2003-ம் ஆண்டு எடுத்தார்.

யார் பங்கேற்பார்கள்?

இளவரசரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவிருக்கும் 30 விருந்தினர்களும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் விதத்தில் கோட் மற்றும் அவரது பதக்கங்களை அணிந்து கொள்வர் அல்லது பகல் நேரத்தில் அணியும் எளிமையான ஆடையை அணிந்து கொள்வர். ராணுவ உடையை அணிய மாட்டார்கள்.

கோமகன் ஃபிலிப் மற்றும் அரசியின் நான்கு குழந்தைகளான வேல்ஸ் இளவரசர், ராயல் இளவரசி, யார்க் கோமகன், வெஸ்ஸெக்ஸ் ஏர்ல் மற்றும் அவரது எட்டு பேரக் குழந்தைகள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அவர்களது கொள்ளுப் பேரன் பேத்திகள் இதில் பங்கெடுக்கப் போவதில்லை.

இளவரசர் ஃபிலிப்பின் குழந்தைகள் மற்றும் அவரது பேரக் குழந்தைகளின் மனைவிமார்கள் மற்றும் கணவன்மார்கள், இறுதிச் சடங்கில் பங்கெடுக்கவிருக்கிறார்கள். இதில் கடந்த சில ஆண்டுகளில் குடும்பத்துக்குள் திருமணம் செய்து கொண்ட ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் மற்றும் எடொர்டோ மாபெலி மோசி மற்றும் இளவரசி யூஜின் மற்றும் பிட்ரைசின் கணவர்களும் அடக்கம்.

ஆனால், சஸ்ஸெக்ஸ் கோமகனின் மனைவி கர்பமாக இருக்கிறார். அவரை விமான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

அரசியின் சகோதரி, இளவரசி மார்கரெட், இளவரசர் ஃபிலிப்பின் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மூன்று உறவினர்களான பெர்ன்ஹார்ட் (பாடனின் இளவரசர்), டொனடஸ் (ஹெஸ்ஸேவின் இளவரசர்), ஃபிலிப் (ஹோஹென்லோஹேவின் இளவசர்) ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இளவரசர் எட்வர்ட்

பட மூலாதாரம், Reuters

இளவரசரின் இறுதிச் சடங்குக்குத் தேவையான விஷயங்கள் தயாராக இருக்கும் நிலையில், சோஃபி, இளவசர் எட்வர்ட் மற்றும் அவரது மகள் லூயிஸ், வின்சர் கோட்டையின் தேவாலயத்துக்கு வெளியே, இளவரசர் ஃபிலிப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பொது மக்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் வைத்திருக்கும் பூங்கொத்துகளைப் பார்வையிட்டனர்.

இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) இளவரசர் ஃபிலிப்போடு பிரத்யேக தொடர்புடைய ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், தேவாலயத்தின் நாற்புறங்களிலும் நிறுத்தப்படுவார்கள். தி பேண்ட் ஆஃப் ராயல் மரின்ஸ் கமாண்டோ பயிற்சி மையம், தி பேண்ட் ஆஃப் தி ஸ்காட் கார்ட்ஸ், தி கம்பைண்ட் பேண்ட்ஸ் ஆப் தி ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகிய குழுக்கள் இளவரசரின் இறுதிச் சடங்கில் வாசிக்க இருக்கின்றன.

கோட்டையில் இருந்து, தேவாலயத்துக்கு வரும் வழியிலான ஊர்வலத்தை, கிரனடியர் கார்ட்ஸ், மேஜர் ஜெனரலின் பார்டி மற்றும் ராணுவப் படைத் தலைவர்கள் தலைமை தாங்கி வழிநடத்துவார்கள்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், இளவரசர் ஃபிலிப் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை பின் தொடர்வார்கள். முன் வரிசையில் இளவரசி அனே மற்றும் பிரின்ஸ் சார்ல்ஸ் இருப்பார்கள். அவர்களைத் தொடர்ந்து இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூவ் வருவார்கள்.

மூன்றாவது வரிசையில் கேம்பிரிட்ஜ் கோமகன், இளவரசர் ஹாரி, ஃபிலிப்பின் சகோதரர் பீட்டர், ஃபிலிப்ஸின் இரு புறங்களிலும் பின் தொடர்வார்கள்.

துணை அட்மிரல் சர் டிமோதி லாரன்ஸ் மற்றும் ஏர்ல் ஆஃப் ஸ்னோடன் அடுத்த வரிசையில் வருவார்கள். அவர்களைத் தொடர்ந்து, கோமகன் ஃபிலிப்பின் வீட்டில் பணியாற்றியவர்கள் வருவர்.

அரசி, ஒரு பெண் உதவியாளருடன் அரசின் பென்ட்லி காரில் ஊர்வலத்தின் இறுதியில் வருவார்.

ஊர்வலம் புனித ஜார்ஜ் தேவாலயத்தை அடைந்த பின், ராயல் மரின்ஸ் பேரர் பார்ட்டி, இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியைச் சுமந்து கொண்டு தேவாலயத்துக்குள் செல்லும்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

பட மூலாதாரம், Getty Images

இறுதிச் சடங்குகள் எல்லாம் நிறைவடைந்து, கோமகன் ஃபிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்படும் போது, ராயல் மரின்ஸைச் சேர்ந்த பக்லர்கள் ‘ஆக்‌ஷன் நிலையம்’ ஒலி எழுப்புவார்கள். எல்லா கைகளும் எப்போதும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

பிரிட்டன் மற்றும் கிப்ரால்டர் உட்பட 9 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஒரு நிமிட தேசிய மெளன அஞ்சலி தொடங்கப்பட்டு, மற்றொரு முறை குண்டுகள் முழங்க நிறைவு செய்யப்படும்.

தேசிய மெளன அஞ்சலியை பிரதிபலிக்கும் விதத்தில், ஹீத்ரூவ் விமான நிலையத்தில் ஆறு நிமிடங்களுக்கு எந்த விமானமும் புறப்படாது, தரையிறங்காது எனக் கூறியுள்ளது அவ்விமான நிலையம்.

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை ஒட்டி, அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »