Press "Enter" to skip to content

பாகிஸ்தான் நடிகையின் நேரலையில் பாலியல் சீண்டல்: விஷம நபரின் திடீர் செயலால் சர்ச்சை

பட மூலாதாரம், INSTAGRAMHANIAHEHEOFFICIAL

“பெண்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த உலகில் அவர்களின் செயல்பாட்டை மதிப்பிடுவதில் இரட்டை நிலை தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கே மற்றவர்களின் கருத்து மதிக்கப்படுவதில்லை. ஒரு பெண்ணை வெறுக்கும் ஒரு ஆண் பாராட்டப்படுகிறான், ஆனால் அதையே ஒரு பெண் செய்தால், அது வெறுக்கப்படுகிறது. ஒரு பெண் காதலிப்பதோ தனது அன்புக்குரியவர்களுடன் பேசுவதோ கூட தவறாகக் கருதப்படும் இச்சமூகத்தில், ஒரு பெண்ணின் படத்திற்கு முன்னால் ஒரு மனிதன் சுயஇன்பத்தில் ஈடுபடும் காணொளி இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.”

இவை பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் கூறிய வார்த்தைகள். இதை அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளிவில், ஹனியா தனது சகோதரியுடன் மிகவும் சோகமான நிலையில் பேசிக்கொண்டே இடையிடையே கண்ணீரைத் துடைத்துக் கொள்வதைக் காணலாம்.

ஆனால் எப்போதும் குதூகலமாக, ‘ஃபன்னி ஸ்டோரி’ என்று பதிவிடும் ஹானியா துக்கத்துடன் இப்படிச் சொல்லும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது?

இரண்டு காணொளி விவகாரம்

ஹனியா ஆமிர்

பட மூலாதாரம், INSTAGRAMHANIAHEHEOFFICIAL

கடந்த வெள்ளிக்கிழமை, ஹானியாவின் ஒரு காணொளி வெளி வந்தது, அதில் ஹானியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அதே நேரலையில், ஒரு ரசிகர் ஹானியாவின் படத்தை வைத்துக் கொண்டு சுயஇன்பம் அடைந்ததைப் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹானியா, தனது நேரலை காணொளி வழங்கலை நிறுத்தினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, யாரோ ஒருவர் இந்த நேரலையின் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், இது கடந்த 24 மணி நேரமாக மிகுதியாக பகிரப்பட்டுிக் கொண்டிருக்கிறது.

இந்த காணொளியின் உண்மைத் தன்மையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. தவிர, சில பயனர்கள் இந்த காணொளி போலியானது என்றும் திரிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இந்த விவகாரம் இந்த காணொளிவைப் பற்றியது மட்டுமல்ல. இதில் இன்னொரு காணொளியும் சம்பந்தப்பட்டுள்ளது. ஹானியாவின் மற்றொரு காணொளியும் சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுியிருக்கிறது.

அதில் அவர் இயக்குநர் வஜாஹத் ரவூப்பின் மகன்களான ஆஷிர் வஜாஹத், நாயல் வஜாஹத் ஆகியோருடன் பாடகர் ஹசன் ரஹீமின் பாடலான ‘தேரி அர்சூ’ பாடலைப் பாடிக்கொண்டே அவரைக் கட்டிப்பிடிப்பது பதிவாகியிருக்கிறது.

இயக்குநர் வஜாஹத்தின் மகன்களையும் அவரது மனைவியையும் தனது குடும்பத்தின் ஒரு பகுதியாக கருதுவதாக ஹானியா அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

நேரடி அமர்வில் ஹனியா அமீரின் பாலியல் துன்புறுத்தலை பெரும்பாலான பயனர்கள் கண்டித்துள்ள நிலையில், பல பயனர்கள் ஹனியாவை ‘வெட்கமில்லாமல், ஆபாசமாக நடப்பதாக வஜாஹத் ரவூப்பின் மகன்களுடன் வெளியான காணொளியைக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த இரண்டு காணொளிகளால், கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் பேசு பொருளாக ஹானியா மாறியுள்ளார்.

“நாம் எவ்வளவு செயலற்றவர்களாகி விட்டோம்?”

ட்விட்

பட மூலாதாரம், @TSUKINAG4S

பாகிஸ்தானிய சமுதாயத்தின் இந்த இரட்டை நிலையப் பற்றிச் சில பயனர்கள் விவாதித்து வருகின்றனர். ஹானியா வஜாஹத் ரவூப்பின் மகன்களைக் கட்டிப்பிடிக்கும் காணொளியை விமர்சிப்பது போல அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விமர்சனம் எழவில்லை என்பது தான் வேதனை.

இது சம்பந்தமாக, காலித் என்ற பயனர், “அவமானம் மற்றும் வெட்கம் காரணமாக, யாரும் இதைப் பற்றி பேசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இதே நபர்கள் மலாலா யூசுப்சாய்க்கு அவர் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்,” என எழுதியுள்ளார்.

ஹனியாவின் இரண்டு காணொளிகள் குறித்தும் பின்னூட்டம் எழுதிய ஹுதா இஸ்மாயில், “ஹானியாவுக்குத் தன் விருப்பப்படி வாழ உரிமை உண்டு. ஆனால் அவளுக்கு நேர்ந்த மன உளைச்சல் குறித்து யாரும் ஏன் பேசவில்லை? எந்தவொரு பெண்ணையும் இவ்வளவு ரசிகர்களின் முன்னால் துன்புறுத்திப் பார்ப்பது சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்

பட மூலாதாரம், @HIDAYATDENEWALI

சித்திகா கருத்து தெரிவிக்கையில், “இந்த மக்கள் குறித்து வருத்தம் ஏற்படுகிறது. ஹானியா ஆமிரின் நேரலையில் நடந்தது, தனது ரசிகர்களை நேரலையில் சேர அனுமதிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாகும். அவர்கள் பொது வாழ்வில் இருந்தாலும், அவர்களை அவமதிக்க உங்களுக்கு உரிமை இல்லை. இதிலிருந்து உங்கள் ஒழுக்கம் மற்றும் விழுமியம் பற்றி நன்கு தெரிகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

டேனிஷ் ஹசன், “ஹானியாவுக்கு நடந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்படியிருக்க, ஹானியா மீதே குற்றம் சாட்டப்பட்டு அவரை எள்ளி நகையாடுகிறார்கள்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஷேக் என்ற பயனர், “நாம் எவ்வளவு செயலற்றுப் போய்விட்டோம்? பாவம் அந்தப் பெண்ணின் சிரிப்பு ஒரு நொடியில் மறைந்தது. அவர் நேரலையை நிறுத்தினார். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இப்போது இந்த மக்களின் நல்வழிக்காகப் பிரார்த்தனை செய்யக் கூட எனக்கு மனம் வரவில்லை.” என கருத்து தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நேரலையில் தனது வக்கிரத்தை வெளிப்படுத்திய அந்த ரசிகனைத் தேடிப் பிடித்து, அவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.

பல பயனர்கள் சமூக ஊடகக் கேலிகளின் உளவியல் விளைவுகள் பற்றி பேசுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் கேலியும் கிண்டலும் ஒருவரின் உயிரைக் கூட எடுக்கக்கூடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என சிலர் எச்சரிக்கிறார்கள்.

மலாய்க்கா என்ற பயனர் இது தொடர்பாக ஒரு பதிவுத் தொடரை வெளியிட்டார். அதில் அவர் ஹானியாவிற்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தார், மேலும் அவரை கேலி செய்தவர்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

அவர், “இதில் ஹானியாவின் தவறு தான் என்ன? இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் கொடுமை. ஹானியா அனுபவிக்கும் மன வேதனையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒரு பெண்ணாக அவருக்கு நேர்ந்தது மிக மோசமான முன்னுதாரணம்.” என குறிப்பிடுகிறார்.

“நாம் எப்போதும் இப்படித் தான் செய்கிறோம். பிறகு எதுவுமே செய்யாதது போல் இருக்கிறோம். ஒரு சமூகமாக நாம் தோல்வியடைந்து விட்டோம். ஒரு நபரை மிகவும் மோசமாக விமர்சிக்கிறோம். மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால் நாம் எதுவுமே நடக்காதது போலப் பாசாங்கு செய்கிறோம்”.

ஹானியா மீதும் விமர்சனம்

ட்விட்

பட மூலாதாரம், @SPEENKHEL

ஹானியா ஆமிர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார். ஏதோ ஒரு வகையில் எப்போதும் பேசுபொருளாக இருந்து கொண்டே இருக்கிறார்.

இதை சுட்டிக்காட்டி, சானியா குல்சார் என்ற பயனர் கருத்து தெரிவிக்கையில், “நீங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும்போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. உங்கள் வாழ்க்கையை எவ்வளவு அதிகமாகப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் விமர்சிக்கப்படுவீர்கள், எனவே மக்களிடமிருந்து அனுதாபத்தைத் தேடுவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் சில விதிமுறைகள் மற்றும் ஒழுங்கைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

யெஸ்ரா என்ற பயனரும் இதே போன்ற கருத்தைப் பகிர்ந்துள்ளார். “நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் நன்மையே. சமூக ஊடகங்களில் பதிவிடாமலே கூட நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ளலாம்… எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் பகிரத் தேவையில்லை.” என அவர் எழுதியுள்ளார்.

பல பயனர்கள் ஹானியா தனது நண்பர்களுடன் வேடிக்கையாகப் பெரும்பாலும் ஃபன்னி காணொளிக்களைப் பதிவிடுகிறார். ஆனால் விமர்சகர்கள் அவரை அவமானப்படுத்தவும் வேதனைப்படுத்தவும் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நழுவ விடுவதில்லை.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஹானியா தனது ரசிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் கொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

“பிரபலமாக இருப்பதால் நாங்கள் பொதுச் சொத்து என்று அர்த்தமல்ல, ரசிகர்கள் என்ற போர்வையில் ஆண்கள் எங்களைத் துன்புறுத்தலாம் என்றும் அர்த்தமல்ல என நடிகை குறிப்பிட்டிருந்தார். இதுபோன்றவர்களை ரசிகர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? அவர்கள் எங்களை அன்புக்குப் பதிலாக, பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள், எங்களுக்கு சங்கடம், வலி மற்றும் மன வேதனையை ஏற்படுத்துகிறார்கள்’ என அவர் கூறியிருந்தார்.

ஹானியா ஆமிர், சமூக ஊடகங்களில் ஏன் பயணிக்கிறார்?

ஹனியா ஆமிர்

பட மூலாதாரம், INSTAGRAMHANIAHEHEOFFICIAL

ஒரு நாள் முன்னதாகத் தான் ஹானியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் ஏன் சமூக ஊடகங்களில் பயணிக்கிறேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.

“எனது வாழ்க்கையில் நடந்த சின்னச் சின்ன விஷயங்களை நான் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறேன், சிலருக்கு அது பிடித்திருக்கிறது. சிலர் நான் அப்படிச் செய்யக்கூடாது என நினைக்கிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.

தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இப்படித் தனது தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்வதாக அவர் கூறினார்.

“நான் மகிழ்ச்சியைப் பரப்புவதற்காக இங்கு வந்துள்ளேன், கனிவான, அன்பான ஒரு பெண், தன்னுடைய அர்த்தமுள்ள உரையாடல்களால் உங்கள் இதயங்களைத் தொட்டாள் என்ற வகையில் என்னை நினைவு கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.” என்று ஹானியா குறிப்பிட்டுள்ளார்.

“தனது வாழ்க்கையில் உள்ள சவால்களைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்க முயன்ற ஒரு பெண்ணாக என்னை நினைவில் கொள்ளுங்கள்.” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »