Press "Enter" to skip to content

தாலிபன் Vs அமெரிக்கா: ஆப்கானிஸ்தானை மாற்றிய 20 ஆண்டு யுத்தம் – நடந்தவை என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தாலிபன்களைத் தோற்கடிக்கத் தான் அப்படைகள் வந்தன. அவர்களை முழுமையாக வெல்ல முடியவில்லை.

இப்போது அதே தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த தாலிபன்கள் மற்றும் அமெரிக்க நேட்டோ படைகளுக்கு மத்தியிலான போர் ஆப்கானிஸ்தானை எப்படி மாற்றி இருக்கிறது.

தாலிபன்களின் நிலை என்ன?

தாலிபன்களின் நிலை என்ன?

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து வந்து, அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த தாலிபன்களை அப்புறப்படுத்தியது. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல், புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர். போர் ஆண்டுக்குக் கணக்கில் நீண்டது. தாலிபன்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தினர். அதிக படைகள் குவிக்கப்பட்டன. இருப்பினும் மேற்குலகப் படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

தற்போது அமெரிக்க படைகள் முழுமையாக பின்வாங்கப்படுவதால், தாலிபன்கள், பல்வேறு மாவட்டங்களை தங்கள் வசமாக்கி வருகின்றன. தாங்கள் கைப்பற்றும் பகுதிகளில் மீண்டும் கடுமையான இஸ்லாமிய ஷரியத் சட்ட திட்டங்களை அமல்படுத்துகிறார்கள் தாலிபன்கள்.

பிபிசியின் ஆப்கன் சேவை ஜூலை 12ஆம் தேதி நிலவரப்படி கீழே கொடுத்திருக்கும் வரைபடம் வரையப்பட்டு இருக்கிறது.

மேலே இருக்கும் வரைபடத்தில் contested என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளில், அப்பகுதிகளைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அம்மாவட்டங்களில் தாலிபன்களின் கை ஓங்கி இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் எல்லோரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தாலிபன்கள் அதிவேகமாக முன்னேறி வருகிறார்கள், பல இடங்களை கைப்பற்றி வருகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தாலிபன்கள் வசம் இருப்பதாக கருதப்படுகிறது.

எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்?

எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்?

இரண்டு தசாப்தங்களாக நடந்த போரில், தாலிபன்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் என ஆயிரக் கணக்கான போராளிகள் இறந்திருக்கிறார்கள்.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இறந்திருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நடந்த சண்டையில் அப்பாவி மக்களும் ஆயிரக் கணக்கில் இறந்திருக்கிறார்கள்.

2021ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிகை, கடந்த ஆண்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு ஐ இ டி என்கிற வெடி பொருள் மற்றும் இலக்கு வைத்து கொல்லப்பட்ட சம்ப்வங்கள் தான் காரணம் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களில் 43 சதவீதத்தினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை

இடம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் 21ஆம் நூற்றாண்டில் இதுவரை நடந்த போர்களால், லட்சக் கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டையும் வீட்டையும் விட்டு, மற்ற நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ளனர் அல்லது தஞ்சம் புகுந்துள்ளனர்.

இன்னும் பலரோ ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள்ளேயே வீடின்றி இடம் மாற்றப்பட்டுள்ளனர். பல லட்சக் கணக்கானோர் மிக கடினமான சூழலையும், பசி பட்டினியை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு 4,00,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். 2012ஆம் ஆண்டு முதல் சுமார் 50 லட்சம் பேர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களால் மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் முகமையின் கணக்குப் படி, உலகிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இடம்பெயர்ந்த மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேறு ஆப்கானிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நெருக்கடிக்கு நிகரான உணவு பாதுகாபின்மையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் அலுவலகம் கூறுகிறது.

பெண்கள் கல்வி

பெண்கள் கல்வி

தாலிபன்களின் ஆட்சி வீழ்ந்ததால் பெண்கள் உரிமைகள் மற்றும் பெண்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருந்தது. 1999ஆம் ஆண்டில் ஒரு பெண் கூட மேனிலைப் பள்ளியில் படிக்கவில்லை. 9,000 பெண்கள் தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார்கள்.

2003ஆம் ஆண்டில் 24 லட்சம் பெண்கள் பள்ளியில் படித்து வந்தார்கள். தற்போது 35 லட்சம் பெண்கள் படித்து வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருக்கிறார்.

இருப்பினும், இன்னும் 37 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை, அதில் 60 சதவீதத்தினர் பெண்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர், போதுமான கற்பிக்கும் வசதிகள் இல்லாமை, ஆசிரியைகள் இல்லாதது போன்றவைகளை காரணமாகக் கூறுகிறது யுனிசெஃப்.

பெண்களின் கல்வியை தாங்கள் எதிர்ப்பதில்லை எனக் கூறுகிறது தாலிபன் அமைப்பு. ஆனால் எதார்த்தத்தில், வெகுசில தாலிபன் அதிகாரிகள் தான், பெண்கள் பருவமெய்திய பிறகும் அவர்களை பள்ளிக்கு அனுப்பு அனுமதிக்கிறார்கள் என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள்.

பெண்களுக்கான வாய்ப்பு

பெண்கள் அரசியல் பதவிகளை வகிப்பது, வியாபாரம் செய்வது போன்றவைகள் தாலிபன்களின் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டவை. கடந்த 2019ஆம் ஆண்டில் 1,000 ஆப்கன் பெண்கள் தங்களின் சொந்த வியாபாரங்களைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கீழவையில் குறைந்தபட்சமாக 27 சதவீத இடங்களிலாவது இருக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. தற்போது அதை விட கொஞ்சம் கூடுதலாக 249-ல் 69 இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் என்ன செய்கிறார்கள்?

ஆப்கானிஸ்தானில் பெண்கள் என்ன செய்கிறார்கள்?

வேறு எப்படி எல்லாம் ஆப்கனில் வாழ்கை மாறி இருக்கிறது?

ஆப்கன் முழுக்க உட்கட்டமைப்பு வசதிகளில் பிரச்சனைகள் இருப்பினும், கைபேசிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜனவரி 2021 நிலவரப்படி 86 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். கைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லட்சக் கணக்கானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆப்கனில் இணையம்

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் படி, அவ்வப்போது ஏற்படும் கைபேசி சேவை துண்டிப்புகள், ஆப்கானின் தொலைத் தொடர்பு சேவைகளை பாதிப்பதாகக் கூறுகிறது.

பல ஆப்கானியர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், ஆப்கன் இளைஞர்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது வங்கிகள்.

ஆப்கனில் வங்கிக் கணக்கு

ஆப்கானின் தலைநகரான காபூலின் மலைப்பகுதிகளில் பாரம்பரிய அடாப் ஹவுஸ் என்றழைக்கப்படும் வீடுகள் இருக்க, நகர்புறத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் காணப்படுகின்றன.

தாலிபன்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிராம புறத்தில் இருந்த மக்கள் நகர்புறத்துக்கு குடியேறியது மற்றும் 1990-களில் நாட்டைவிட்டுச் சென்றவர்கள் மீண்டும் காபூலில் குடியேறத் தொடங்கியது போன்ற காரணங்களால் காபூல் நகரம் அதிவேகமாக நகர்மயமானது.

ஒபியம்

ஆப்கனில் போதை வஸ்துக்கள்

இன்றுவரை உலகிலேயே ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவிலான ஒபியம் தயாரிக்கப்படுகிறது. பிரிட்டனுக்கு வரும் 95 சதவீத ஹெராயின்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வருவதாகக் கூறுகிறது ஒரு பிரிட்டனின் அதிகாரபூர்வ மதிப்பீடு.

இது போன்ற போதை வஸ்துக்கள் பயிரிடுவதில் இருந்து, ஆப்கனின் 34 மாகாணங்களில் 12 மட்டுமே சிக்காமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் தரவுகள் கூறுகின்றன. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படும் போதை வஸ்துக்களின் அளவு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

தாலிபன் அமைப்பு 2001ஆம் ஆண்டு போதை வஸ்துக்களை பயிரிட குறுகிய காலத்துக்கு தடை விதித்தது. அதன் பிறகு, இந்த வியாபாரம் பல மில்லியன் டாலர் வியாபாரமாக உருவெடுத்தது. போதை வஸ்துக்களைப் பயிரிடுபவர்கள் ஈட்டும் லாபத்தில், போராளிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என அடிக்கடி கட்டாயப்படுத்தப்பட்டது

அரசியல் நிலையற்ற தன்மை, பாதுகாப்பின்மை, குறைவான வேலைவாய்ப்பு போன்றவைகள், போதை வஸ்துகள் பயிரிடுதலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »