Press "Enter" to skip to content

ஐஎஸ் உறுப்பினர்களின் திறன்பேசிகளில் என்ன உள்ளது? அறியப்படாத தகவல்கள்

  • மொபீன் அசார்
  • பிபிசி 3, ரியல் லைஃப்

பட மூலாதாரம், BBC/MENTORN MEDIA

சிரியாவில் ஐ.எஸ். குழுவில் சேர்ந்து போரிடச் சென்ற மூன்று பிரிட்டிஷ் நபர்களின் திறன்பேசி, அவர்களின் சமூக ஊடக கணக்குகளுக்குள் நுழைந்து பார்க்கும் வாய்ப்பு ‘பிபிசி 3’ செய்தியாளர் மொபீன் அசாருக்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்து, அந்த நபர்கள் ஐஎஸ் குழுவில் சேர எவ்வாறு தூண்டப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன ஆனது? என்பதை புலனாய்வு செய்யத் தொடங்கினார் அசார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 9,000 பேர், ஐஎஸ் மற்றும் அது போன்ற ஆயுதமேந்தும் குழுக்களில் இணைய தாயகத்தை விட்டுச் சென்றதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழு, சுமார் 14 பேரின் மரணத்துக்கு பொறுப்பாகியுள்ளது.

கணக்கிடப்படாத பிரிட்டிஷ் ஐ.எஸ் குழுவினரின் கதி இன்று என்னவென்றே தெரியவில்லை.

சிரியாவில் நடந்த ஐஎஸ் குழுவினரின் போருக்குப் பிறகு, தி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் மத்திய கிழக்கு செய்தியாளர் லூயிஸ் கலகனுக்கு ஒரு ஹார்ட் டிரைவ் கிடைத்தது. அதில் ஒரு ஸ்மார்ட்ஃபோனின் விவரங்கள் இருந்தன.

அதிலுள்ள விவரங்கள் ஐஎஸ் குழுவில் இணைந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களின் வாழ்கை எப்படி இருந்தது என்பதை பிரதிபலிக்கின்றன.

சோக்ரி எலெக்லிஃபி

சோக்ரி எலெக்லிஃபி

பட மூலாதாரம், BBC/MENTORN MEDIA

இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனின் எட்ஜ்வேர் சாலை பகுதியில் வளர்ந்தவர். ஐஎஸ் குழுவில் இணைவதற்கு முன் இவர் பல மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர். 22 வயதில் அவரது வாழ்கை சிரியாவில் முடிவுக்கு வந்தது.

சோக்ரி சிரியாவின் வட பகுதியில் இருந்த போது ஸ்மார்ட்ஃபோனில் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர் தன் இளமையைக் கொண்டாடியது படத்தில் தெரிகிறது. உற்சாகத்தோடு நீச்சல் குளத்தில் குட்டிக்கரணம் அடிக்கிறார்.

பூல் பார்ட்டியில் ஒரு பெரிய துப்பாக்கியோடு படத்துக்கு பாவனை கொடுக்கிறார் சோக்ரி. ஒரு பருந்துக்கு அருகில் அமர்ந்து அவர் பேசுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

அவர் வாழ்கை குறித்த அனுபவமற்றவராகவும், இனி தான் உலகம் குறித்த அனுபவங்களைப் பெற இருப்பவரைப் போல ஆர்வமுடையவராகவும் தோன்றுகிறார்.

பிறகு ஆயுத பயிற்சியில் கலந்து கொள்கிறார். ஒரு கையெறி குண்டை எறிகிறார். அவர் சிறப்பாக எறிந்ததாக கூற, அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.

பொதுவாக ஐஎஸ் குழுவினரின் கொள்கை தொடர்பான இணைய காணொளிகள் கவர்ச்சிகரமாக ஒரு படம் போல இருக்கும்.

அயுதமேந்திய குழுவினர்

பட மூலாதாரம், Getty Images

“அவர்கள் காணொளி கேம்கள் மற்றும் மிக பிரபலமான பயமுறுத்தும் திரைப்படங்கள் குறித்து இந்த புதிய தலைமுறையினரிடம் பேசினர்” என்கிறார் ஜேவியர்.

ஜேவியர் லெசகா ஒரு கல்வியாளர். இவர் 1.500-க்கும் அதிகமான ஐஎஸ் குழுவினரின் கொள்கை பரப்பு காணொளிகளை ஆராய்ந்து இருக்கிறார்.

ஆனால் இந்த ஸ்மார்ட்ஃபோனில் இருப்பவை, ஐஎஸ் குழுவினர் வேறு ஒரு வாழ்கையை வாழ்வதைக் காட்டுகிறது என்கிறார்.

மெஹ்தி ஹசன்

மெஹ்தி ஹசன்

பட மூலாதாரம், BBC/MENTORN MEDIA

இவரும் பிரிட்டனைச் சேர்ந்தவர் தான். இவரது படமும் அந்த ஃபோனில் இருந்தது. ஆனால் சோக்ரி போல, ஐஎஸ் குழுவில் இணைவதற்கு முன் இவர் எந்த வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. போர்ட்ஸ்மெளத்தில் வளர்ந்த் இவர் சிரியாவில் மரணமடைந்தார்.

கடுமையாக உழைக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மெஹ்தி ஒரு கத்தோலிக்க தனியார் பள்ளியில் நன்றாகவே படித்தார். அவர் ஏ கிரேட் எடுக்க விரும்பினார். அப்படி ஏ கிரேட் எடுத்த பிறகு அவர் உலகத்தைப் பார்க்கும் பார்வை மாறியதாகக் கூறுகிறார் அவரது தாயார்.

இந்த மாற்றம் அவரது சமூக வலைதள கணக்குகளில் பிரதிபலித்தது. தொடக்கத்தில் அவரது சமூக வலைதளங்களில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. மேலாடை இல்லாத ஜிம் செல்ஃபிக்கள், கோலா உயிரினத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தும் பதிவுகளே இருந்தன.

தீவிரவாத சித்தாந்தம் மீதான கோபத்தை அவர் இப்படி வெளிப்படுத்தினார். “நான் ஒரு பிரிட்டிஷ் முஸ்லிம், நான் இது போன்ற கருத்துக்களுக்கு எதிரானவன்,” என அவர் எழுதியுள்ளார்.

பிறகு மெல்ல மதம் சார்ந்த தன் பார்வைகளை வெளிப்படுத்திய அவர், தமது முந்தைய வாழ்க்கை பாவம் நிறைந்தது என்று எழுதினார்.

சில வாரங்களுக்குப் பிறகு, குர்ஆன் வகுப்பு மற்றும் சர்வதேச அரசியல் குறித்த தன் பார்வையைப் பகிர்வது குறித்து, தன்னை பின் தொடருவோருக்கு தெரியப்படுத்தினார். இது ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க எடுக்கப்பட்ட முயற்சியாகத் தெரிகிறது.

மெஹ்தி ஹசன் என்கிற தன் பெயரை அபு துஜானா என மாற்றிக் கொண்டார், வங்கதேச பாரம்பரியத்தில் வளர்ந்த பிரிட்டிஷ் இளைஞனாக இருந்தபோதும், அவர் பாரம்பரிய அரபு உடை அணிந்து கொண்ட படங்களை பதிவிட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, சிரியா செல்லும் வழியில் விமான நிலைய கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)வில் அவரது முகம் பதிவானது.

அங்கிருந்து கொண்டு தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வந்தார். தன் வழியைப் பின்பற்ற விரும்புவோருக்கு இணையத்தில் கேள்வி பதில் அமர்வுகளை நடத்தினார். ஐஎஸ் குழுவில் சேருவதற்காக வந்தவர், இப்போது அவரே ஆட்களை தேர்வு செய்பவராக செயல்பட்டார்.

அயுதமேந்திய குழுவினர்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர் நஃபீஸ் ஹமீத், ஓர் நரம்பியல் விஞ்ஞானி. ஏராளமான தீவிரவாதிகளின் மனங்களை பரிசோதனை செய்துள்ள இவர், ஐ.எஸ் குழுவினரால் விடுக்கப்படும் சவால்களை நம்பிக்கையை கொண்டவர்கள்தான் கடும்போக்குவாதத்தில் இருந்து அந்த குழுவினரை விடுவிக்கக் கூடிய துறவுகோல் என்று நம்புகிறார் நஃபீஸ் ஹமீது.

“எதிரொலி அறைக்குள் இருப்பது போல அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல் கிடைக்கும் ஒரே ஆதாரமும் அதுவே. தங்களின் அங்கமாக சேருவோரின் வெளி தொடர்புகளை துண்டிப்பதும் தீவிரவாத குழுக்களின் பாணி. பழைய நண்பர்களுடன் பேசினாலோ, குடும்பத்தினருடன் பேசி உணர்ச்சிவசப்பட்டாலோ, கொண்ட எண்ணம் மாறலாம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்,” என்கிறார் நஃபீஸ்.

மெஹ்தி சிரியாவில் இருந்த போது, போர்ட்ஸ்மெளத்தில் உள்ள அன்புக்குரியவர்களோடு தொடர்பில் இருந்தார்.

சிரியாவுக்கு வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வலைதள கடவுச் சொல்லை எப்படி பெறுவது என யாருக்காவது தெரியுமா என அவர் பதிவிட்டிருந்தார் மெஹ்தி. ஐஎஸ் குழு உடனான தனது தொடர்பு முடிவுக்கு வரும் ஊகத்துக்கு அவரது செயல்பாடு வலுசேர்த்தது.

மெஹ்தியின் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர், “யாருக்காவது ஏதாவது வழக்குரைஞரைத் தெரியுமா என அவன் கேட்டான். என்னை பிடிக்கும் என ஒரு முறை ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பினான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கும் அவனை பிடிக்கும் என்பதை அவன் அறிந்திருப்பான் என கருதுகிறேன்,” என்று கூறினார்.

மெஹ்தி வீட்டுக்குத் திரும்பவில்லை. துருக்கியை இணைக்கும் சிரியா எல்லையிலேயே அவர் உயிர் இழந்தார். அவர் கடைசியாக இருந்த இடம், ஐஎஸ் குழுவை விட்டு, விட்டு வர அவர் திட்டமிட்ட பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இவர்களைப் போல அந்த ஸ்மார்ட்ஃபோனில் இருந்த அத்தனை பேரும் தற்போது உயிரோடு இல்லை என நம்பப்படுகிறது. இவர்களைப் போல இன்னும் பலரது மரணங்கள், இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »