Press "Enter" to skip to content

பாலியல் கட்டுகளை உடைப்பதில் ஆண்களை பெண்கள் முந்துவது ஏன்?

  • ஜெசிக்கா கிளெய்ன்
  • பிபிசி வொர்க்லைஃப்

பட மூலாதாரம், Getty Images

பாலுணர்வு குறித்து நாம் சிந்திக்கும் விதம் மாறி வருகிறது. மக்கள் தங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க அதிகளவில் முன்வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் நமக்கு தெரியாத வழக்கத்திற்கு மாறான, பாலின விருப்பங்களைக் கொண்டவர்கள் கூட மைய நீரோட்டத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், பாலியல் அடையாளங்கள் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதில் இருந்த ஒருவித இறுக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட குழுவில் அதிகமாக இருப்பதாக புதிய தரவுகள் சொல்கின்றன. ஆம் அவர்கள் பெண்கள்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களது பாலியல் ஈர்ப்பானது வெவ்வேறு பாலினத்தை நோக்கி இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது பள்ளிக்காலத்தில் ஆண்கள் மீது ஈர்ப்புக் கொண்ட ஒரு பெண் பின்னர் கல்லூரிக்கு வரும்போது பெண்கள் மீது ஈர்ப்புக் கொண்டவராக மாறக்கூடும். இதை (sexual fluidity) என்கிறார்கள்.

பல நாடுகளில், பெண்கள் பாலியல் உணர்வில், நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் (sexual fluidity) குறித்து பேசுவது கடந்த காலத்தில் இருந்ததை விட அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பொதுவாக ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசுகிறார்கள்.

இந்த முரண்பாடு ஏற்பட என்ன காரணம்? இந்த முன்னேற்றத்திற்கு ஊட்டமளிக்கும் பல காரணிகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர், குறிப்பாக சமூக நிலை மாற்றங்கள் பெண்களை வழக்கமான பாலின அடையாளங்களிலிருந்து வெளியேற அனுமதித்தது. இருப்பினும் இப்போதும் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை: இந்த காரணிகள் எதிர்காலத்தில் அனைத்து பாலியல் உணர்வில் ஏற்படும் மாற்றங்களில் (sexual fluidity) என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்?

ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்

நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பாலியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சீயன் மக்கள் விரும்பத்தக்கதுஸியும் அவரது சகாக்களும் சுமார் 10 ஆண்டுகளாக பாலியல் நடத்தைகளைக் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்களின் ஒவ்வொரு ஆய்விலும், பங்கேற்பாளர்களை தங்களின் பாலியல் விருப்பம் (Sexual Orientation) மற்றும் பாலினத்தை தெரிவிக்கும்படி அவர்கள் கேட்டார்கள். காலப்போக்கில் அந்த தரவு எப்படி மாறியது என்பதை அவர்கள் முன்பு கவனிக்கவில்லை – சமீபத்தில் தான் சியன் மக்கள் விரும்பத்தக்கதுஸியும், அவரது சகாக்களும் பாலியல் ஈர்ப்பு பற்றிய ஒரு புதையலில் அமர்ந்திருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

“நாங்கள் இந்தத் தரவை 10 வருடங்களாகச் சேகரித்துள்ளோம்” என்று பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் பெண்கள், பாலினம் மற்றும் பாலியல் ஆய்வுகளின் பேராசிரியர் மக்கள் விரும்பத்தக்கதுஸி கூறுகிறார். “நாங்கள் ஏன் திரும்பிச் சென்று ஏதேனும் போக்குகள் இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது?”

2011 மற்றும் 2019க்கு இடையில், கல்லூரி செல்லும் வயதுள்ள பெண்கள் தொடர்ச்சியாக ஆண்களுடன் மட்டுமான பாலின உறவில் இருந்து விலகிச் சென்றதை அவர்கள் கண்டறிந்தனர். 2019 ஆம் ஆண்டில், 65% பெண்கள் ஆண்களால் மட்டுமே ஈர்க்கப்பட்டதாக அறிவித்தனர், 2011ஆம் ஆண்டில் இது 77 சதவீதமாக மாறிவிட்டது.

ஆண்களுடன் மட்டும் பிரத்தியேகமாக உடலுறவு கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் குறைந்துள்ளது.

இதற்கிடையில், அதே காலகட்டத்தில் ஆண்களின் ஈர்ப்பு மற்றும் பாலியல் நடத்தை பெரும்பாலும் நிலையானதாகவே இருந்தது: சுமார் 85% ஆண்கள் பெண்களால் மட்டுமே பாலியல் ரீதியில் ஈர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது, அதிலும் 90 சதவீதம் பேருக்கு மேற்பட்டோர் பெண்களுடன் மட்டுமே பிரத்தியேகமாக உடலுறவில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

பிரிட்டன், நெதர்லாந்து உட்பட உலகெங்கிலும் உள்ள பிற ஆய்வுகளிலும் இதே போன்ற கண்டுபிடிப்புகளே வெளியாகியுள்ளன. எல்லா ஆய்வுகளிலும் பெண்களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது அதிகரித்திருப்பது தெரிகிறது. தன் பாலினத்தவரை பார்த்து ஈர்க்கப்படுவது ஆண்களிடமும் அதிகரித்து வருகிறது என்றாலும் பெண்களிடம் தான் அதிவேகமாக அதிகரிக்கிறது.

அதிகாரம் மற்றும் சுதந்திரம்

“இவை அனைத்தும் ஒரே ஒரு காரணியால் ஏற்பட்டது என்று கூறுவது மிகவும் சிக்கலானது.” ஆனால் பாலின நடத்தைகள், ஆண்களும் பெண்களும் எப்படி மாறி இருக்கிறார்கள், மாற்றத்துக்கு உட்படாமல் யார் இருக்கிறார்கள் என்பவையெல்லாம் முக்கிய காரணிகளாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியின் உளவியல் இணைப் பேராசிரியர் எலிசபெத் மார்கன்.

கடந்த பல தசாப்தங்களாக சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் ஏற்பட்ட கணிசமான மாற்றங்கள், பெண்ணிய முன்னேற்றம் மற்றும் பெண்கள் இயக்கம் போன்ற கலாசார மாற்றங்களே பெரிய அளவில் முக்கிய பங்கு வகித்தது என மக்கள் விரும்பத்தக்கதுஸியும் அவரது சகாக்களும் குறிப்பிடுகிறனர்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், இந்த மாற்றங்கள் ஆண்களையும் பெண்களையும் வித்தியாசமாக பாதித்திருக்கின்றன.

“உண்மையில் பெண் பாலினத்தைச் சுற்றித் தான் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன, குறைவான மாற்றங்களே ஆண் பாலினத்தைச் சுற்றி நிகழ்ந்துள்ளது” என்கிறார் சியன் மக்கள் விரும்பத்தக்கதுஸி.

இன்று பாலியல் உணர்வில் மாற்றம் ஏற்படுபவர்களின் (Sexual Fluidity) மீது எல்.ஜி.பி.டி.க்யூ இயக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஆண்களை விட அதிக பெண்கள் இந்த வழியில் அடையாளம் காணப்படுவதற்கு பெண்ணியம் மற்றும் பெண்கள் இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என மக்கள் விரும்பத்தக்கதுஸி நம்புகிறார் – குறிப்பாக எந்த ஆண்களின் இயக்கமும் ஆண்கள் தங்களின் பாலின வட்டங்களிலிருந்து வெளியேறவும், பாலின அடிப்படையிலான கட்டுப்பாடுகளைக் கடந்து வரவும் உதவியதில்லை.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு ஆணை திருமணம் செய்து செட்டில் ஆகவில்லை என்றால் உங்களால் வாழ்க்கையை வாழ முடியாது என்ற நிலை இருந்தது” என்று மோர்கன் கூறுகிறார். அந்த வகையில், பாரம்பரிய பாலினக் கட்டுகளை உடைத்து வெளியேறுவதன் ஒரு பகுதியாக பாலினத்தைத் தவிர்ப்பது பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பெண்கள் அதிக சுதந்திரத்தை பெற முடிந்தபோது, ஆண்களின் பாலினப் பாத்திரப் பங்களிப்புகள் ஒப்பீட்டளவில் நிலையாகவே இருந்திருக்கின்றன. அவர்கள் சமூகத்தில் மட்டும் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளனர்.

“அந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஆண்கள் தங்களது ஆண்தன்மை மிக்க பாலினப் பங்கை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இது எதிரெதிர்பால் உறவுக்கும் அவசியமாகிறது” என்கிறார் மோர்கன். “ஒரே பாலின உறவில் ஆர்வத்தை வெளிப்படுத்துவது இந்த அதிகார ஆற்றலைக் குறைக்கலாம்.”

“ஆண்மை என்பது ஒரு “பலவீனமான கருத்துரு”. ஒரேபால் ஈர்ப்பினால் இது உடைந்து போகலாம்” என்கிறார் அவர்.

இரண்டு பெண்கள் உடலுறவு கொள்வது அல்லது வெளியே செல்வது, குறிப்பாக ஆண் பார்வையின் கீழ் “மிகத்தீவிரமானது” என்பதை பாலியல் பயிற்சியாளரும் கல்வியாளருமான வயலட் டர்னிங் சுட்டிக்காட்டுகிறார்.

ஆயினும் பெண்களிடையே ஒரே பாலின ஈர்ப்பு சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக ஆகியிருக்கிறது. ஆனால் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது மிகவும் சுவையற்றது என்று மக்கள் கருதுகிறார்கள். 23 நாடுகளில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண்கள் மீதான அணுகுமுறைகளைப் பற்றிய ஆய்வில், “ஓரினச்சேர்க்கையுள்ள பெண்கள் அளவுக்கு ஓரினச் சேர்க்கை ஆண்கள் விரும்பப்படுவதில்லை” என்று கண்டறியப்பட்டது.

ஒரு திறந்த உரையாடல்

பெண்கள் தங்கள் பாலியல் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக பேசும் இடங்களும் காலப்போக்கில் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் பாலின ஆய்வு பேராசிரியரான லிசா டயமண்ட், 1990 களின் முற்பகுதியில் பாலியல் மாற்றங்களுக்கு உள்படும் தன்மை குறித்து ஆய்வு செய்யது தொடங்கிபோது, அவர் ஆண்களையே மையமாக எடுத்துக் கொண்டார்.

தழுவும் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

“பெரும்பாலானவர்கள் ஆண் ஓரினச்சேர்க்கை ஆதரவுக் குழுக்களிலிருந்து வந்தார்கள். அதனால் போதுமான ஆண்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.”

ஆனால் பெண்களின் பாலியல் நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்ய டயமண்ட் விரும்பினார். நூறு பெண்களைத் தேர்வு செய்து அவர்களின் பாலியல் விருப்பங்கள், நடவடிக்கைகள் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தசாப்தத்துக்கு ஆய்வு செய்தார்.

பாலியல் மாறுபாடுகள்: பெண்களின் அன்பையும் விருப்பத்தையும் பற்றிய புரிதல் என்ற அவரது புத்தகம் 2008-ஆம் ஆண்டு வெளியானது.

சில பெண்களுக்கு அன்பும் ஈர்ப்பும் எந்த அளவுக்கு மாறத்தக்கது, எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. இது பாலியல் விருப்பங்கள் மாறுவதற்குக் கடினமானது என்ற முந்தைய சிந்தனைக்கு முரணாக இருந்தது.

அவரது புத்தகம் வெளியிடப்பட்ட சமயத்தில், சிந்தியா நிக்சன் மற்றும் மரியா பெல்லோ போன்ற ஆண்களுடன் டேட்டிங் செய்துவந்த அமெரிக்க பிரபலங்கள் தங்களது ஒரே பாலின ஈர்ப்பு அனுபவங்களை பொதுவில் பேசினர். பின்னர் ஆப்ரா வின்ஃப்ரே பின்னர் பெண் பாலியல் விருப்ப மாறுபாட்டுத் தன்மை (sexual fluidity) குறித்துப் பேச தனது நிகழ்ச்சிக்கு வருமாறு டயமண்டுக்கு அழைப்பு விடுத்தார். அதனால் பாலியல் விருப்ப மாறுபாடு குறித்த உரையாடல் முக்கியத் தளத்தில் நுழைந்தது.

பாலியல் மாறுபாட்டின் எதிர்காலம் என்ன?

பாலியல் மாறுபாடு அதிக ஆண்களின் தளத்தில் நுழைவதற்கான வாய்ப்பு இருக்கலாம். டிக்டாக்கில், எதிர்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் தங்கள் காணொளிக்களில் ஓரினச்சேர்க்கையாளர்களாக காட்டுவது பிரபலமாகி இருக்கிறது. இதை அவர்களைப் பின்தொடரும் பெண்கள் ரசிக்கிறார்கள் என்று நியூயார்க் டைம்ஸின் கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்தக் காணொளிகளை உருவாக்குவோர் உண்மையாகவோ, அல்லது அதிகப் பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காகப் போலியாகவோ கூட இதைச் செய்யலாம். ஆயினும் இந்த போக்கு இன்னும் ஆண்களிடையே பாலியல் மாற்றம் குறித்த சிந்தனை அதிகரிக்கும் என்பதையே காட்டுகிறது.

பெண்கள் வெளிப்படையாக தங்கள் பாலியல் விருப்ப மாற்றங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். மாற்றக் கடினமான பாலியல் நடவடிக்கைகளுக்கான மாற்று வழிகளைத் தேடுவதையே இது காட்டுகிறது.

“நமது பண்பாடு பாலியல் நடவடிக்கை குறித்து அம்சங்களை அவமானமாகப் பார்க்கிறது.” என்கிறார் டயமண்ட். “அவமானப்படுத்தாத, சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, எளிதான எதுவும் அவர்கள் தங்களது பாலியல் விருப்பங்கள் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்” என்கிறார் அவர்.

“ஆண்களை கட்டாய எதிர்பால் ஈர்ப்புத் தன்மையில் இருந்தும், பாரம்பரிய ஆண்மைத் தன்மையில் இருந்தும் விடுவிக்கத் தொடங்க வேண்டும்” என்கிறார் மக்கள் விரும்பத்தக்கதுஸி. “அது பாலியல் பன்முகத் தன்மையை அனுமதிப்பதில் பெண்களைப் போன்ற முடிவுகளைத் தரலாம், அல்லது வேறுபட்ட முடிவுகளைத் தரக்கூடும்”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »