Press "Enter" to skip to content

கஜகஸ்தான்: அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்க ரஷ்ய படை விரைந்தது – டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் பலி

பட மூலாதாரம், Reuters

மத்திய ஆசிய மாநிலமான கஜகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் டஜன் கணக்கான அரசாங்க எதிர்ப்புக் கலவரக்காரர்களைக் கொன்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.அந்த நகரில் உள்ள காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதை அடுத்து படையினர் நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.திரவ பெட்ரோலிய எரிவாயுவின் (எல்பிஜி) விலை இரு மடங்காக அதிகரித்ததால் அந்த நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர், 353 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலையில், கஜகஸ்தான் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யா தனது படைகளை அனுப்புகிறது.ரஷ்யா, பெலாரூஸ், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆர்மீனியா ஆகியவற்றுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பில் (CSTO) உறுப்பினராக உள்ள நாட்டை “நிலைப்படுத்த” உதவுவதற்காக அந்த படையினர் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.CSTO ரஷ்ய பராட்ரூப்பர்கள் அமைதி காக்கும் படையினராக அனுப்பப்படுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் LPG மீதான அதன் விலை வரம்பை நீக்கியபோது எதிர்ப்பு போராட்டங்கள் பல இடங்களில் தொடங்கின.

கஜகஸ்தான் அமைதியின்மை

பட மூலாதாரம், Reuters

இதையடுத்து நாடு முழுவதும் அமைதியின்மை அதிகரித்ததால், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO) ஆதரவை அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் கோரினார்.

எதிர்ப்புகள் முதலில் எரிபொருள் விலையேற்றத்தால் தூண்டப்பட்டன. ஆனால், பின்னர் அது அரசியல் குறைபாடுகளுக்கு எதிரானதாக விரிவடைந்தது.

இந்த நிலையில், அமைதியின்மையின் பின்னணியில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற, “பயங்கரவாத கும்பல்,” இருப்பதாக அதிபர் டோகாயேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு எதிர்ப்பாளர்களுக்கு கடுமையான முறையில் பதிலளிக்கப்படும் என்று எச்சரித்த அதிபர், நாடு தழுவிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். அதன்படி ஊரடங்கு மற்றும் வெகுஜன கூட்டங்களுக்குத் தடை போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை அன்று அதிகாலை ஒரு தொலைக்காட்சி உரையில், நாட்டை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக ரஷ்யா மற்றும் ஐந்து முன்னாள் சோவியத் நாடுகளை உள்ளடக்கிய ராணுவக் கூட்டணியான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிடம் உதவி கேட்டதாக அதிபர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் தலைவரான ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன், “ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு” அமைதி காக்கும் படைகளை இந்தக் கூட்டணி அனுப்பும் என்பதை உறுதிபடுத்தினார்.

கஜகஸ்தானின் நிலைமையைம், “நெருக்கமாகக் கவனித்து வருவதாக” அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது. மேலும், ஒரு செய்தித் தொடர்பாளர் அதிகாரிகள் மற்றும் எதிர்ப்பாளர்களால் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

1991-ம் ஆண்டில் கஜகஸ்தானை சுதந்திரமானது என அறிவிக்கப்பட்டதில் இருந்து, அதிபர் டோகாயேவ் இரண்டாவது அதிபராக இருக்கிறார். 2019-ல் அவருடைய தேர்தல், ஜனநாயகத் தரங்களுக்குக் குறைவான மரியாதை காட்டுவதாக ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பு கண்டித்தது.

நர்சுல்தான் நசர்பயேவ்

பட மூலாதாரம், Reuters

இருப்பினும், தெருக்களில் உள்ள கோவத்தின் பெரும்பகுதி, அவருடைய முன்னோடி நர்சுல்தான் நசர்பயேவை இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது. அவர் பதவி விலகியதிலிருந்து சக்திவாய்ந்த தேசிய பாதுகாப்பிப் பங்கு வகித்தார். புதன்கிழமை, வளர்ந்து வரும் அமைதியின்மையை அடக்கும் முயற்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

எதிர்ப்பாளர்கள் நாசர்பயேவின் பெயரைக் கோஷமிட்ட, அதே நேரத்தில் முன்னாள் தலைவரின் மாபெரும் வெண்கலச் சிலையை மக்கள் கீழே இழுத்துத் தள்ள முயன்றதைக் காட்டும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. பிபிசி கண்காணிப்புப் பிரிவு தகவலின்படி, இப்போது அகற்றப்பட்ட நினைவுச்சின்னம் நாசர்பயேவின் சொந்தப் பகுதியான டால்டிகோர்கனில் இருந்ததாகத் தெரிகிறது.

கஜகஸ்தானின் பிரதான விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள், அரசுக் கட்டிடங்களையும் குறி வைத்த, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்பி ஓடவேண்டியிருந்தது.

அல்மாட்டியில் உள்ள மேயர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். சமூக ஊடகங்களில் காணொளிகள் கட்டிடத்தில் இருந்து புகை மூட்டம் எழுந்ததைக் காடிய, அதேநேரத்தில் துப்பாக்கிச் சூடும் கேட்டுள்ளது.

“பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள்” 500 பொதுமக்களைத் தாக்கி நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களை சூறையாடியதாக நகரின் காவல்துறைத் தலைவர் கனாட் டைமர்டெனோவ் கூறினார்.

மேற்கு நகரான அக்டோப் நகரில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பாதுகாப்புப் படையினர் நின்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணைய முடக்கம்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும் மத்திய ஆசிய நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது. உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் படையினரிடையே ஏற்பட்ட உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஆனால், “தேசிய அளவிலான இணைய முடக்கம்,” என்று கண்காணிப்புக் குழுக்கள் கூறியதற்கு நடுவில், எதிர்ப்பாளர்களிடையே காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த சமமான அறிக்கைகள் எதுவுமில்லை.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிற முயற்சிகளில் ஒன்றாக, அரசு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு மீதான விலை உச்சவரம்பை உயர்த்தியது. இதனால் விலை இரட்டிப்பாகும்.

மேலும், நாசர்பயேவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த அரசாங்கமும் ராஜிநாமா செய்துள்ளது.

இது குறித்து, பிபிசி ரஷ்ய பத்திரிகையாளர் ஓல்கா இவ்ஷினா, “போராட்டங்கள் வன்முறையாக மாறிய வேகம் கஜகஸ்தானிலும் மற்ற பிராந்தியங்களிலும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவை எரிபொருள் விலை அதிகரிப்பினால் மட்டுமல்ல என்பதை அந்த வேகம் சுட்டிக்காட்டியது.

கஜகஸ்தான்

கஜகஸ்தான் தேர்தல்களில் பெரும்பாலும் ஆளும் கட்சியால் கிட்டத்தட்ட 100% வாக்குகளோடு வெற்றியடைகிறது. அங்கு பயனுள்ள அரசியல் எதிர்ப்பு இல்லை.

நான் பேசிய ஆய்வாளர்கள், மக்கள் எவ்வளவு கோவமாக இருக்கிறார்கள் என்பதை, அரசு தெளிவாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும் தேர்தல் ஜனநாயகம் இல்லாத நாட்டில் இந்த எதிர்ப்புகள் ஆச்சரியப்படுத்துவதில்லை என்றும் மக்கள் தெருவில் இறங்கிக் கேட்க வேண்டும் என்றனர்.

மேலும், அவர்களுடைய குறைகள், எரிபொருளின் விலையைவிடப் பரந்த அளவிலான சிக்கல்கள் பற்றியதாகவே இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

கஜகஸ்தான்: சில அடிப்படை தகவல்கள்அது எங்கே உள்ளது? கஜகஸ்தான் வடக்கில் ரஷ்யா மற்றும் கிழக்கில் சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. இது மேற்கு ஐரோப்பா அளவிலான ஒரு பெரிய நாடு, மத்திய ஆசியாவில் உள்ள பிற முன்னாள் சோவியத் குடியரசுகளின் நிலப்பரப்பில் இது சிறியது.து ஏன் முக்கியம்? இந்த நாடு உலகளாவிய எண்ணெய் இருப்புக்களில் 3% மற்றும் முக்கியமான நிலக்கரி மற்றும் எரிவாயு துறைகளுடன் பரந்த கனிம வளங்களைக் கொண்டுள்ளது. பெரிய ரஷ்ய சிறுபான்மையினரைக் கொண்ட முக்கியமாக முஸ்லிம் குடியரசு இது. மத்திய ஆசியாவின் பிற பகுதிகளில் காணப்படும் உள்நாட்டுக் கலவரங்களில் இருந்து இந்த நாடு பெருமளவில் தப்பித்திருந்தது.இப்போது ஏன் செய்தியாகிறது? எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான கலவரங்கள் அரசாங்கத்தை உலுக்கியுள்ளன, இதன் விளைவாக உயர்மட்டத்தில் உள்ளவர்களின் ராஜிநாமாக்களை எதிர்ப்பாளர்கள் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »