Press "Enter" to skip to content

அறிவியல் சாதனை: மனிதருக்கு பன்றி இதய மாற்று சிகிச்சை: முஸ்லிம், யூத மதத்தினர் ஏற்பார்களா?

  • ஜேக் ஜன்ட்டர்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், UMSOM

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் அமெரிக்கர் ஒருவர்.

57 வயதான டேவிட் பென்னட், மனித இதயத்திற்குத் தகுதி பெற முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால், அவருக்கு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயம் பொருத்தும் ஏழு மணி நேர சிகிச்சை முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகும் அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாற்று அறுவை சிகிச்சைக்காக மனிதர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மருத்துவ முன்னேற்றம் இது என்றும் இந்த பரிசோதனை முறையிலான அறுவை சிகிச்சையை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் இந்த நடைமுறையை யதார்த்தத்தில் நெறிமுறை ரீதியாக நியாயப்படுத்த முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நோயாளிகளின் பாதுகாப்பு, விலங்கு உரிமைகள் ,மத கவலைகள் ஆகியவற்றில் இந்த சிகிச்சை முறை ஏற்படுத்தக் கூடிய சாத்தியமான தார்மீக சிக்கல்களை அவர்கள் சுட்டிக்கட்டுகின்றனர்.

அது சரி… பன்றிகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் மாற்று அறுவை சிகிச்சைகள் எந்த அளவுக்கு சர்ச்சைக்குரியவை?

மருத்துவ தாக்கங்கள்

இது ஒரு பரிசோதனை முறையிலான அறுவை சிகிச்சையாகும், மேலும் இது நோயாளிக்கு மிகப்பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டது.

நன்கு பொருந்தக் கூடிய மனித தான உறுப்புகள் கூட அவை இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு நிராகரிக்கப்படலாம் – அந்த வகையில் விலங்கு உறுப்புகள் என வரும் போது அவை மீதான ஆபத்து அதிகமாக இருக்கும்.

பல தசாப்தங்களாக ஜெனோ-ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று அழைக்கப்படும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பயன்படுத்த மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதில் கலவையான வெற்றியையும் பெற்றுள்ளனர்.

1984ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு பெண் குழந்தையின் இதயத்தை ஒரு பபூன் குரங்கின் இதயத்தை பொருத்திக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் 21 நாட்களுக்குப் பிறகு அந்த பெண் இறந்தார்.

இத்தகைய சிகிச்சைகள் மிகவும் ஆபத்தானவை என்றாலும், நோயாளிகள் அந்த ஆபத்தை உணர்ந்திருந்தால் தாங்கள் இன்னும் அந்த பரிசோதனை சிகிச்சையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று சில மருத்துவ நெறிமுறை மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

“சிகிச்சைக்குப் பிறகு அந்த நபர் விரைவில் பேரழிவைச் சந்திக்கப் போகிறாரா என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாது – ஆனால் நீங்கள் ஆபத்தை எதிர்கொள்ளாமல் சிகிச்சையைத் தொடர முடியாது,” என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நடைமுறை நெறிமுறை மருத்துவ சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜூலியன் சாவுலெஸ்கு.

“தனி நபர் முழு அளவிலான அபாயங்களைப் புரிந்து கொள்ளும் வரை, இந்த தீவிர சோதனைகளுக்கு மக்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இயந்திர இதய ஆதரவு அல்லது மனித மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விருப்பங்களும் அவர்களுக்கு வழங்கப்படுவது முக்கியம் என்று பேராசிரியர் சாவுலெஸ்கு கூறுகிறார்.

பென்னட்டின் விஷயத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள், அவருக்கு வேறு சிகிச்சை முறைகள் இல்லாததால், அறுவை சிகிச்சை நியாயமானது என்றும், அது இல்லாவிட்டால் அவர் இறந்திருப்பார் என்றும் கூறுகிறார்கள்.

Surgeon Bartley P Griffith with David Bennett in January

பட மூலாதாரம், University of Maryland School of Medicine

பேராசிரியர் சவுலெஸ்கு, எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் முன்பு, அதன் செயல்முறை பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த “மிகக் கடுமையான திசு மற்றும் மனிதரல்லாத விலங்கு பரிசோதனை” செய்திருக்க வேண்டும்.

பென்னட்டின் மாற்று அறுவை சிகிச்சை ஒரு மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக செய்யப்படவில்லை, பொதுவாக பரிசோதனை சிகிச்சைகளுக்கு தேவைப்படுகிறது. மேலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மனிதரல்லாத விலங்குகளில் பயன்படுத்தப்படுவதற்கு இன்னும் சோதனை செய்யப்படவில்லை.ஆனால் திரு பென்னட்டின் செயல்முறையைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்த மேரிலாந்து மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த மருத்துவர் கிறிஸ்டின் லாவ், அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் போது எந்த மூலையிலும் வெட்டப்படவில்லை என்றார்.

“நாங்கள் இதை பல தசாப்தங்களாக ஆய்வகத்தில், விலங்கினங்கள் மீது செய்து வருகிறோம், இதை ஒரு மனித பயனருக்கு வழங்குவது பாதுகாப்பானது என்று நாங்கள் நினைக்கும் நிலைக்கு வர முயற்சிக்கிறோம்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

விலங்கி உரிமைகள்

தற்போதைய முன்னேற்றத்தின் மூலம் பென்னட்டின் சிகிச்சையானது மனித மாற்று அறுவை சிகிச்சைக்கு பன்றிகளைப் பயன்படுத்துவது பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. ஆனால், இந்த முயற்சியை பல விலங்குகள் நல உரிமைகள் குழுக்கள் எதிர்க்கின்றன.

பீப்பிள் ஃபார் தி எதிகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (PETA) என்ற விலங்குகள் நல அமைப்பு, பென்னட்டின் பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையை “நெறிமுறையற்றது, ஆபத்தானது மற்றும் மிகப்பெரிய வளங்களை வீணடிப்பது” என்று கண்டித்துள்ளது.

“விலங்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கருவிகள் அல்ல, ஆனால் சிக்கலான, புத்திசாலித்தனமான உயிரினங்கள்” என்று PETA கூறியது.

விலங்குகளின் மரபணுக்களை மனிதர்களைப் போல மாற்றுவது தவறு என்று பிரசாரகர்கள் கூறுகிறார்கள். பன்றியின் 10 மரபணுக்களை விஞ்ஞானிகள் மாற்றியுள்ளனர், அதன் இதயம் பென்னட்டின் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது, அதனால் அது அவரது உடலால் நிராகரிக்கப்படவில்லை.

BBC News graphic showing processes involved in using genetically modified pig organs in humans
Presentational white space

முன்னதாக, அறுவை சிகிச்சை நடந்த அன்று காலை, பன்றியின் இதயம் அகற்றப்பட்டது.

பிரிட்டனை மையமாகக் கொண்ட விலங்கு உரிமைகள் குழுவான அனிமல் எய்டின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில், “எந்த சூழ்நிலையிலும்” விலங்குகளின் மரபணுக்கள் அல்லது ஜீனோட்ரான்ஸ்பிளான்ட்களை மாற்றியமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

“விலங்குகளுக்கு அவற்றின் வாழ்க்கையை வாழ உரிமை உண்டு, இது அனைத்து வலி மற்றும் அதிர்ச்சியுடன் மரபணு ரீதியாக கையாளப்படாமல், கொல்லப்படுவதற்கும் அவற்றின் உறுப்புகளை அறுவடை செய்வதற்கும் மட்டுமே” என்று அமைப்பு கூறியது.

பன்றியின் ஆரோக்கியத்தில் மரபணு மாற்றத்தின் அறியப்படாத நீண்டகால விளைவுகள் குறித்து சில பிரசாரகர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் நெறிமுறை மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் கேட்ரியன் டெவோல்டர், “அவை தேவையற்ற தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முடிந்தால்” உறுப்பு மாற்றலுக்கு மரபணு திருத்தப்பட்ட பன்றிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

“இறைச்சியை உற்பத்தி செய்ய பன்றிகளைப் பயன்படுத்துவது உயிரைக் காப்பாற்ற அவற்றைப் பயன்படுத்துவதை விட மிகவும் சிக்கலானது, ஆனால் இங்கே விலங்கு நலனையும் புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

Pig file photo

பட மூலாதாரம், Getty Images

மதம்

இந்த நிலையில், விலங்குகள் உறுப்பைப் பெறுவது தந்திரமானது என்று யாரெல்லாம் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைச் சுற்றி மற்றொரு குழப்பம் சூழ்ந்திருக்கிறது. மனிதர்களுக்கு பன்றிகளின் உறுப்புகள் பொருந்தலாம் என்பதாலேயே அவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்வு யூதர்கள் அல்லது முஸ்லிம் நோயாளிகளை எவ்வாறு பாதிக்கிறது? எந்த மதங்களில் விலங்குகள் பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன?யூத சட்டம், யூதர்கள் பன்றிகளை வளர்க்கவோ சாப்பிடுவதையோ தடைசெய்தாலும், பன்றி இதயத்தைப் பெறுவது, அவர்களின் உணவுச் சட்டங்களை எந்த வகையிலும் மீறுவதாக இல்லை என்று பிரிட்டன் சுகாதாரத் துறையின் தார்மீக மற்றும் நெறிமுறை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த மருத்துவர் மோஷே ஃப்ரீட்மேன் கூறுகிறார். “யூத சட்டத்தில் முதன்மையான அக்கறை மனித உயிரைப் பாதுகாப்பது என்பதால், ஒரு யூத நோயாளி ஒரு விலங்கிலிருந்து ஒரு மாற்று அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டிருப்பார், இது உயிர்வாழ்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பையும் எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் வழங்கும்” என்று ரப்பி ஃப்ரீட்மேன் கூறினார். பிபிசி.

இஸ்லாத்தில், ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றும் தேவை எழுந்தால், அதை பூர்த்தி செய்ய விலங்கு உறுப்பை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

“நோயாளியின் உயிருக்கு பயம், அவரது உறுப்புகளில் ஒன்று இழக்கும் நிலை, நோய் தீவிரமடைதல் அல்லது தொடர்ந்தால், பன்றி இதய வால்வுகளை பொருத்த அனுமதிக்கலாம்” என்று எகிப்தின் மதத தீர்ப்பு வழங்கும் டார் அல்-இஃப்தா ஃபத்வா அமைப்பு கூறியுள்ளது.”

மதம் அல்லது நெறிமுறை அடிப்படையில் யாராவது விலங்கு மாற்று அறுவை சிகிச்சையை நிராகரித்தாலும், மனித உறுப்பு தானம் செய்பவர்களுக்கான காத்திருப்பு பட்டியலில் அவர்களுக்கு குறைந்த முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் பேராசிரியர் சாவுலெஸ்கு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »