Press "Enter" to skip to content

பசிபிக் சுனாமி டோங்கா, தென் அமெரிக்காவை தாக்கியது – மீட்புப் பணிகள் துரிதம்

பட மூலாதாரம், TONGA GEOLOGICAL SERVICES

ஒரு பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமியைத் ஏற்பட்டதைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூசிலாந்து விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த எரிமலை உமிழ்வு காரணமாக பசிபிக் தீவுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன. டோங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளும் செயல்படவில்லை.

பெரு, சிலி, ஃபிஜி ஆகிய நாடுகளில் ஆக்ரோஷமான சுனாமி அலைகள் தாக்கின. கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தன.

டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) பிபிசியிடம் தெரிவித்தது.

சுனாமி “கணிசமான சேதத்தை” ஏற்படுத்தியதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியிருக்கிறார்.

இருப்பினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன.

“தாழ்வான தீவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்காக” ஒரு விமானம் புறப்பட்டது என நியூசிலாந்து பாதுகாப்புப் படை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

“டோங்கா முழுவதும் 80,000 பேர் வரை எரிமலை வெடிப்பு, சுனாமி அலை அல்லது எரிமலை வெடிப்பின் விளைவாக ஏற்பட்ட மூழ்கடிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த கேத்தி க்ரீன்வுட் கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று நீருக்கடியில் எரிமலை வெடித்தது. இதைத் தொடர்ந்து 1.2 மீ (4 அடி) அலைகள் டோங்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டோங்காவிலிருந்து சுமார் 2,383 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியூசிலாந்தில் இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சத்தமாகவே கேட்டது.

டோங்காவில் உள்ள நியூசிலாந்தின் தூதர் பீட்டர் லூண்ட், எரிமலை சாம்பல் அடுக்கால் மூடப்பட்ட பிறகு, “நிலாவைப் போல்” டோங்கா இருப்பதாகக் கூறினார்.

தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெசிந்தா கூறியுள்ளார்.

சாம்பல் காரணமாக மக்களை பாட்டில் தண்ணீரைக் குடிக்கவும், நுரையீரலைப் பாதுகாக்க முகமூடிகளை அணியவும் வேண்டியிருக்கிறது.

சுனாமி

பட மூலாதாரம், CONSULATE OF THE KINGDOM OF TONGA

சாம்பல் மூடியதால் மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து காரில் தப்பிச் செல்ல மக்கள் முயன்றனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காணொளிகள் இணையத்தில் பரவியிருக்கின்றன.

டோங்கோ தீவில் வசிக்கும் சுமார் 1,05,000 பேரை அணுக முடியவில்லை.

மிகப்பெரிய வெடிப்புக்கு முன்னதாக, எரிமலை பல நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. சில பகுதிகளில் கந்தகம் மற்றும் அம்மோனியா வாசனை வீசுவதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

தீவின் சில பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும், கைபேசிகள் மெதுவாக மீண்டும் வேலை செய்யத் தொடங்குவதாகவும் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார். ஆனால் சில கடலோரப் பகுதிகளின் நிலைமை இன்னும் தெரியவில்லை.

தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை என ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள டோங்கோவைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டோங்காவின் தலைநகரான நுகு அலோபாவில் கடலோர உணவகத்தை நடத்தி வரும் தனது நண்பரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பாத்திமா கூறினார்.

சுனாமி

செயற்கைக்கோள் படங்கள் சில வெளியிலுள்ள தீவுகள் கடல்நீரால் முழுமையாக மூழ்கிவிட்டதாகக் காட்டுகின்றன.

ஹங்கா-டோங்கா ஹங்கா-ஹா’பாய் என்ற இந்த எரிமலையின் வெடிப்பு பல தசாப்தங்களாகப் பிறகு நடக்கும் மிகவும் தீவிரமான ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அங்கு கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவின் சில கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »