Press "Enter" to skip to content

வரலாறு: ஹிட்லரை ஏமாற்றி தோற்கடித்த பேய்ப் படையும், தந்திரக் கலைஞர்களும்

  • மேத்யூ வில்சன்
  • பிபிசி கல்சர்

பட மூலாதாரம், Getty Images

இரண்டு உலகப் போர்களிலும் மாயத் தோற்றங்களை உருவாக்க கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். நேச நாடுகளை வெற்றிக்கு இட்டுச் செல்ல உதவிய “ஏமாற்று வேலைகளில்” ஒரு உருமறைப்புப் பிரிவும், ‘பேய்ப் படையும்’ பயன்படுத்தப்பட்டன.

போர்க்காலத்தில் கலைஞர்கள் என்றால், ஏதாவது பரப்புரைக்காக பாடுவார்கள், ஓவியம் வரைவார்கள், எழுதுவார்கள், நாடகம் நடத்துவார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் படைகளை விரட்டுவதற்கு போர்க்களத்திலேயே பணியாற்றியிருக்கிறார்கள்.

போர்கள் நிறைந்திருந்த 20-ஆம் நூற்றாண்டில் ஆண்களும் பெண்களும் அதில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்க வேண்டியிருந்தது. கலைஞர்கள், கலை வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற கலை வல்லுநர்கள் ஆகியோரும் அளப்பரிய பங்காற்றியிருக்கின்றனர். ஆனால் அவை இன்னும் முழுமையாகச் சொல்லப்படவில்லை.

இரண்டாம் உலகப் போரின் இரண்டு ராணுவப் பிரிவுகளின் கதையும், முதல் உலகப் போரில் பணியாற்றிய கலைஞர்களின் பங்களிப்பும் போரில் கலைஞர்கள் எவ்வாறு முக்கிய வீரர்களாக மாற முடியும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. முதன்முறையாக, அவர்கள் போர்க்களத்தை படைப்பாற்றலுக்கான களமாக மறுவடிவமைத்தனர்.

அமைதி காலத்தில் கலைஞர்களின் பங்கு வேறுமாதிரியானது. அவர்கள் ஓவியத்தை வரையலாம், மாயத் தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் முதல் உலகப் போரில் அவர்களின் கலைத்திறன் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

முதல் உலகப் போரில் விமானங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தன. அவற்றிடம் இருந்து துருப்புகளை மறைப்பது அவசியமானது. அங்குதான் மாய உருவங்களைத் தோற்றுவிக்கும் கலைஞர்களின் தேவை ஏற்பட்டது. ஒளி, நிழல் மற்றும் பார்வை பற்றிய நுண்ணறிவுடன், ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் தங்களது வேலைக்கான திறமைகளை மட்டுமே கொண்டிருந்தனர். ஆனால் அதுவே போர்க்களத்தில் ஆயுதமாக்கப்பட்டது.

முதல் உலகப் போரின் மிக முக்கியமான பிரிட்டிஷ் உருமறைப்பு (Camouflage) கலைஞர் சாலமன் ஜே சாலமன். அவர் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் அலெக்ஸாண்ட்ரே கபனெலினிடம் படித்தவர். முதல் உலகப் போரில், படைகளை மறைக்கும் உத்திகளை அவர் வகுத்தார்.

அகழிகள், பதுங்குமிடங்களை மறைப்பதற்காக ஒரு வகையான வலையை அவர் உருவாக்கியது மிகவும் புகழ்பெற்றது. “கண்காணிப்பு மரம்”தொலைபேசிற எதிரிகளை ஏமாற்றும் திட்டங்களிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

1944 மற்றும் 1945 க்கு இடையே அது செயல்பட்ட காலத்தில், ஜெர்மானியப் படைகளை ஏமாற்ற 22 ஏமாற்று தந்திரங்களை உருவாக்கியது. ஹிட்லருக்கு எதிரான இறுதி வெற்றியிலும் இதற்கு முக்கியப் பங்கு உண்டு.

ரப்பரால் உருவாக்கப்பட்ட டாங்கிகள், பிற உபகரணங்கள் போன்றவை இதில் பயன்படுத்தப்பட்டன. தொலைவில் இருந்து பார்த்தால் அவரை உண்மையானவை போன்றே தோன்றும். இதனால் ஜெர்மானிய விமானப்படை தங்களது குண்டுகளை தேவையில்லாமல் பயன்படுத்த நேர்ந்தது.

இதேபோல போலியான வானொலி தொடர்பையும் ஒரு குழு செய்தது. இதை நாஜி உளவாளிகள் ஒட்டுக்க கேட்டு அதற்கேற்றபடி செயல்பட படைகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதுவும் நாஜிக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

பாலம் கட்டுவது, துருப்புகளின் நடமாட்டம் போன்ற ஒலிகள் போலியாக உருவாக்கப்பட்டன. கோஸ்ட் ஆர்மியின் உறுப்பினர்கள் நடிகர்களாகவும் செயல்பட்டனர். வெவ்வேறு படைப்பிரிவுகளின் சீருடைகளை அணிந்துகொண்டு உள்ளூர் நகரங்களில் கலந்து கொண்டனர். எதிரி உளவாளிகளுக்கு உதவுவது போலச் செயல்பட்டு தவறான தகவல்களை அளித்து அவர்களை ஏமாற்றினர்.

உலகப் போருக்குப் பிறகு, கோஸ்ட் ஆர்மி பற்றி வெளியே ஏதும் கூறக்கூடாது என்று உறுதியளிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும்வரை இதுபற்றி அரசல்புரசலான தகவல்கள் மட்டுமே உண்டு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

  • ஃபேஸ்புக் :
  • டிவிட்டர் :
  • இன்ஸ்டாகிராம் :
  • யு டியூப் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »