பட மூலாதாரம், DEBDATTA CHAKRABORTY
புகை மேகம் சூழ, அடுப்பில் வேலை செய்யும் தெரு உணவு விற்பனையாளரின் புகைப்படம் ஒரு பெரிய உணவு புகைப்பட விருதை வென்றுள்ளது.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் எடுக்கப்பட்ட கெபாபியானா என்ற படத்திற்காக, 2022 ஆம் ஆண்டின் பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் போட்டியின் இறுதி வெற்றியாளராக தேப்தத்தா சக்ரபோர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாஸ்வான் கெபாப்கள் மற்றும் பிற தெரு உணவுகளைக் கரி அடுப்புகளில் சமைக்கும் புகைப்படத்தை ஒரு பரபரப்பான தெருவில் இந்த இந்தியப் புகைப்படக் கலைஞர் எடுத்தார்.
“இன்றைய உலகில், முன்னெப்போதையும் விட, ஆறுதல் மற்றும் அன்பின் தேவையை நாங்கள் உணர்கிறோம்,” என்கிறார் விருது நிறுவனரும் இயக்குனருமான கரோலின் கென்யான்.
“அடர்ந்த புகை மண்டலம், அதை ஊடுருவும் விளக்கொளி, உணவு தயாரிப்பவரின் முகத்தில் உள்ள உணர்ச்சி என இதில் பல விஷயங்கள் உள்ளன.”
“கெபாப்கள் சுடப்படுவதை உறுதிப்படுத்தும் நறுமணத்துடன் தெறிக்கும் தீப்பொறிகள், அந்த நறுமணமே சுவைக்குக் கட்டியம் கூறுகிறது.”
“இந்த படம், மென்மையான ஆனால் சக்தி வாய்ந்தது, நம் உயிரைத் தொடுகிறது.”
உலகெங்கிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. நேரடி ஒளிபரப்பு நிகழ்வு மூலம் வெற்றியாளர்கள் இணையத்தில் அறிவிக்கப்பட்டனர்.
புகைப்படக் கலைஞர்களின் விளக்கங்களுடன் போட்டிப் பிரிவில் வெற்றி பெற்ற சில புகைப்படங்கள் கீழே:
ஷேம்பெய்ன் டெய்ட்டிங்கர் ஃபுட் ஃபார் செலப்ரேஷன்: சீனாவின் சென் யிங்கின் பாரம்பரியத் திறமை

பட மூலாதாரம், CHEN YING
“புஜியான் மாகாணத்தில், சியாங்யோ கவுண்டியில் உள்ள கியான்லியன் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டது. ஒரு குடும்பம் அரிசி அல்லது ஒரு வகை பீன் நிரப்பப்பட்ட டம்பிங்குகளைத் தயாரிப்பதில் ஒரு குடும்பமே ஈடுபட்டுள்ளது. அந்த டம்பிங்குகளில் ‘அதிர்ஷ்டம்’ அல்லது ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தைகளை மரத்தால் முத்திரையிட்டு, பெரிய ஸ்டீமரில் வேக விடுகின்றனர். புத்தாண்டை ஒருங்கிணைந்து வளமாக இருக்க வேண்டி வரவேற்கும் போது இது பாரம்பரிய முறையாகும். “
மேசையில் ஆடம்பர உணவு : ஜான் கேரி, பிரிட்டன்

பட மூலாதாரம், JOHN CAREY
ஃப்யூஜிஃபிலிம் அவார்ட் ஃபார் இன்னொவேஷன்: சென்ட்ரல் பார்க், யூலிய் வஸிலேவ், பல்கேரியா

பட மூலாதாரம், YULIY VASILEV
தி க்ளெயர் அஹோ அவார்ட் ஃபார் விமென் புகைப்படம்கிராஃபர்ஸ்: அட் த டேபிள், மார்க்யுரைட் ஓலோஃப்சே, தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், MARGUERITE OELOFSE
ஆப்பிரிக்காவின் பாரம்பரியத்துடன் ஃப்ரெஞ்சு கலைஞர் ஹென்ரி மேடிஸின் பாணியை இணைத்து உருவாக்கியது. என் படத்தில் தோன்றும் இந்தக் கலை நுணுக்கம் அதன் நிறம், மற்றும் வடிவத்தால் முப்பரிமாணமத் தோற்றத்தைத் தருகிறது. இவை தென்னாப்பிரிக்காவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. அட் த டேபிள் என்பது எங்கள் சுதந்தரத்தின் பயன்களின் கொண்டாட்டமாகும்.
ஆன் திதொலைபேசி: ட்ரையின் ஸ்டாக்ஃபிஷ், காசியா சீஸியெல்ஸ்கா, ஃபேபர், பிரிட்டன்

பட மூலாதாரம், KASIA CIESIELSKA-FABER
நார்வேயில் உள்ள லொஃபோடென் தீவுக்கூட்டத்தில், ஸ்டாக்ஃபிஷ்கள் வரிசை புகழ் வாய்ந்தது. பனி பொழியும் வெப்பநிலை கொண்டதால் உப்போ புகையோ இன்றி இந்த மீன் வகைகள் உலர்த்தப்படுகின்றன. வெளிப்புற ஸ்டாக்ஃபிஷ் தயாரிப்புக்கு உகந்த வானிலை இங்கு நிலவுகிறது
பாலிடிக்ஸ் ஆஃப் ஃபுட்: வேர் ட்ரீம்ஸ் ஃப்ளை அவே, கே எம் ஆசாத், பங்களாதேஷ்

பட மூலாதாரம், K M ASAD
“செப்டம்பர் 2021 இல், வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள சாட் உடான் குடிசைப்பகுதியில், ஒரு சிறுமி தனது மூத்த சகோதரியுடன் தண்ணீர் சேகரிக்கிறாள். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில், மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே – காலை மற்றும் மாலையில் சுத்தமான தண்ணீரைப் பெறுகிறார்கள்.”
ஃபுட் ஸ்டைலிஸ்ட் அவார்ட்: கோடைக்காலம் வெஜ் டார்ட், கரோலின் ஸ்ட்ரோத், ஜெர்மனி

பட மூலாதாரம், CAROLIN STROTHE
“இந்த கண்கவர் வெஜ் டார்ட்டுடன் கோடையைக் கொண்டாடுகிறோம் – எருமை மொஸரெல்லா, ஃபெட்டா, ஹெர்லூம் தக்காளி, பட்டாணி, வெங்காயம் மற்றும் சோளப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.”
யங்(10 அண்ட் அண்டர்): மீன் பக்குவம், ரூப்கோத்தா ராய் பராய், பங்களாதேஷ்

பட மூலாதாரம், RUPKOTHA ROY BARAI
உள்ளூரில் சேகரிக்கப்பட்ட பச்சை மீன்களைக் கிராமத்துப் பெண்கள் பக்குவப்படுத்துகிறார்கள்
எர்ரஸுரிஸ் வைன் புகைப்படம்கிராஃபர் ஆஃப் த இயர் – ஓவரால் வின்னர்: கார்ட்டன் ஹில்லில் அறுப்பு, ஜான் வயண்ட், பிரிட்டன்

பட மூலாதாரம், JON WYAND
ஒன் விஷன் இமேஜிங்க் க்ரீம் ஆஃப் த கிராப்: கேரட் ஃபீல்ட் ஃபார் எவர், பாவ்லோ க்ரின்ஸா மற்றும் சில்வியா வாலா, இத்தாலி

பட மூலாதாரம், PAOLO GRINZA AND SILVIA VAULÀ
ப்ளாஸ்டிக்வோம்பாட் – புகைப்படவியல் ஆர்ட் அண்ட் கான்சப்ட் தரப்பில் இத்தாலியின் ட்யூரினில் உள்ள எடிகோ பிஸ்ட்ராட் ரெஸ்ட்ராண்டுக்காக ‘ஹேண்ட்ஸ் அட் ஒர்க்’ என்ற கருத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பின் ஒரு பகுதி
பிங்க் லேடி ஃபுட் புகைப்படம்கிராஃபர் ஆஃப் த இயர்(தென் கிழக்காசியா):ஆன்கோவி கேட்சிங்க், தியன் ந்குயென் ந்காக், வியட்னாம்

பட மூலாதாரம், THIEN NGUYEN NGOC
“ஒரு புதிய நாளின் மென்மையான வெளிச்சம் மீன்பிடி படகு இயந்திரத்திலிருந்து வரும் புகையையும், உள்ளூர் மீனவர்கள் வலைகளை இழுக்கும்போது, நீர் மேற்பரப்பிற்கு அடியில் நகரும் பச்சை வலைகளின் வடிவத்தையும் ஒளிரச் செய்கிறது. ஃபு யென் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் உள்ள பல உள்ளூர் மீனவக் குடும்பங்கள் பருவ காலத்தில் ஆன்கோவி வகை மீன்களைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். பாரம்பரிய மீன் சாஸை உருவாக்க உப்பிலிட்ட ஆன்கோவி மிக முக்கியமான மூலப்பொருளாகும் – இது வியட்நாமிய உணவு வகைகளின் உயிர்நாடி”.
அனைத்து புகைப்படங்களும் 2022 ஆம் ஆண்டின் பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் நிகழ்விலிருந்து பெறப்பட்டவை. இறுதிப் போட்டியாளர்களின் கண்காட்சி பிரிஸ்டலில் உள்ள தி ராயல் போட்டோகிராஃபிக் சொசைட்டியில் 20 நவம்பர் – 12 டிசம்பர் 2022 வரை நடைபெறும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com