Press "Enter" to skip to content

யுக்ரேன் – ரஷ்யா போர்: 10 சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், Reuters

ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப் பொருத்தே அமையும் என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வெள்ளியன்று தெரிவித்தார்.

யுக்ரேன் – ரஷ்யா இடையிலான போரில் சனிக்கிழமை நடந்த முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.

  • சனியன்று வடக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள சுமி எனும் நகரத்தில் ரஷ்யா தாக்குதல் மூலம் ஏவிய ஏவுகணைகள் இரண்டு இடங்களைத் தாக்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வடகிழக்கு யுக்ரேன் நகரின் நகரின் மக்கள் தொகை சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
  • யுக்ரேனின் கார்ஹிவ், ஒடேசா மற்றும் போல்டோவா ஆகிய நகரங்களின் உள்ளூர் அதிகாரிகளும் ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு தாங்கள் உள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.
  • போல்டோவா பகுதியில் ரஷ்யாவின் க்ரூஸ் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக தி இன்டெர்ஃபேக்ஸ்-யுக்ரேன் செய்தி முகமை தெரிவிக்கிறது.
  • இதே பகுதியில் உள்ள கார்லிவ்கா எனும் நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் உள்கட்டமைப்பு வசதியை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் தீ உண்டானதுடன் கட்டடங்களும் சேதமடைந்தன.ஆனால் இதில் யாரும் உயிரிழக்கவோ காயம் அடையவோ இல்லை என்று அந்த செய்தி முகமை கூறுகிறது.
  • ஒடேசா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யாவின் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த நகரமும் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிகவும் முக்கியமான துறைமுக நகரான ஒடேசா சுமார்10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. ரஷ்யா மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது இந்நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

6. யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்ஹிவ் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருவதாக அந்தப் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

7. உத்தி ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த கார்ஹிவ் பகுதியை யுக்ரேன் படையினர் ரஷ்ய தாக்குதலில் இருந்து விரைவில் விடுவிக்கக்கூடும் என்று அமெரிக்காவில் இருந்து எங்கும் இன்ஸ்டியூட் பார் தி ஸ்டடி ஆஃப் வார்ஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

8. பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது மேரியோபோல் நகரத்தில் இன்னும் சிக்கியிருக்கும் குடிமக்களையும் அங்குள்ள அசோவ்கடை எனும் இரும்பாலையில் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்புப் படையினரையும் விடுவிப்பதற்கான ராஜிய ரீதியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Italy orders seizure of yacht linked to Putin

பட மூலாதாரம், Reuters

9. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் தொடர்புடைய 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொகுசு படகு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளின் கீழ் கைப்பற்றுவதற்கு இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தாலியில் பழுதுபார்க்கப்பட்டு வரும் இந்தப் படகின் உரிமையாளருக்கு ரஷ்ய அரசின் முக்கிய உறுப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இத்தாலி நிதியமைச்சகம் தெரிவிக்கிறது.

10. கடந்த மாதம் யுக்ரேன் தலைநகர் கீயவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள ரஷ்யா முடிவெடுத்த பின்னர், யுக்ரேனின் கிழக்குப் பகுதி போரின் மையமாக நீடித்து வருகிறது.

11. யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சேவெரோடொனேட்ஸ்க் எனும் நகரத்தில் யுக்ரேனின் சிறு ஆயுதக் குழுக்கள் எதிர்த்து போராடி வருவதால் ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் முன்னேற முடியாத நிலைமை இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்பு சுமார் ஒரு லட்சம் பேர் வசித்த இந்த நகரம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.

12. யுக்ரேன் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில், யுக்ரேனால் அங்கீகரிக்கப்படாத டொனேட்ஸ்க் மக்கள் குடியரசு பிராந்தியத்தில் உள்ள பாச்மூட் நகரில் யுக்ரேன் அரசு நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரிவினைவாதிகள் தெரிவிக்கிறார்கள். இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13. இதனிடையே வெள்ளியன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு ராணுவ உதவியாக 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவித் தொகுப்பை அறிவித்துள்ளார்.

14. வெள்ளியன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் யுக்ரேன் – ரஷ்யா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ”போர்” , ”படையெடுப்பு” அல்லது ”மோதல்” ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

15. ஞாயிறு மற்றும் திங்களன்று நடடக்கவுள்ள பெர்லினில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை நினைவுகூரும் நிகழ்வுகளின்போது, போர் நினைவவிடங்களில் ரஷ்யா மற்றும் யுக்ரேனின் கொடிகளைக் கட்டுவதை ஜெர்மனி காவல்துறை தடை செய்துள்ளது. தங்களைத் தாங்களே குடியரசுகளாக அறிவித்துக்கொண்ட யுக்ரேனின் பிரிவினைவாதப் பகுதிகளின் கொடிகள் மற்றும் ரஷ்ய போர் குறியீடுகள் ஆகியவற்றைக் காட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »