Press "Enter" to skip to content

சீனா vs தைவான் – தைவான் தீவின் சுதந்திரம் போருக்கு வழிவகுக்கும் – எச்சரிக்கும் சீனா

பட மூலாதாரம், Reuters

தைவான் தீவை சீனாவிலிருந்து சுதந்திர தனிநாடாக்கும் எந்தவொரு முயற்சியும் பெய்ஜிங் படைகளின் ராணுவ நடவடிக்கையைத் தூண்டும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் லாயிட் ஆஸ்டினை சந்தித்தார்.

தைவானை சீனாவிலிருந்து பிரிப்பதைத் தடுப்பதற்கு “எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போராடுவதைத்” தவிர சீன ராணுவத்திற்கு வேறு வழியில்லை என்று வெய் கூறினார்.

பிறகு, ஆஸ்டின் சீனாவின் ராணுவ நடவடிக்கை “ஆத்திரமூட்டும், ஸ்திரமின்மை” கொண்ட செயல் என்று கூறினார்.

தைவான் தீவுக்கு அருகில் சீன விமானங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தினமும் பறப்பதாக அவர் கூறியவர், “இது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது,” என்றார்.

சுயமாக ஆட்சி செய்யப்படும் தைவானை, சீனா அதன் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது. தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனையைக் கண்டிக்க வெய் ஃபெங்கேவை தூண்டியதும் அந்த நிலைப்பாடு தான்.

“யாராவது தைவானை சீனாவிலிருந்து துண்டித்தால், சீன மக்கள் விடுதலை ராணுவம் எந்த விலையையும் கொடுத்துப் போராடி ‘தைவான் சுதந்திரம்’, தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எந்தவொரு முயற்சியை நசுக்குவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் அவரை மேற்கோள் காட்டினார்.

சீனாவின் ஒரே அரசாங்கமாக பெய்ஜிங்கை அங்கீகரித்து, தைவானின் சுதந்திரத்தை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டைத் தொடர்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக ஆஸ்டின் கூறினார்.

அமெரிக்க மற்றும் சீன பாதுகாப்புத் தலைவர்களின் முதல் சந்திப்பு

பட மூலாதாரம், EPA

படை பலம் மூலம் பதற்றத்தைத் தீர்க்க எந்த முயற்சியும் இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஷங்ரி-லா டயலாக் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு நடைபெற்ற இந்த சந்திப்புதான், அமெரிக்க மற்றும் சீன பாதுகாப்புத் தலைவர்களின் முதல் சந்திப்பு.

வெய் ஃபெங்கே, பேச்சுவார்த்தைகள் “சுமூகமாக நடந்தன” என்றார். மேலும், இரண்டு தரப்புமே பேச்சுவார்த்தை நல்லபடியாக அமைந்ததாக விவரித்தன.

ஆஸ்டின், எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்ப்பதற்காக, சீன ராணுவத்துடன் தொடர்புகளை முழுமையாகப் பேணுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார்.

மே மாத இறுதியில் தைவான் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரிக்கத் தனது போர் விமானங்களை நிலை நிறுத்தியதாகக் கூறியது. இந்தச் சம்பவம், ஜனவரி மாதத்திற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய சீன ஊடுருவல் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் 22 தைவானிய போர் விமானங்கள், மின்னணு போர்முறை, முன்னெச்சரிக்கை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை அடங்கும் என்று தைவானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Presentational grey line

சீனா – தைவான் உறவிலுள்ள சிக்கலின் அடிப்படை

சீனா vs தைவான்

சீனாவுக்கு தைவானுக்குமான உறவு மோசமாக இருப்பது ஏன்?

சீனாவும் தைவானும் 1940-களில் உள்நாட்டுப் போரின் போது பிளவுபட்டன. ஆனால், பெய்ஜிங் ஒரு கட்டத்தில் அது மீண்டும் தன்னோடு இணைக்கப்படும் என்று கூறியது. அதைத் தேவைப்பட்டால் பலவந்தமாகக் கூடச் செய்வதாகவும் கூறியது.

தைவான் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது?

தைவானுக்கு என சொந்த அரசமைப்பு உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அதன் ஆயுதப் படைகளில் சுமார் 3,00,000 துருப்புகள் உள்ளன.

தைவானை யார் அங்கீகரிப்பது?

சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரிக்கின்றன. பெய்ஜிங்கில் உள்ள சீன அரசாங்கத்தை பெரும்பாலானவர்கள் அங்கீகரிக்கின்றனர். தைவானுடன் அமெரிக்காவுக்கு அலுவல்பூர்வ உறவுகள் எதுவுமில்லை. ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அந்தத் தீவுக்கு வழங்க வேண்டும் என்ற வகையிலான சட்டம் அமெரிக்காவில் உள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »