Press "Enter" to skip to content

எல் சால்வடோர்: பிட்காயின் மூலம் அன்றாட தேவைகளை வாங்கும் உலகின் முதல் நாடு

  • ஜோ டைடி
  • பிபிசி நியூஸ்

  • நொறுக்குத்தீனிகள் முதல் பெட் கதாபாத்திரம்,டீசல் உட்பட வீடுகள் வரை என அனைத்தையும் எல் சால்வடோரில் நீங்கள் பிட்காயின்கள் மூலம் வாங்க முடியும்.
  • எல் சாண்டே கடற்கரை நகரம் சுமார் 3,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை பெற்று பிட்காயின் பீச் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
  • இந்த அரசு எப்போது, எந்தப் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கினார்கள் என்பதே எங்களுக்குத் தெரியாது என்று தெரிவிக்கிறார் பொருளியல் அறிஞர் டாட்டியானா.

பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் மதிப்பு கடந்த வாரங்களில் தொடந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த வரிசையில், மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு முன்பு, மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை பிட்காயினில் முதலீடு செய்து, பிட்காயின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாகவும் மாற்றிய நாடான எல் சால்வடோர், தற்போது அன்றாட செலவுகளைக் கூட பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

நொறுக்குத்தீனிகள் முதல் பெட் கதாபாத்திரம்,டீசல் உட்பட வீடுகள் வரை என அனைத்தையும் எல் சால்வடோரில் நீங்கள் பிட்காயின்கள் மூலம் வாங்க முடியும். கூகுள் பே, பேடிஎம் என கணினி மயமான பணம் மூலம், இந்தியாவின் தெருக்களில் கிடைக்கும் மிகச்சிறு பொருட்களைக் கூட எப்படி வாங்க முடிகிறதோ அதுபோல கிரிப்டோகரன்சி மூலம் எல் சால்வடோரில் பொருட்களை வாங்க முடியும்.

2008ஆம் ஆண்டுவாக்கில், கிரிப்டோகரன்சி குறித்து இணையதளங்கள் பேசத்தொடங்கிய காலகட்டத்தை இப்போது நினைத்துப்பார்த்தால் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றன என்பது தெரிகிறது.

கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்குவது என்ற அந்நாட்டு அதிபர் நயிப் புக்கேலேவின் முடிவால், அந்த நாட்டில் அனைத்து தொழில்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமாக அதாவது எல் சால்வடோரின் இன்னொரு பணமாக பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்பட்டது (டாலரைப் போலவே) என்றுதான் பொருள்.

ஆனால், அண்மைக்காலமாக நடந்து வரும் கிரிப்டோகரன்சியின் சரிவால் ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக நாட்டின் பொதுப்பணத்தில் 100 மில்லியன் டாலருக்கு பிட்காயின்கள் வாங்கிய கொள்கை முடிவின் மீது.

ஒவ்வொரு முறை பிட்காயின் வாங்கப்பட்டபோதும் அதனை அதிபர் ஒரு ட்வீட்டுடன் கொண்டாடியது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

பிட்காயின் பீச்

எல் சால்வடோரின் பிட்காயின் இயக்கம் தொடங்கியது எல் சாண்டே கடற்கரையில் இருந்துதான். தென்கடற்கரையில் இருக்கும் சிறிய அளவிலான அலைச்சறுக்கு மற்றும் மீன்பிடி நகரமான இங்குதான், கிரிப்டோகரன்சியை விரும்பும் குழு ஒன்றுக்கு தனது முதல் நன்கொடையை பிட்காயின்களாக அளித்தார் ஒரு அடையாளம் தெரியாத நபர்.

அந்த நபர் யாரென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை என்னவென்றால், இந்தக் காயின்களை டாலர்களாக மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

பிட்காயின் பீச்

பொருட்களை வாங்கி விற்கும் பரிவர்த்தனையானது முழுக்க முழுக்க பிட்காயின்கள் மூலமாகவே முழுமையாக நடைபெறும் `பிட்காயின் பொருளாதார` சூழலை உருவாக்குவதுதான் இந்த யோசனைக்கான காரணம். இதன் மூலம் பிட்காயினை கொடுத்து பொருள்வாங்கி பிட்காயினாகவே சில்லறையையும் வாங்க முடியும்.

இது ஒரு ஆழமான யோஈசனைதான். குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர, உலகமெங்கும் கணினிமய வர்த்தகமாக மட்டுமே இருக்கும் பிட்காயின்களை, அங்காடித்தெருக்களில் பயன்படுத்த முடியும் என்பது சாத்தியமற்ற யோசனையாகவே இருக்கும்,

பெயர் தெரியாத அந்த முதல் நன்கொடையாளர் கொடுத்த பிட்காயின்களில் தொடங்கி இன்று வரை, எல் சாண்டே கடற்கர நகரம் சுமார் 3,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்த நகரம் பிட்காயின் பீச் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

இந்த பிட்காயின்கள் மூலம் பயன்பெற்ற முதல் பயனர்களில் கத்ரீனா கோண்ட்ரியெரஸும் ஒருவர்.

கத்ரீனா கோண்ட்ரியெரஸும்

இரண்டாண்டுகளுக்கு முன்பு, கொரோனா காலத்தில், கத்ரீனா ஒரு உயிர்காத்தல் தொடர்பான பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்தவர்கள் போக்குவரத்து மற்றும் உணவுக்கான தொகையை பிட்காயின்களாக வழங்கினர்.

பின்னர் இந்தப் பயிற்சியை முடித்த பிறகு 6 மாதங்கள் நாங்கள் வேலை செய்தோம். அதற்கான சம்பளமும் பிட்காயின்களாகவே எங்களுக்கு வழங்கப்பட்டது என்கிறார் கத்ரீனா.

அதுபோக பிட்காயின் சுற்றுலாப்பயணிகள், யூ ட்யூபர்கள் என தங்கள பிட்காயின்களை செலவிடுவதற்காக இங்கு வரும் பயணிகளால், இந்த நகரத்தில் உள்ள தொழில்கள் சில, 30% வரை உயர்வைக் கண்டுள்ளன. ஆனாலும், பிட்காயினை ஏற்றுக்கொள்வது என்பதில் இன்னும் சீரானநிலை இல்லை.

மானியங்கள்:

நாட்டின் பிட்காயின் சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருந்தாலும், பிட்காயினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த தொழில்களுக்கும் கட்டாயப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அரசு தெரிவிக்கிறது. மேலும் பிட்காயினைப் பயன்படுத்தினால் அரசு சார்பில் ஊக்கத்தொகை ஏதும் வழங்கப்படுவதும் கிடையாது.

எப்படிப்பார்த்தாலும் ரொக்கப் பணம்தான் ராஜா. சால்வடோரில் 50%க்கும் மேற்பட்ட மக்களிடம் வங்கிக்கணக்கே கிடையாது. ஆனால், அதிபர் புக்கேலே, 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை, சலுகை விலையில் பிட்காயின்களை வாங்க வழிவகை செய்யும் சிவோ என்ற மொபைல் செயலிக்காக செலவிட்டுள்ளார். இந்த செயலி ஒரு பரிவத்தனை செயலி. நாம் பயன்படுத்தும் கூகுள் பே,தொலைபேசி பே போல.

இந்தச் செயலியை ஒருவர் தரவிறக்கி பதிவு செய்தால் 30$ மதிப்புள்ள பிட்காயின்கள் வழங்கப்படும். இதன் விளைவாகத்தான் 6.5மில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 4 மில்லியன் முறை இந்தச் செயலி தரவிறக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலானோர் இதனை டாலர் பரிவர்த்தனைகளுக்காகவே பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர், தன் குடும்பத்துக்கு டாலர்களை எந்த விதமான குடுதல் கட்டணங்களும் இன்றி அனுப்ப இந்த செயலியைப் பயன்படுத்துகிறார்.

அதிபர் நயிப் புக்கேலே

பட மூலாதாரம், BITCOIN 2021 / BITCOIN MAGAZINE

இதன் மூலம், சிவோ செயலி மீது தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் தொடர்ந்து இருப்பதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இந்தச் செயலியை பயன்படுத்துவதால் கிடைக்கும் அடுத்த நன்மை ஒரு செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனையில் இருந்தது.

இங்கு செல்லப்பிராணிகளுக்கான எல்லாவிதமான சிகிச்சைக்கும் வெறும் 25 செண்ட் தான். இதனை சிவோ செயலி மூலமாகவே செலுத்தலாம். (பிட்காயினாக செலுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும்)

இதன்மூலம் லாபம் கிடைப்பதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பிட்காயின்கள் மூலம் எப்படி லாபம் ஈட்டப்படுகிறது? இந்தப் பணம் எப்படி அந்த மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது ஆகிய கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

பொது நிதி

பொருளாதார பயன்பாட்டில் இதன் நிலையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி, பிட்காயினை சட்டப்பூர்வமாக்கிய நடவடிக்கையை திரும்பப்பெறுமாறு சர்வதேச பண நிதியம் எல் சால்வடோரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டாட்டியானா மாரோக்கின் போன்ற பொருளியல் அறிஞர்களும் இதுகுறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லை. எனவே மேலும் மேலும் பொதுநிதியை கிரிப்டோகரன்சியில் கொட்டி ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்கிறார் டாட்டியானா.

மேலும், வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்லும் டாட்டியான இந்த அரசு எப்போது எந்தப் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கினார்கள் என்பதே எங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவிக்கிறார்.

பொது நிதி

பிட்காயினின் மதிப்பு குறைந்து வந்தாலும், சால்வடோர் மக்கள் அதிபர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் வால்டீஸ்.

அதிபரின் ஒவ்வொரு முடிவுமே சரியான நேரத்தில் எடுக்கப்படுகின்றன. மக்கள் அவரது முடிவுகள் மீதும் நாட்டின் பொருளாதாரத்தின் போக்குமீதும் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கிரிப்டோகரன்சியின் மதிப்பு குறைவதற்கு முன்பாக, பிற நாடுகள் கூட எல் சால்வடோரின் இந்த முடிவை பின்பற்றுவது குறித்து ஆலோசித்து வந்தன. மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அதிபரும் கூட பிட்காயினை உலகளாவிய பணம் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

மேலும், எல் சால்வடோர் இதில் மேற்கொண்டு தொடர்ந்துசெல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »