பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்மேலாய்வுடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது.
கன்மேலாய்வுடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
முன்னதாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.
பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் “சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக” நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு,” என்று தெரிவித்தார்.
இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், “அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை,” என்று தெரிவித்தார்.
மேலதிக தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com