பட மூலாதாரம், PA Media
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி பரவலாக தேடுபொருளாகியுள்ளது. அதே போல, அடுத்த பிரதமரை கன்மேலாய்வுட்டி கட்சி என்ன முறையில் தேர்வு செய்யும் என்பது குறித்தும் பலரும் தேடி வருகின்றனர். இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகள் இதோ.
இதற்கு முன்னதாக, கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் ஒரு பிரதமர் பதவி விலகினால் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர், பதவியில் இருப்பார்.
தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடலாம்.
போட்டியிடப்போவது யார் யார் என்று உறுதியான பிறகு, இரண்டுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்தால், இரண்டு பேராகும் வரை பல சுற்றுகள் தொடர் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்.
முதல் சுற்றில் போட்டியாளர்கள் 5% வாக்குகளைப் பெற வேண்டும். அப்படி பெற முடியாதவர்கள் வெளியேற வேண்டும்.
இரண்டாம் சுற்றில் 36 பேரின் வாக்குகளைப் பெற வேண்டும்
இப்படியாக தொடர்ந்து வரும் சுற்றில் கடைசியாக இரண்டு போட்டியாளர்கள் மட்டும் மீதமிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து கன்மேலாய்வுட்டி கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து தலைவரை தேர்வு செய்வர்.

அடுத்த பிரதமர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
கட்சியின் தேர்தலில் வெல்லும் போட்டியாளர் கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் தலைவராக ஆவார். அவரிடம் பிரிட்டிஷ் அரசி ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார்.
பொதுத்தேர்தல் நடக்குமா?
வாய்ப்பில்லை.
பொதுவாக, பிரதமர் பதவி விலகினால், பொதுத்தேர்தல் நடத்தப்படாது.
ஜனவரி 2025இல் தான் அடுத்த தேர்தல் நடைபெறும். ஒருவேளை புதிய பிரதமர் விரும்பினால், பொதுத்தேர்தல் நடைபெறலாம்.
அடுத்த பிரதமர் யார்?
தற்போதைய நிலவரப்படி, உறுதிப்படுத்தப்பட்ட ஆட்கள் யாரும் இல்லை. ஆனால், சில அரசியல் தலைகளின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன.
சஜித் ஜாவித் மற்றும் ஜெர்மி ஹண்ட் ஆகியோர் ஏற்கனவே நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்கள் இந்த முறையும் போட்டியிட வாய்ப்புண்டு.
அதேபோல, வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டண்ட், முன்னாள் கருவூலர் ரிஷி சுனக், வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ், வெளியுறவு விவரங்கள் குழு தலைவர் டாம் டுகெந்தாட், பாதுகாப்பு செயலர் பென் வாலேஸ், கருவூலர் நாதிம் ஸகாவி’, அட்டர்னி ஜெனரல் ஸ்வெல்லா ப்ரேவர்மேன் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

பட மூலாதாரம், WPA POOL
போரிஸ் ஜான்சனுக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன?
அதிகாரபூர்வமாக பிரதமர் பதவியை விட்டு விலகும் வரை போரிஸ் ஜான்சனுக்கு தற்போதிருக்கும் எல்லா அதிகாரங்களும் அப்படியேதான் இருக்கும். இது ஏட்டளவில் மட்டுமே. ஆனால் உண்மையில், புதிய கொள்கைகளைக் கொண்டு வருவது போன்ற அதிகாரங்களை அவர் பயன்படுத்த முடியாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com