வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்த வாரம் பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் இந்திய வம்சாவளி ரிஷி சூனக், கள்ளக்குறிச்சி கலவரம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற பி.வி. சிந்து, ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில் தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில் தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை பிரஜைகளின் வாக்குகளினாலேயே, ஜனாதிபதி ஒருவரின் தெரிவு இடம்பெறுவது அரசியலமைப்பில் கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர், அந்தப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பொறுப்பு நாடாளுமன்றம் வசமாகும்.
இதன்படி, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட, இரண்டு ஜனாதிபதிகள் அவ்வாறு நாடாளுமன்ற வாக்குகளின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்

கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூட சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கலவரத்தை நடத்தியது யார், அவர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர்?
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார்.
ரிஷி சூனக் யார்?

பட மூலாதாரம், PA Media
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சூனக் முன்னிலையில் இருக்கிறார். சூனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரும் இன்ஃபோஸிஸ் ( Infosys) நிறுவனத்தை உருவாக்கியவர்களான நாராயண் மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மருமகன்.
போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது, சூனக் பிரிட்டனின் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஜான்சன் பதவி விலகிய பிறகு, கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியில் சூனக் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமராக இவரே வருவார் என்று கன்மேலாய்வுட்டிவ் கட்சிக்குள்ளும் வெளியிலும் பலரும் கணிக்கின்றனர்.
ஆனால், பிரதமருக்கான போட்டியில் அவர் எந்த இடத்தில் நிற்கிறார்? அவரது முன்னேற்றம் எப்படி இருக்கிறது? பிரிட்டனின் புதிய பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு

பட மூலாதாரம், Getty Images
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செவ்வாய்கிழமையன்று முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சில காலமாக அரசை தாக்கி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியிடம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், ட்விட்டரில் ஒரு வரைபடத்தை (graph) பகிர்ந்த ராகுல் காந்தி, பழைய அறிக்கை ஒன்றை பிரதமருக்கு நினைவுபடுத்தினார். நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தின் அறிக்கை இது.
சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார் பி.வி. சிந்து

பட மூலாதாரம், Yong Teck Lim/Getty Images
சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வாங் சியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் பி. வி. சிந்து.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் சிந்து சீன வீராங்கனை வாங் சியை 21 -9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com