- ஃபர்ஹத் ஜாவேத்
- பிபிசி உருது, இஸ்லாமாபாத்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆட்சியின்போதும் மக்கள் பணவீக்கம் பற்றி புகார் கூறிவந்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என எல்லா பிரிவு மக்களுமே சிரமப்படுகின்றனர்.
பொதுவாக பணம் இருப்பவர்கள்கூட விலைவாசி உயர்வு பற்றி குறைகூறுவார்கள். ஆனால் சாதாரண வேலை செய்யும் குடிமக்களுக்கு இது ஒரு பெரிய போர். அவர்கள் ஒவ்வொரு நாளும் போராட வேண்டும்.
விலைவாசி உயர்வு என்பது ஒரு சுரங்கப்பாதை. அதன் முடிவில் வெளிச்சம் இல்லை என்று ராவல்பிண்டியில் வசிக்கும் காலிதா க்வாஜா கூறுகிறார். அவர் நடுத்தர குடும்பத்த்தைச்சேர்ந்தவர். இப்போதெல்லாம் ‘சொந்த வீடு’, மற்றும் ‘குழந்தைகளின் முழுமையான கல்வி’ மட்டுமே அவருக்கு இருக்கும் நிம்மதி.
இப்போது தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் போது, விலைவாசி உயர்வு தன்னை திகைக்கவைக்கிறது என்கிறார் அவர்.
“இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறொருவரின் திருமணத்திற்குச் செல்வதற்கு முன் நான் பலமுறை யோசிக்கிறேன். என் வீட்டில் திருமணம் செய்வது என்பது தற்போது மிகவும் கடினமாகத் தெரிகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
காலிதாவின் வீட்டின் வரவுசெலவு கணக்கை அறிவதற்கு முன், விலைவாசி உயர்வு ஏன் அனைவரையும் கழுத்தையும் நெரிக்கிறது என்பதை அறிய சில புள்ளிவிவரங்களை பார்ப்போம்.

பட மூலாதாரம், Getty Images
காய்கறிகள், பால், முட்டை, உணவுப் பொருட்களின் விலை என்ன?
நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் பணவீக்கம் கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று பாகிஸ்தானின் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது.
பருப்பு விலை 35 முதல் 92 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 60 சதவிகிதமும் இறைச்சியின் விலை 26 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் விலை 40 சதவிகிதமும், பழங்களின் விலை 39 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
பால் விலை 25 சதவிகிதமும், முட்டை மற்றும் தேயிலையின் விலை 23 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
பிற பொருட்களின் விலை அதிகரிப்பு என்ன?
உணவுப்பொருட்களின் நிலை இதுதான். இப்போது மற்ற பொருட்களையும் பார்க்கலாம்.
குளிப்பதற்கான சோப்பு, துணிதுவைக்கும் சோப்பு பொடி மற்றும் தீப்பெட்டியின் விலை 25% உயர்ந்துள்ளது.
ஆடைகளின் விலை 18 சதவிகிதமும், காலணிகள் 19 சதவிகிதமும், நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களின் விலை 19 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
வாகனங்களின் எரிபொருள் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
மின் கட்டணம் 87 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

‘இப்போது பிரியாணி மசாலா வாங்குவது பணவிரயம் போலத்தெரிகிறது’
இன்று ஒரு சாதாரண குடும்பத்தில் வரவு செலவுத் திட்டத்தை நிர்வகிப்பது மிகவும் கடினம் என்று காலிதா க்வாஜா கூறுகிறார்.
அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். இவரது கணவர் சிறுதொழில் செய்து வருகிறார், இவரது மகன் ஒருவர் சமீபத்தில் தனியார் துறையில் வேலை செய்யத் தொடங்கினார்.
விலைவாசியுடன் கூடவே வருமானமும் அதிகரித்துள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே வருமானம்தான் இப்போதும் உள்ளது. தேவைகளும் அதேதான். ஆனால் விலைவாசி அதிகரிப்பால் செலவுகள் மிகவும் அதிகமாகிவிட்டன. மளிகைக்கடையில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாலும், இரண்டு பைகள் கூட நிரப்புவதில்லை. பாக்கெட் முற்றிலும் காலியாகிவிடுகிறது,”என்றார்.
“ஒவ்வொரு முறை கூடையில் எதாவது ஒரு பொருளை வைக்கும் முன், அது இல்லாமல் என்னால் வாழ முடியுமா என்று நான் சிந்திக்கிறேன். இப்படி நினைத்து பாதி சாமான்களை அப்படியே திருப்பி வைத்துவிடுகிறேன். முன்பு முக்கிய சாமான்கள் தவிர எனக்குப்பிடித்த சிலவற்றையும் வாங்குவேன். ஆனால் இப்போது பிரியாணி மசாலா கூட வாங்குவதில்லை. ஏனென்றால் இதுவும் காசு விரயம் என்று தோன்றுகிறது,” என்று காலிதா குறிப்பிட்டார்.

‘இப்போது பிரியாணிக்கு பதிலாக பருப்பு-சாதம் சமைக்கிறேன்’
சாப்பிடுவதையும் குடிப்பதையும் விட்டுவிட முடியுமா என்று காலிதா கேட்கிறார். ‘எண்ணெய், நெய், மாவு, பருப்பு எல்லாவற்றையும் விட்டுவிட முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“ஏற்கனவே கோழி மற்றும் இறைச்சியை வாங்கமுடியாத நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். முன்பு எல்லா நேரங்களுக்கும் புதிய உணவுகள் சமைக்கப்பட்டன. இப்போது மதிய உணவை இரவிற்கும் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம்,” என்றார் அவர்.
“முன்பு நான் பிரியாணி சமைப்பேன். இப்போது நான் பருப்பு, சாதம் சமைக்கிறேன். இவைதான் என்னால் குறைக்கமுடிந்த செலவு.”
மின்கட்டணத்தைப் பற்றிப் பேசிய அவர், ” மின்சாரக் கட்டணம் எல்லோருக்குமே ஒரு சுமையாக உல்ளது. இரண்டு ஏசிகளில் ஒன்றை மட்டுமே இயக்குகிறோம், அதுவும் வெய்யில் மிக அதிகமாக இருக்கும்போது. அது தவிர ஃப்ரிட்ஜ் ஓடுகிறது. வாஷிங் மிஷினை வாரம் ஒருமுறை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த மாதம் மின்சார பில் 30 ஆயிரம் ரூபாய் வந்தது,”என்றார்.

பட மூலாதாரம், Getty Images
‘உறவினர்களை பார்க்கச்சென்றால் கல்லெண்ணெய் செலவு’
அதிகரித்து வரும் கல்லெண்ணெய் விலையைப் பற்றிப்பேசிய காலிதா, “ஆண்கள் பெரும்பாலும் மோட்டார் மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். குடும்பம் ஒன்றாக செல்லும்போது நாங்கள் தேர் பயன்படுத்துகிறோம்.
ஆனால் இப்போது உறவினர் வீடுகளுக்குச் செல்வது மிகவும் குறைந்துவிட்டது. ஏனென்றால் கல்லெண்ணெய் செலவு ஒருபுறம். கூடவே ஒருவரின் வீட்டிற்கு வெறுங்கையுடன் போகமுடியாது.”என்று தெரிவித்தார்.
அன்றாடத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யமுடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்துவிட்டது என்கிறார் காலிதா க்வாஜா. அத்தகைய சூழ்நிலையில் அவசரகாலங்களுக்காக கையில் எதுவும் மிச்சமிருப்பதில்லை என்று அவர் மேலும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com