- வனேசா புஷ்ஷுல்டர்
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், Getty Images
கியூபபா புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவரும், வேறு பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல நாடுகளில் கம்யூனிஸ்ட் புரட்சியை நிகழ்த்த முயன்றவருமான எர்னஸ்டோ சே குவேராவின் மகன் கமிலோ குவேரா தனது 60 வயதில் வெனிஸ்வேலாவில் காலமானார்.
நுரையீரலில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார் என்கிறார்கள் கியூபாநாட்டு அதிகாரிகள்.
ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூப புரட்சிக்காக பாடுபட்ட தம் தந்தையின் வாழ்க்கையை ஆவணப்படுத்துவதிலேயே தம் வாழ்வின் பெரும் பங்கை செலவிட்டார் கமிலோ.
ஆல்பர்ட்டோ கொர்டா எடுத்த சே குவேராவின் புகழ்பெற்ற படத்தை, வணிக ரீதியாக பயன்படுத்த கேமிலோ தொடர்ந்து எதிர்த்துவந்தார்.
சே குவேராவுக்கும், அவரது இரண்டாவது மனைவி அலெய்டாவுக்கும் பிறந்த 4 குழந்தைகளில் ஒருவர் கமிலோ.
இவரது மூத்த சகோதரி அலீடா, குடும்பத்தின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பேற்ற வேளையில், கமிலோ கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள சே குவேரா ஆய்வு மையத்தை வழிநடத்தி வந்தார்.
சே குவேராவின் தனிப்பட்ட ஆவணங்கள் இங்குதான் சேமிக்கப்பட்டுள்ளது. அந்த மையம் புரட்சித் தலைவரின் “வாழ்க்கை, பணி மற்றும் சிந்தனை” ஆகியவற்றை உலகுக்கு உரைக்கும் சாட்சியாக உள்ளது.
வெனிஸ்வேலா தலைநகர் கராகஸுக்கு வந்து மேற்கொண்டிருந்த போது கமிலோ குவேரா உயிரிழந்ததாக கியூபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கனெல் ஒரு ட்வீட்டில், “ஆழ்ந்த வருத்தத்துடன், சேவின் மகனும் அவரது யோசனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவுக்கு நாம் பிரியாவிடை கொடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அர்ஜென்டீனாவில் பிறந்த சே குவேரா, ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வெற்றிகரமான போராட்டத்தில் சகோதரர்கள் ஃபிடல் மற்றும் ரவுல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா புரட்சியின் மிகவும் பிரபலமான முகமாக ஆனார்.
கமிலோ குவேரா, சே குவேரா மற்றும் அவரது சக புரட்சிக்குழுவைச் சேர்ந்த அலீடா மார்ச்சுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை கமிலோ.

பட மூலாதாரம், Getty Images
தனது தந்தை பொலிவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டபோது கமிலோவுக்கு வயது ஐந்து. அந்த நேரத்தில் பொலியாவுக்கு சே குவேரா ஒரு கெரில்லா குழுவை அமைப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
சட்டம் படித்துள்ள இவர், தனது தந்தை விட்டுச் சென்ற ஆவணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை கவனித்துக்கொள்வதற்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டார்.
கியூப புரட்சிக்குப் பிறகு தனது சகோதரி ஜுவானிட்டா காஸ்ட்ரோ மற்றும் அவரது மகள் அலினா பெர்னாண்டஸ் போன்றோர், புரட்சிக்கு எதிரான விமர்சனகர்களாக குரல் கொடுத்த வேளையில், கமிலோ குவேரா காஸ்ட்ரோ சகோதரர்களுக்கு விசுவாசமாக இருந்தார்.
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அவர், ஒரு கையில் லைக்கா ஒளிக்கருவி (கேமரா)வையும், மறு கையில் சுருட்டையும் எப்போதுமே பிடித்தபடியே பெரும்பாலும் நேரத்தை கழிப்பார்.
85 வயதாகும் தாயார் அலீடா, 61 வயதான சகோதரியும் குழந்தை நல மருத்துவருமான அலீடா, கால்நடை மருத்துவரான இளைய சகோதரி செலியா, இளைய சகோதரரும் மோட்டார் பயண ஆர்வலரான எர்னஸ்டோ ஆகியோர் மட்டுமே இவரது குடும்ப உறவுகள்.
மறைந்த கியூப பாடகர் சுய்லன் மிலானெஸுடனான திருமணம் வழியாக பெற்ற ஒரு மகளும், வெனிசுலா ரோசா அலிசோவுடனான இரண்டாவது திருமணம் மூலம் பிறந்த இரண்டு மகளுக்கும் கமிலோவுக்கு உள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com