வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்த வகையில், விக்ராந்த் போர் கப்பல், பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு, ஒரே நாடு ஒரே உரம் திட்டம், நொய்டா இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்பட்டதன் பின்னணி, இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோதி

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதில் மிகப் பெரியதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுமான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிநவீன ஆட்டோமேஷன் அம்சங்களுடன் கூடிய போர்க்கப்பலின் செயல்பாடுகளை அவர் தொடக்கி வைத்தார்.
பாகிஸ்தான் வெள்ளம்: தீவுகளாக மாறிய ஊர்கள்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மனூர் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றின் குறுக்கே சிக்கித் தவிக்கின்றனர். குறைந்தது பத்து பாலங்கள் மற்றும் கட்டடங்கள் நாசமடைந்துள்ளன.
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர மூட்டைகளை ‘பாரத்’ என்ற பெயரில்தான் விற்பனை செய்யவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு உர நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான விவசாயிகளும் இந்த திட்டத்தால் தங்களுக்கு பயனில்லை என்கிறார்கள்.ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை இந்திய அரசு ஏன் கொண்டு வருகிறது?
நொய்டா இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
நொய்டாவில், 318 அடி உயரமுள்ள இரட்டை கோபுரம் விதிகளை மீறி கட்டப்பட்ட காரணத்துக்காக இடிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இவ்வளவு உயரம் கட்டி எழுப்பப்படும் வரை அது தெரியவில்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அடிக்கல் நாட்டியது முதல் இடிக்கப்பட்டது வரை இந்த கோபுர விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை காலவாரியாகப் பார்க்கலாம்.நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதன் பின்னணி
இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு

இலங்கையின் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது. மன்னார் மாவட்ட மக்கள், மீனவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துக்கொண்டிருந்தனர்.இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டம்: வலுக்கும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com