பட மூலாதாரம், Getty Images
செப்டெம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ள இறுதிச் சடங்குக்காக பால்மோரலில் வைக்கப்பட்டிருந்த ராணியின் சவப்பெட்டி தமது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் இந்த இடைப்பட்ட நாட்களில் ராணிக்கு தங்கள் அஞ்சலியை செலுத்த மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பின் லண்டனில் வைக்கப்படும்.
இந்த நாட்களில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் நான்கு நாடுகளுக்கும் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் பயணம் மேற்கொள்வார்.
ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள் இங்கே.
ஞாயிற்றுக்கிழமை – செப்டெம்பர் 11

ஓக் மரத்தில் செய்யப்பட்ட ராணியின் சவப்பெட்டி பால்மோரல் கோட்டையின் பால்ரூமில் இருந்து இறந்த உடலை எடுத்துச் செல்வதற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டது.
சுமார் 10 மணியளவில் பால்மோரலில் இருந்து எடின்பரோவுக்கு அவரது உடல் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த 160 கிலோமீட்டர் தூரம் சுமார் ஆறு மணி நேர பயணமாகும்.
அங்கு அவரது உடல் ஹோலிரூட்ஹவுஸ் மாளிகையின் அரியணை அறைக்கு கொண்டு செல்லப்படும்.
ஸ்காட்லாந்தில் இதுதான் ராணி அல்லது அரசரின் அலுவல்பூர்வ வசிப்பிடமாகும்.
இதே நாளில் லண்டனில் அரசர் காமன்வெல்த் நாடுகளின் பொதுச் செயலாளரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திப்பார்.
அந்த அரண்மனையில் உள்ள பவ் அறையில் அவர் தலைவராக இருக்கும் நாடுகளின் உயர் ஆணையர்களைச் சந்தித்து விருந்தளிப்பார்.
திங்கள்கிழமை – செப்டெம்பர் 12

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்திற்கு சென்று அரசர் சார்ல்ஸ் தமது நாளைத் தொடங்குவார்.
அங்கு நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களும் கூடித் தங்களது இரங்கலைத் தெரிவிப்பார்கள்.
அரசு துணைவியார் கமில்லாவுடன் விமானம் மூலம் அரசர் எடின்பரோ செல்வார்.
இது அவருடைய அறுவை சிகிச்சை ஸ்ப்ரிங் டைடில் ஓர் அங்கமாகும். அறுவை சிகிச்சை ஸ்ப்ரிங் டைட் என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராக அவர் பொறுப்பேற்ற பின்பு நான்கு நாடுகளுக்கும் மேற்கொள்ளும் முதல் பயணத்தை குறிப்பதற்கான சொல்.
அன்று மதியம் ராணியின் சவப்பெட்டி அரசர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் பங்கெடுக்கும் ஊர்வலத்தில் மூலம் செயிண்ட் கைல்ஸ் தேவாலயத்துக்கு செல்லும்.
அங்கு ராணியின் உடல் 24 மணி நேரம் வைக்கப்படும் அப்பொழுது பொதுமக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்தலாம்.
அதன் பின்பு அரசர் ஹோலிரூட்ஹவுஸ் மாளிகைக்கு செல்வார். அங்கு ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்காலோ ஸ்டர்ஜியானுடன் சந்திப்பார்.
பின்னர் அரசர் மற்றும் அரச துணைவியார் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு சென்று அங்கு நிறைவேற்றப்படும் இரங்கல் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
மாலையில் செயின்ட் கைல்ஸ் தேவாலயம் செல்லும் அரசர், அரச குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு இரா விழிப்பு நிகழ்வில் பங்கேற்பார்.
செவ்வாய்க்கிழமை – செப்டெம்பர் 13

அரசர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள நான்கு நாடுகளுக்குமான பயணத்தைத் தொடர்வார். செவ்வாயன்று வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் செல்வார்.
அவருடன் அரச துணைவியார் கமில்லாவும் செல்வார். அங்கு ஹில்ஸ்போரோ கோட்டையில் வடக்கு அயர்லாந்துடன் ராணிக்கு இருந்த நீண்ட கால தொடர்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அவர்கள் பார்ப்பார்கள்.
அதன் பின்பு வடக்கு அயர்லாந்தின் வெளியுறவுச் செயலர் கிறிஸ் ஹீட்டன் ஹாரிஸ் மற்றும் பிற கட்சி தலைவர்களை அரசர் சார்ல்ஸ் சந்திப்பார்.
வடக்கு அயர்லாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் அளிக்கப்படும் இரங்கல் செய்தியையும் அவர் ஏற்றுக்கொள்வார்.
அதன்பின்பு மதத் தலைவர்களைச் சந்திக்கும் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் கமில்லா செயின்ட் ஆன் தேவாலயத்தில் நடக்கும் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் லண்டன் திரும்புவார்கள்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நாளில் செயின்ட் கைல்ஸ் தேவாலயத்திலிருந்து எடின்பரோ விமான நிலையத்திற்கு அரசியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்.
அங்கிருந்து ராணியின் உடல் ராயல் ஏர் ஃபோர்ஸின் நார்ட்ஹோல்ட் விமான தளம் கொண்டு செல்லப்படும்.
அப்பொழுது இளவரசி ஆனும் அவருடன் செல்வார். அன்று இரவு 7 மணிக்கு சற்று முன்னர் அந்த விமானம் லண்டன் வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை கொண்டு செல்லப்படும். இதுதான் 1837இல் இருந்து பிரிட்டன் அரச குடும்பத்தின் அலுவல்பூர்வ இல்லம்.
அந்த அரண்மனையின் பவ் அறையில் ராணியின் உடல் வைக்கப்படுவதற்கு முன்பு அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அரச துணைவி கமில்லா ஆகியோர் ராணியின் சவப்பெட்டி பக்கிங்ஹாம் அரண்மனை வருவதைப் பார்ப்பார்கள்.
புதன்கிழமை – செப்டெம்பர் 14

ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்திற்கு மாற்றப்படும். அப்பொழுது ராணுவ அணிவகுப்பும் நடத்தப்படும். அத்துடன் அரச குடும்ப உறுப்பினர்களும் செல்வார்கள்.
இடம் மாற்றப்படுவதை லண்டன் நகர தெருக்களில் இருக்கும் பொது மக்கள் பார்க்க முடியும்.
இதை பார்ப்பதற்காக பெரிய தொலைக்காட்சி திரைகளும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக அரச குடும்பப் பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ளன.
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தை வந்தடைந்ததும் ‘கேட்டஃபால்க்’ எனப்படும் தளத்தில் ராணியின் உடல் வைக்கப்படும். அதன் மீது இம்பீரியல் ஸ்டேட் கிரீடம், கோளம் மற்றும் செங்கோல் ஆகியவையும் வைக்கப்படும்.
இந்த தளத்தின் ஒவ்வொரு மூலையும் அரச குடும்ப வசிக்கும் வீட்டை பாதுகாக்கும் சிப்பாய்களால் காவல் காக்கப்படும்.
சிறிய பிரார்த்தனைக்கு பிறகு அங்கு பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
வியாழக்கிழமை – செப்டெம்பர் 15

நியூ பேலஸ் யார்டிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிற்கும் அதன்பின்பு வெலிங்டன் ஆர்ச்சுக்கும் ராணியின் சவப்பெட்டியைக் கொண்டு போவதற்கான முன்னோட்டம் அதிகாலை 2 முதல் 5 மணி வரை நடக்கும்.
பொதுமக்கள் இந்த பதினோராம் நூற்றாண்டு கட்டடத்தில் ராணிக்குத் தங்களது இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
இதுதான் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலேயே மிகவும் பழமையான பகுதியாகவும் பிரிட்டன் அரசின் இதயமாகவும் உள்ளது.
இதில் மக்கள் எவ்வாறு கலந்து கொள்ளலாம் என்று பின்னர் விவரங்கள் வெளியிடப்படும்.
இதே நாளில் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வேல்ஸ் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நான்கு நாட்களில் முதல் முழு நாள் இது.
திங்கள்கிழமை – செப்டெம்பர் 19

காலை 11 மணிக்கு ராணியின் அரச இறுதி மரியாதை நடக்கும்.
ராணியின் வாழ்க்கை மற்றும் சேவையை நினைவுகூர்வதில் அரச குடும்பத்தினருடன் இணைந்து கொள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் மூத்த அரசியல்வாதிகளும் முன்னாள் பிரதமர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்பு லாங் வாக் வாயிலாக வின்ட்சர் கோட்டைக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும்.
இந்த நாள் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில சேவைகள் மற்றும் தொழில்கள் இந்நாளில் மூடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: BBC.com