Press "Enter" to skip to content

ராணி இரண்டாம் எலிசபெத்: பிரிட்டன் அரச குடும்பத்துக்கு பிடித்த கடற்கரை

பட மூலாதாரம், Getty Images

ராணி மற்றும் நார்ஃபோக் பகுதி என்று நினைக்கும்போது, சாண்ட்ரிங்ஹாமின் அரச குடும்பத்தின் வீடுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஆனால் ராயல் எஸ்டேட்டிலிருந்து வெகு தொலைவில் ஒரு கடற்கரை உள்ளது. அது எப்போதும் அவருடைய மனத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்தது.

1835 ஆம் ஆண்டில், ஹோல்காம் ஹால் ஒரு சிறப்பு விருந்தினருக்காகத் தன்னை தயார்படுத்திக்கொண்டார். 16 வயது இளவரசி விக்டோரியா, வருங்கால ராணி, அவர் முழு அரச பரிவாரங்களையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

இளவரசிக்கும் ஹோல்காமுக்கும் இடையே உருவான உறவு தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த ஒன்று.

ராணியின் தாயார், ராணி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் ஆகியோருக்கு பிடித்தமான இடம், அதன் அருகிலுள்ள பரந்த மணல் கடற்கரை.

பல ஆண்டுகளாக, அரச குடும்பத்தின் வளர்ப்புநாய்கள் ஹோல்காம் கடற்கரையில் இருப்பது வழக்கமான காட்சியாக இருந்தது. இது விருது பெற்ற ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த இடமாகும்.

ஒருமுறை இளவரசி அன்னே இந்த பரந்துவிரிந்த கடற்கரை அதிகம் ஆள்நடமாட்டம் இல்லாத இடம் என்று குறிப்பிட்டார்.

ஹோல்காமில் உள்ள கடற்கரையின் அளவு, அதை ஓர் அரச குடும்பத்திற்கான சுற்றுலாதலமாக்கி உள்ளது.

இது ஒரு பொது கடற்கரை என்றாலும், அந்த கடற்கரையின் அகலம் ஓர் அரச குடும்பம் அனுபவிக்கக்கூடிய அளவிலான தனிப்பட்ட வசதியை வழங்கியது.

எலிசபெத் அட் 90 என்ற பிபிசியின் ஆவணப்படம், இளவரசி ஆன் ஹோல்காமுக்கு குடும்பத்துடன் செல்வதை ஒரு பெரும் பயணமாக விவரித்தார்.

“ஹோல்காம் சற்றே ஆள்நடமாட்டம் இல்லாத இடமாக அமைத்துள்ளது மேலும், கிட்டத்தட்ட முற்றிலும் காலியாக இருந்தது. இந்த நிலையை நீங்கள் இப்போது காண முடியாது,” என்று இளவரசி ஆன் கூறினார்.

“அப்போது கூட இது ஒரு பொதுமக்கள் பயன்படுத்தும், ஒரு பெரிய கடற்கரை.”

அரச குடும்பத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில், அவர்கள் ஹோல்காமில் உள்ள மணல் திட்டுகளுக்கு இடையே குதிப்பதையும் கடற்கரையில் விளையாடுவதையும் பார்க்கலாம்.

1982இல் ராணியின் தாயார் ஹோல்காமில் கடற்கரையோரம் மகிழ்ச்சியாக நடக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

பல ஆண்டுகளாக, அரச குடும்பம் ஹோல்காமில் உள்ள வனப்பகுதியில் பிக்னிக் குடில்களைக் கொண்டிருந்தது. இது சாண்ட்ரிங்ஹாமில் உள்ள ராணியின் தனிப்பட்ட வீட்டில் இருந்து சாலை வழியாக செல்ல சுமார் அரை மணி நேரம் ஆகும்.

ஆனால் 2003 ஆம் ஆண்டில், 1976இல் இறந்த லெய்செஸ்டரின் ஐந்தாவது ஏர்லிடமிருந்து அரச குடும்பத்திற்கு ஒரு பரிசாக அளிக்கப்பட்ட குடில்கள் தீயால் கருகின.

இது ராணியின் தாய் மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் சாண்ட்ரிங்ஹாமில் வழக்கமாக தங்கியிருந்தபோது பயன்படுத்தப்பட்டது.

தீ விபத்திற்கு முன்பு, அந்த குடில் இருப்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது என்று சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அந்த நேரத்தில் கூறினார்.

லண்டனைச் சேர்ந்த 46 வயதான தாம் கோடார்ட் என்பவர், ஒருமுறை அந்த பகுதியில் ராணியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

“அது 1994 ஆண்டு ஈஸ்டர் பண்டிகை. நான் என் அம்மா, லிசா கோடார்ட் மற்றும் எனது வளர்ப்புத் தந்தை டேவிட் கோபாம் ஆகியோருடன் நார்ஃபோக் பகுதியில் உள்ள ஹோல்காமில் நடந்து சென்று கொண்டிருந்தேன்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் மரங்களிலிருந்து வெளியே வந்து, சகதியில் ரேஞ்ச் ரோவரைக் கண்டோம். நாங்கள் நடந்து சென்று அவர்களுக்கு உதவினோம். ராணி தனியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.”

“அவர் சாண்ட்ரிங்ஹாம் வீட்டிற்கு அருகில் உள்ள ஹோல்காம் கடற்கரையில் அதிகாலை பயணத்திற்கு சென்றிருந்தார்.”

“உண்மையில், அவர் தேர் கதவு கண்ணாடியை இறக்கி, தன் காரில் உள்ள ஃகைபேசியை அசைத்து காட்டி,”எனக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை நீங்கள் தள்ளமுடியுமா?,” என்று கூறினார்.

“அப்படியே செய்தோம். அவர் சகதியில் இருந்து வெளியில் வந்தார்.”

“பின்னர் ‘நன்றி’ சொல்லாமல் தேரை ஓட்டிச் சென்றார். இது இன்னும் என்னை புன்னகைக்க வைக்கிறது அவரை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு நல்ல வழி.” என்றார்.

ஹோல்காம் ஹால் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்திலிருந்து அரை மணி நேரம் செல்லும் தொலைவில் உள்ளது.

பட மூலாதாரம், PA Media

ராணி தனது குழந்தைகளை ஹோல்காம் கடற்கரைக்கு வெளியே அழைத்துச் சென்றது போல, வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியும் கூட அப்படி அழைத்து செல்கின்றனர்.

2013இல் ராணி சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் அரச தம்பதியான அவர்களுக்கு, அன்மர் மண்டபத்தைக் கொடுத்தார்.

இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்தரின் அவர்களின் 10வது திருமண தினத்தை ஓட்டி, இளவரசி அன்னே மற்றும் அரசர் மூன்றாம் சார்லஸ் குழந்தைப் பருவத்தில் செய்ததைப் போலவே, அவர்களின் குடும்பமும் மணல் திட்டுகளுக்கு இடையே துள்ளி விளையாடுவதைக் காட்டும் காணொளியை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

ஆகவே, ஹோல்காம் கடற்கரை மீது அரசு குடும்பம் கொண்டிருக்கும் அன்பு பல தசாப்தங்களுக்கு தொடரும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »