ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார்.
ஹிஜாப் குறித்து அவர் அளித்த விளக்கங்களுக்காகவும் கருத்துகளுக்காகவும் அவர் கைது செய்யபட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாசா இறந்தார். அவருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டு இறந்ததாகக் டெஹ்ரான் காவல்துறை தெரிவித்தது.
ஆனால், மாசாவின் பெற்றோர் இதை மறுக்கின்றனர். தங்கள் மகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் இதுவரை அப்படி எந்த கோளாறும் அவருக்கு ஏற்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய மாசாவின் தந்தை “என் மகளின் உடநிலை குறித்து காவல்துறை சொல்லும் கருத்துகளை நான் தனிப்பட்ட முறையில் மறுக்கிறேன்” என்று சீர்திருத்தங்களுக்கு ஆதரவான எம்தெதாத் எனும் ஊடகத்திடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com