Press "Enter" to skip to content

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறினாலும் சாதி, தீண்டாமை ஒழிப்பில் சறுக்கிவிட்டதா?, ஃப்ளூ காய்ச்சல் பரவலைத் தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது, பெங்களூருரில் அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம், இலங்கை பணவீக்கம், நீண்ட நடைபயணத்திற்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறினாலும் சாதி, தீண்டாமை ஒழிப்பில் சறுக்கிவிட்டதா?

வளர்ச்சிக் குறியீடுகள் பலவற்றில் தமிழ்நாடு தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. ஆனால், மருத்துவம், கல்வி, உள்கட்டுமானம் போன்றவற்றில் தமிழ்நாடு வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், அந்த வளர்ச்சி அனைத்து சாதிகளையும் சரிவிகிதத்தில் சென்று சேரவில்லை என்ற விமர்சனமும் உண்டு.

ஃப்ளூ காய்ச்சல் பரவலைத் தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு தொடர்ந்து இருக்கும் நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் மருத்துவர் புஷ்கலா அவர்கள் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

போதைப்பொருள் கூடாரம் ஆகிறதா பெங்களூரு? எளிதில் இலக்காகும் இளைஞர்கள்

போதைப்பொருள்

பட மூலாதாரம், Huw Evans picture agency

பெங்களூருவின் ‘ஸ்ரீ கேந்திரா’ மறுவாழ்வு மையத்தின் தலைவர் அமிர்தா ராஜ் பிபிசியிடம் பேசுகையில், “போதைப்பொருள் உட்கொள்ளும் 100 பேர்களில் 40 பேர் பெண்கள் என்றும், அவர்களில் 10 சதவீதத்திற்கு குறைவானவர்களே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் பல ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று கூறினார்.

இலங்கை பணவீக்கம் ஆகஸ்டில் 70.2% ஆக பதிவு – யாருக்கெல்லாம் பாதிப்பு?

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டின் ஆண்டு பணவீக்க விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை 84.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் நடைபயணங்களை மேற்கொள்ள என்ன மாதிரியான உடல் வலு தேவை?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @INCINDIA/TWITTER

கொளுத்தும் வெயிலில் ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் தூரம் வரை நடப்பது எப்படி இருக்கும்? இதை அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் யோசித்தது உண்டா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »