Press "Enter" to skip to content

ஹிலாரி நீல்சன்; பெண் மலையேற்ற வீரர்களின் உந்துதலாக இருந்தவர்

பட மூலாதாரம், NORTH FACE

புகழ்பெற்ற பனிச்சறுக்கு மலையேற்ற அமெரிக்க வீராங்கனையான ஹிலாரி நீல்சன் இமயமலையில் ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் நேபாள தலைநகர் காத்மாண்டூவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) அன்று பெளத்த முறைப்படி எரியூட்டப்பட்டது. ஒரு தலைமுறையை சார்ந்த பெண்களின் மத்தியில் அவர் ஒரு உந்து சக்தியாக விளங்கியது எப்படி என சக மலையேற்ற வீரர்கள் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

2012ஆம் ஆண்டு 24 மணி நேரத்துக்குள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் (8849 மீ; 29,032 அடி) என்ற பெருமையையும் அதன் அருகில் உள்ள எல்ஹாட்சீ (8516மீ) சிகரத்தில் ஏறியவர் என்ற பெருமையையும் 49 வயதான ஹிலாரீ நீல்சன் பெற்றார். 6 ஆண்டுகள் கழித்து, சக மலையேற்ற வீரரான ஜிம் மாரிசன் உடன் எல்ஹாட்சீக்கு வந்தார். அப்போது மலைசிகரத்தில் இருந்து சறுக்கிய முதலாவது சாதனை என்ற பெருமையை பெற்றனர்.

செப்டம்பர் 26ஆம் தேதி திங்கட்கிழமையன்று அவர்கள் இருவரும் இன்னொரு இமயமலை சிகரமான மானாசுலுவின் (8163மீ) மேலிருந்து சறுக்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிப்பாறை சரிந்தது. அதில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ஹிலாரீ நீல்சன் உயிரிழந்தார்.

அவருக்கு இரங்கல் தெரிவித்த பலரும், அவர் எந்தவொரு ஆண் மலையேற்ற வீரருக்கும் சமமானவராக திகழ்ந்தார் ஹிலாரி என குறிப்பிட்டனர்.

“முன்னணி மலையேற்ற வீரர்களைப் போலவே அவரும் மலையேற்றங்களை மேற்கொண்டார்” என தாவ் வாட்ஸன் என்ற சர்வதேச மலையேற்ற வழிகாட்டி கூறினார். இவர் ஹிலாரீ நீல்சன், மாரிசன் ஆகியோருடன் மானாசுலு சிகரத்தில், அவர்கள் மலை உச்சிக்கு செல்லும் முன்பு வரை அவர்களுடன் இருந்தார்.

“முதல் ஆண், முதல் பெண் என்ற அடையாளத்தை விடுத்து, ‘முதல் நபர்’ என்பதை அவரது முயற்சிகள் உருவாக்கின.”

“அவர் ஒரு புதுமையான மலை விளையாட்டு வீரராக இருந்தார். அவர் இதனை நன்மதிப்புடனும், உற்சாகமாகவும் செய்தார். ஹிலாரியின் தாக்கத்தை மிகைப்படுத்தல் என்று சொல்ல முடியாது.”

ஜிம் மோரிசன் ஹிலாரி நீல்சனின் உடலை தகனம் செய்ய உதவி செய்கிறார்

பட மூலாதாரம், Getty Images

36 வயதான ஸ்வீடன் மலையேற்ற வீரரும் சாகச வீரருமான மரியா கிரான்பெர்க் என்பவரும் ஹிலாரீ நீல்சன் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். அப்போது அவர் நீல்சன் பற்றி கூறுகையில், முதன் முதலாக சாதனைகளை செய்தவர், ஆர்முள்ளவர், அர்ப்பணிப்பு கொண்டவர், அரிதான, தடங்கல்களிலும் குறிக்கோளை நோக்கி முன்னேறியவர்,” இளம் பெண்களின் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

“அவர் தலைமைதாங்கிய பயணங்களை இளம் தலைமுறையினர் பின் தொடர வழிகாட்டியாக இருந்தவர். எப்படி மலையேறுவது என்பதை சொல்லிக் கொடுத்தவர். ஒரு மலையேற்ற வீரராக, மனிதநேயம் மிக்கவராக எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவராக, நாம் எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறோம் என்பதை அறிந்தவராக இருந்தார்.

“மனிதாபிமான வழியில் கருணை, ஆசை மற்றும் அதீத விருப்பம் ஆகிய வண்ணங்களை கொண்டதாக வாழ்க்கை, வேலையை உருவாக்கி ஒரு பெண் மலையேற்ற வீரராக ஆவதற்கு ஆசைப்படுவதற்கான வழிகளை வகுத்து தெளிவுபடுத்தினார்.

இன்னொரு இளம் மலையேற்ற வீரரான, ஆக்சிஜன் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணியான மெல்லிசா அர்நாட் ரெய்ட், 10 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பயணத்தில் எவரெஸ்ட்டில் ஹிலாரீயை சந்தித்திருக்கிறார். அப்போது ஹிலாரீ நீல்சன், எல்ஹாட்சீ மற்றும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற இரட்டை சாதனையை பெற்றிருந்தார்.

“அவர் மிகவும் வலுவானவர், சாதனை புரியும் துடிப்பைக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடியவராகவும் இருந்தார்,” என மெல்லிசா பிபிசியிடம் கூறினார்.

“பெண் என்ற முறையில் இந்த துறையில், பார்ப்பதற்கு வலிமை குன்றியவராக இல்லாமல், பாதிக்கப்படக்கூடியவராக இருப்பது மிகவும் சிரமம். ஆனால், அவர் அதனை சிறந்தமுறையில் மேற்கொண்டார். ஏற்கனவே சொன்னபடி என்ன சாத்தியமோ அதனை அவர் என்னிடம் வெளிப்படுத்தினார்.”

“அவருடைய மலையேற்ற திறன் மற்றும் தகுதி மற்றும் செயல்பாடு நம்ப முடியாதது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை மேற்கொள்ளும் விதிவிலக்கான மனிதராக, நிச்சயமாக பெரும்பாலும் தொடர்ந்து அவர் நினைவு கூறப்படுவார்.”

ஹிலாரீ நீல்சன், 16 நாடுகளில் 40க்கும் மேற்பட்ட மலையேற்ற பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். உயர்ந்த இமயமலை சிகரங்கள் முதல் மியான்மரில் உள்ள தொலை தூரத்தில் உள்ள மலைசிகரங்கள் வரையிலும், தவிர அன்டார்டிகாவிலும் 2020ம் ஆண்டில் கண்டத்தின் இரண்டு உயரமான சிகரங்களில் மலையேற்றத்திலும், பனிச்சறுக்கிலும் ஈடுபட்டார்.

ஹில்லாரீ நீல்சன்; பெண் மலையேற்ற வீரர்களின் உந்துதலாக இருந்தவர்

பட மூலாதாரம், NORTH FACE

நேபாள பகுதியில் உள்ள இமயமலையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பயணங்களின் ஆணவங்களையும் வைத்திருக்கும் இமயமலை தரவு அமைப்பின் தலைவரான பில்லி பியேர்லிங், 2018ம் ஆண்டு எல்ஹோட்சீயில் சிகரத்தில் இருந்து கீழறங்கும் சறுக்கில் ஹிலாரீ நீல்சன் சாதனை செய்தபோது அவரை சந்தித்தார்.

“அவரை சந்தித்தது சிறப்பான தருணமாக இருந்தது. அவர் ஒரு சிறந்த பனிமலை சறுக்கு வீரர்,” என்றார்.

“வாக்கு மொத்த மலையேற்ற நிகழ்வுகளும் இன்னும் கூட ஆண்களின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. சில சிறந்த பெண் மலையேற்ற வீரர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், பனி மலை சறுக்கில் கூட ஆண்களின் ஆதிக்கம் இருக்கும் நிலையில் ஹிலாரீ மிகவும் அதி தீவிர வீரராக திகழ்கிறார்.”.

மானாசுலு பகுதியில் ஹிலாரீ, ஜிம் மாரிசன் இருவரும் மலை உச்சிக்கு செல்லும் முன்பு அவர்களுடன் இருந்த தாவ் வாட்ஸன், நானும் அவர்களுடன் மூன்றாவதாக முகாமிட நினைத்தேன். ஆனால், வலுவான காற்றும், பனிச்சரிவுக்கான அபாயமும் இருந்ததால் தவிர்த்து விட்டேன்,” என்றார்.

எனினும், அதே நாளில் அவர்கள் மலை உச்சியில் ஏறியபோது இன்னொரு பனிச்சரிவில் நேபாள் மலைவாழ் மக்களில் ஒருவர் உயிரிழந்தார். 12க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களும் காயம் அடைந்தனர்.

ஹிலாரீ நீல்சன் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த பின்னர், ஜிம் மாரிசன் பாதுகாப்பாக இறங்கி விட்டார். புதன் கிழமையன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மலையேற்ற வீரர்கள் மத்தியில் வெளிப்பட்ட துயரமானது. அவரது மரணம் எவ்வளவு மோசமாக அவர்களை உலுக்கியிருக்கிறது என்பதை காட்டியது என்கிறார் பியர்லிங்.

“இரண்டு அழகிய குழந்தைகளுக்கு அவர் அன்பான, அர்ப்பணிப்புள்ள தாயாக இருந்தார். ஆனால், அதே நேரத்தில் தனது கனவை நனவாக்கினார். அவர் எப்போதுமே தன்னடக்கம் மிக்கவராக, அழகானவராக இருந்தார்.”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »