தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிதாரி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்திய பிறகு தன்னைதானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com