பட மூலாதாரம், WHO
வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் சளி மருந்துகள் நான்கைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது ஏன்?’, ‘ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விசா கொள்கையில் இந்தியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’, ‘பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஆதித்த கரிகாலன் கொலை என்ற சம்பவத்தின் உண்மை வரலாற்று பின்னணி’, ‘மரணச்சாலை என்று அழைக்கப்படும் பயணப்பாதை’ மற்றும் ‘இலங்கைக்கு கடல் கடந்து வருகிறதா போதைப்பொருள் ஆபத்து?’ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 சளி மருந்துகளுக்கு தடை ஏன்?

பட மூலாதாரம், Getty Images
காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த நான்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
அந்த மருந்துகளை உட்கொண்ட குழந்தைகளுக்கு மருந்தின் கலப்படம் காரணமாக சீறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, மருந்துக் கடைகளில் நேரடியாக மக்கள் மருந்துகளை வாங்க வேண்டாம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அரசுத் தரப்பு அறிவுறுத்தினாலும், களத்தில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இந்த இணைப்பில் படிக்கலாம்.
UAE புதிய விசா கொள்கை – முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விசா கொள்கையில் அறிவித்த மாற்றங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த மாற்றப்பட்ட விதிகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. புதிய மாற்றங்கள் என்னென்ன? இந்தியர்கள் இதில் கவனிக்க வேண்டியது என்ன உள்ளிட்ட தகவல்களை இந்த இணைப்பில் படிக்கலாம்.
ஆதித்த கரிகாலன் கொலை – உண்மை வரலாறு என்ன?

பட மூலாதாரம், LYCA/MADRAS TALKIE
சோழர் சரித்திரத்தில் மிகத் திருப்புமுனையான சம்பவமாகவும் இதுவரை தீராத புதிர்களில் ஒன்றாகவும் ஆதித்த கரிகாலனின் கொலை சம்பவம் விளங்குகிறது. இந்தக் கொலை எப்படி நடந்தது? கொலையைச் செய்தவர்கள் நீண்ட நாட்களுக்குத் தண்டிக்கப்படாதது ஏன்? வரலாற்று உண்மைகளுடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் படிக்கலாம்.
இது ஏன் மரணச்சாலை தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
பொலிவியாவின் பிரபலமற்ற அந்த “மரணச் சாலை” வழியாக பயணிப்பது உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த உலகம் பல நூற்றாண்டுகளாக கோகா (கொக்கைன் தயாரிக்க பயன்படும் தாவரம்) மற்றும் தங்கம் தொடர்பான பேரார்வம், தவறான புரிதல் மற்றும் சர்ச்சைகளால் நிரம்பியது. இங்கு பயணித்தவர்கள் எழுதிய அனுபவக்குறிப்பை இந்த இணைப்பில் படிக்கலாம்.
கடல் கடந்து வருகிறதா இலங்கைக்கு போதைப்பொருள் ஆபத்து?

இலங்கையின் வடக்கில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. என்ன நடக்கிறது? எப்படி பாதிக்கப்படுகின்றனர் மக்கள் என்பன உள்ளிட்ட கள நிலவரத்தை இங்கு படிக்கலாம்.
நன்றி வாசகர்களே…🙏
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com