ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யுக்ரேன் – ரஷ்யா போர்: கிரைமியா குண்டுவெடிப்பால் 19 கி.மீ நீள பாலம் சேதம்
ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையேயான போரின் ஒரு பகுதியாக, அவ்விரு நாடுகளையும் இணைக்கும் பாலம் ஒன்று குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் பூடின் உத்தரவிட்டுள்ள நிலையில், சேதமடைந்த பகுதிகளை சரிசெய்யும் பணி உடனடியாக தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2014இல் யுக்ரேனிலிருந்து கிரைமியாவை ரஷ்யா இணைத்ததன் முக்கிய அடையாளமாகத் திகழும் இந்த பாலம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு மிக ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com