ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யுக்ரேன் பாலத்தை தாக்கியதற்கு ரஷ்யா எதிர் தாக்குதல்
“யுக்ரேனில் தற்போது நடைபெறும் தாக்குதல்கள் நம்மை அழிக்கவும் பூமியிலிருந்து துடைத்தெடுக்கவும் ரஷ்யா முயல்வதைக் காட்டுகிறது,” என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
க்ரைமியாவில் ரஷ்யா கட்டிய பாலம் கடந்த 8ஆம் தேதியன்று தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக விளாதிமிர் புதின் திருப்பி அடிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இன்று காலையில் ரஷ்யா யுக்ரேன் தலைநகர் கீயவில் ஏவுகணைகளைச் செலுத்தியது. பல இடங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்களும் நடந்தன. இதனால் பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com