Press "Enter" to skip to content

ரஷ்யா Vs யுக்ரேன்: கிரைமியாவை இணைக்கும் பாலத்தை தகர்த்தது யார்?

  • பால் ஆடம்ஸ்
  • பிபிசி நியூஸ், கியவ் (யுக்ரேன்)

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவுடன் கிரைமியாவை இணைக்கும் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அது எப்படி நடந்தது? பின்னணியில் இருந்தவர்கள் யார்?

இந்த குண்டுவெடிப்புக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வகையான குழப்பமான தகவல்கள் உலா வருகின்றன. அதில் பெரும்பாலானவை நம்பகத்தன்மையற்றவை.

லாரி ஒன்றின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்று சுட்டிக்காட்டுவதற்கு ரஷ்யாவுக்கு நீண்டநேரம் ஆகாது. ஆனால், யார் அதை நிகழ்த்தினர் என்பதை ரஷ்யா சொல்லவில்லை. பாலத்தை இலக்கு வைத்து தாக்கியது யுக்ரேன்தான் என குற்றம்சாட்டியுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அதை தீவிரவாத சம்பவம் என்று அழைத்துள்ளார்.

பாலம் வழியாக பார வண்டி செல்வது போன்ற காட்சிகள் அடங்கிய கண்காணிப்பு ஒளிக்கருவி (கேமரா) பதிவுகள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த பார வண்டி, மேம்பாலத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள கராஸ்நோடார் என்ற ரஷ்ய நகரத்தில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றது.

கராஸ்நோடார் நகரை சேர்ந்த 25 வயதான சமிர் யுஸ்பவ் என்பவர் இந்த பார வண்டியின் உரிமையாளர் என ரஷ்ய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பார வண்டி உரிமையாளரின் உறவினரான மக்கிர் யுஸ்பவ் என்பவர் பார வண்டியை ஓட்டிச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

காணொளி காட்சிகளை நீங்கள் இன்னும் உன்னிப்பாக பார்த்தால், வெடிப்புக்கும் பார வண்டிக்கும் ஒரு தொடர்பு இல்லை என்பது போல தெரிகிறது.

எந்த அளவுக்கு உண்மை?

வெற்றியை கொண்டாடும் இரு பெண்கள்

பட மூலாதாரம், EPA

காணொளியில் உள்ள காட்சியின்படி, இந்த பார வண்டி மேம்பாலத்தில் ஏறும்போது, அதன் பின்னால் ஒரு பகுதியில் பெரிய தீபந்து வடிவம் தோன்றுவது போல காணப்படுகிறது.

ரஷ்யர்கள் மத்தியில் மிக விரைவாகப் பரவிய பார வண்டி குண்டு என்ற செய்தி முற்றிலும் சந்தேகத்துக்கு உரியது. இது யுக்ரேனின் துணிச்சலான தாக்குதல் என்று மக்கள் கருதுவதை விடவும், இதனை தீவிரவாத சம்பவம் என்று குறிப்பிடுவதே நல்லது என ரஷ்யா கருதியதாக நம்பப்படுகிறது.

“என்னுடைய அனுபவத்தில் வாகனங்களில் இருந்து வெடிக்க வைக்கப்படும் பல்வேறு ஐஇடி குண்டுவெடிப்புகளை பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு இது அதனைப்போன்ற ஒன்றல்ல,” என்கிறார் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய வெடிகுண்டு நிபுணர் ஒருவர்.

இந்த குண்டு வெடிப்புக்கான சாத்தியமுள்ள இன்னொரு காரணத்தையும் அவர் முன் வைக்கிறார்.

மேம்பாலத்துக்கு கீழே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்க சாத்தியமிருக்கிறது. அதிநவீன தொலை உணர்வு ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு இந்த குண்டு வெடிக்க செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்.

இருபுறம் இருந்தும் அடிக்கும் காற்றின் அழுத்தம் மற்றும் சுமையை தாங்கும் வகையில்தான் பொதுவாக பாலங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை இது போன்று வடிவமைக்கப்படவில்லை. அவை மேல் நோக்கிய அழுத்தத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை சாதகமாக கொண்டுதான் யுக்ரேன் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக நான் கருதுகின்றேன்,” அந்த வெடிகுண்டு நிபுணர்.

குண்டுவெடிப்புக்கு முன்பாக கண்காணிப்பு ஒளிக்கருவி (கேமரா)க்களில் ஒரு நொடி மட்டும் பதிவான ஒரு காணொளியில் மேம்பாலத்துக்கு அருகே தாங்கி நிற்கும் மேம்பாலத்துக்கு அருகே ஒரு படகு ஒன்றை சிலர் பார்த்திருக்கின்றனர்.

இது என்ன மாதிரியான படகாக இருக்கலாம்?

செயற்கைக்கோள் படம்

பட மூலாதாரம், SATELLITE IMAGE ©2022 MAXAR TECHNOLOGIES

ரஷ்யாவின் கிரைமியா நகரின் செவஸ்டோபோல் கடற்படை தளத்தின் அருகே ஓட்டுநர் இல்லாத ஒரு மர்ம படகு காணப்பட்டதாக கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சில ரஷ்ய சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டு ஆனது.

கருப்பு பொருளால் ஆன, படகின் முன்பு தொலை உணர்வு கருவிகள், பெரிஸ்கோப் போன்ற கருவிகள் கொண்டதாக அந்த படகு காணப்பட்டது.

உள்ளூர் செய்திகளின்படி, எந்த பகுதியில் வெடித்ததோ அதை நோக்கி அந்த படகு சென்றதாக தெரிகிறது.

இது குறித்து பேசிய ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள செவஸ்டோபோல் ஆளுநர், “ஓட்டுநர் இல்லாத படகின் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வுக்குப் பின்னர் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு குண்டு வைத்து அழிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை,” என்றார்.

தொலையுணர்வு (உளவு)ஆயுதங்களை யுக்ரேன் வைத்திருக்கிறது என்பது போன்ற செய்திகள் வெளிவருவது இது முதன்முறை அல்ல.

கடற்பகுதியில் ரிமோர்ட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படும் படகுகள் உள்ளிட்ட போர் தந்திர அம்சங்களை யுக்ரேன் கொண்டிருக்கிறது என்ற வலுவான தகவல்களும் உள்ளன. மேலும், இதுபோன்ற திட்டங்கள் குறித்த யோசனை வெறுமனே சில மாதங்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக பரிமாணம் பெற்றுள்ளன,” என்று பிரிட்டிஷ் வெடிகுண்டு நிபுணர் விவரிக்கிறார்.

தன் கட்டுப்பாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள கெர்ஜ் பாலத்தில் தாக்குதல் நடத்தும் திறனை யுக்ரேன் கொண்டிருந்தால், அது யுக்ரேனின் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக அமையும்.

ஆனால், யுக்ரேன் தலைநகரில் கேட்கும் சில சத்தங்களைத் தவிர, இ குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.

யுக்ரேன் குறித்து?

இது மட்டுமின்றி, யுக்ரேனின் குடியரசு தலைவர் அலுவலகத்தின் தலைவர் மிகைலோ போடோலியாக், வெளியிட்ட அறிக்கையைப் பார்க்கும்போது, மக்கள் விரும்பத்தக்கதுகோவின் பார வண்டி குண்டுவெடிப்பு என்ற செய்தியை ஆதரிப்பது போல உள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவிடம் விடைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு முறையில் தொடர்ந்து வரும் சிக்கல்கள் விளைவாகவே இந்த குண்டுவெடிப்பு நேரிட்டிருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

“ஃபிஎஸ்பி (ரஷ்ய உளவு முகமை, வெக்னர் குழுமம் போன்ற ராணுவ தனியார் ஒப்பந்ததாரர்கள்) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதே போல ரஷ்ய கூட்டமைப்பின் ஊழியர்கள் ஆகியோரிடையான சிக்கல்கள்தான் என்பதற்கு இது வலுவான சாட்சியம்,” என்று அவர் கூறுகிறார்.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »