பட மூலாதாரம், Getty Images
வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் அறிவிப்புக்கு பிறகு விவாதம் ஆகும் வாடகை தாய் சட்டம் – விதிகள் சொல்வது என்ன?
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தங்களது சமூக ஊடக பக்கங்களில் அறிவித்தனர். தங்களின் குழந்தைகள் பிறந்தது தொடர்பாக இந்த தம்பதி எந்தவித கூடுதல் அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வாடகைத் தாய் மூலம் தான் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவது வாடகைத்தாய் சட்டம் தொடர்பான விவாதத்தைத் தூண்டியது.வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்றால் என்ன, அதற்கான சட்ட விதிமுறைகள் இந்தியாவில் எப்படியுள்ளன என்பது குறித்து இந்த கட்டுரையில் படியுங்கள்.
ஹிஜாப் வழக்கு: 2 நீதிபதிகள் இரண்டு தீர்ப்பு கூறியதால் முடிவுக்கு வராத வழக்கு- அடுத்து என்ன?

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாமா கூடாதா என்ற விவகாரத்தை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற பெஞ்ச், வியாழக்கிழமை (அக். 13) இரண்டு விதமான தீர்ப்புகளை வழங்கியுது. இரண்டு விதமான் தீர்ப்புகள் என்னென்ன, தீர்ப்புக்குபின் அடுத்தகட்டம் ஆகிய தகவல்களை இந்த கட்டுரையில் படியுங்கள்.
இ-ரூபாய் இந்தியாவில் விரைவில் அறிமுகம் – கணினி மயமான பணம்யை எப்படி பயன்படுத்துவது?

பட மூலாதாரம், Getty Images
சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் மின்னணு ரூபாய் அதாவது CBDC ( சென்ட்ரல் பேங்க் கணினி மயமான நாணயம்) அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த வெள்ளியன்று மைய கட்டுப்பாட்டு வங்கி குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும்.
கணினி மயமான பணம் அதாவது மைய கட்டுப்பாட்டு வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Open relationships: ‘திறந்த உறவுமுறை’ மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open relationships எனப்படும் கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு மீதான ஆர்வம் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை இந்த கட்டுரையில் படியுங்கள்.
மனநல தினம்: தூக்கமின்மை, ஆர்வமின்மை… என்னென்ன அறிகுறிகள் இருந்தால் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய மக்களிடையே மனநலம் குறித்த அக்கறை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
மனநலம் என்றால் என்ன, என்ன மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மனநல மருத்துவரை நாட வேண்டும் என்பனவற்றை இக்கட்டுரையில் படித்து அறியுங்கள்.
நன்றி வாசகர்களே…🙏
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com