Press "Enter" to skip to content

BBC தமிழ் இணைய தளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Reuters

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்த வகையில், இந்த வாரம் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமர், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி என்பது உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

பிரிட்டன் பிரதமர் லிஸ் உடை பதவி விலகிய முடிவை புரிந்து கொள்ள உதவும் சில தகவல்கள்

லிஸ் உடை

பட மூலாதாரம், BBC

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு லிஸ் உடை விலகியிருக்கிறார். நீங்கள் பிரிட்டன் அரசியலை தொடர்ந்து கவனிக்கவில்லை என்றால், அவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள உதவக்கூடிய தகவல்களை இந்தக் கட்டுரையில் படியுங்கள்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சுயமாக முடிவெடுப்பாரா?

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக, அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்சியின் தலைமை பொறுப்பு பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் கைகளில்தான் இருந்து வந்துள்ளது அல்லது சில நேரங்களில் தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.‘ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோவை தவிர்க்க தந்திரம் செய்த மருத்துவர்’

ஜெயலலிதா மரணம்

பட மூலாதாரம், Getty Images

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை என்ன சொல்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் படியுங்கள்.

ஐஏஎஸ் ஆவது எப்படி? எப்படி தயாராக வேண்டும்? என்ன தகுதி தேவை?

ஐ.ஏ.எஸ்.

பட மூலாதாரம், Getty Images

ஐஏஎஸ். இந்தியாவில் பல லட்சம் இளைஞர்களை சிறுவயதில் இருந்தே ஆட்கொள்ளும் பெருங்கனவு இது.

ஐஏஎஸ் அதிகாரியாகி சேவை செய்வேன் என்று பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சூளுரைப்பதைப் பார்த்திருப்போம். ஐஏஎஸ் ஆவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் படியுங்கள்.

விந்து ஒவ்வாமை: இதன் அறிகுறிகள் என்ன? பெண்களை இது எப்படி பாதிக்கிறது?

பாலியல் நலம்

பட மூலாதாரம், Thinkstock

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை.கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை. விந்து ஒவ்வாமை என்றால் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் படியுங்கள்.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »