- ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், Mary Joy Mandane-Ortiz
பிலிப்பைன்ஸில் கல்லூரி தேர்வுகளின்போது “ஏமாற்றுவதைத் தடுக்கும் தொப்பிகள்” என்றழைக்கப்படும் மாணவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேடிக்கையாக மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன.
லெகாஸ்பி நகரிலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய விடைத்தாளைப் பார்த்து எழுதுவதைத் தடுக்க தலைக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அட்டை, முட்டை பெட்டிகள் மற்றும் பிற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வீட்டில் உருவாக்கப்பட்ட கவலையான பொருட்களை தொப்பிகளாகப் பயன்படுத்தி எதிர்வினையாற்றினர்.
வகுப்புகளில் “ஒருமைப்பாடு மற்றும் நேர்மையை” உறுதி செய்ய ஒரு “வேடிக்கையான வழியை” தான் தேடி வந்ததாக அவர்களுடைய ஆசிரியை பிபிசியிடம் கூறினார்.


பிகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் பேராசிரியரான மேரி ஜாய் மண்டேன்-ஓர்டிஸ், இந்த யோசனை “உண்மையில் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.
அக்டோபர் மூன்றாவது வாரத்தில் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்களால் எழுதப்பட்ட சமீபத்திய அரையாண்டு தேர்வுகளுக்கு இது செயல்படுத்தப்பட்டது.
பேராசிரியர் மண்டேன்-ஓர்டிஸ் மாணவர்கள் காகிதத்தில் ஓர் “எளிய” வடிவமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே தனது ஆரம்ப கோரிக்கையாக இருந்தது என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு நுட்பத்தால் அவர் ஈர்க்கப்பட்டார்.

பட மூலாதாரம், Mary Joy Mandane-Ortiz
2013ஆம் ஆண்டில், பாங்காக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அறையில் “இயர் தோல்விஸ்” அணிந்து தேர்வுத்தாள்களை எடுத்துக் கொள்வதைக் காட்டும் படம் ஒன்று மிகுதியாக பகிரப்பட்டது. அவர்களுடைய பார்வையை மறைக்க அவர்களது தலையின் இருபுறமும் காகிதத் தாள்களை ஒட்டிக் கொண்டனர்.
பேராசிரியர் மண்டேன்-ஓர்டிஸ் அவருடைய மாணவர்கள் இந்த யோசனையை எடுத்துக்கொண்டு மேம்படுத்தினர் என்கிறார். சில நேரங்களில் சிக்கலான தலைக்கவசத்தை “வெறும் ஐந்து நிமிடங்களில்” அவர்கள் சுற்றிக் கிடக்கும் குப்பைகளைக் கொண்டு புதுமையாக உருவாக்கினர் என்கிறார்.

பட மூலாதாரம், Mary Joy Mandane-Ortiz
மற்றவர்கள் தொப்பிகள், தலைக்கவசம்கள் அல்லது ஹாலோவீன் முகமூடிகளை அணிந்துகொண்டு கொடுக்கப்பட்ட பணியைச் சுருக்கமாக நிறைவேற்றினர்.
பேராசிரியரின் ஃபேஸ்புக் பதிவுகள், இளைஞர்கள் தங்கள் விரிவான படைப்புகளை அணிந்திருப்பதைக் காட்டுகின்றன. சில நாட்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றது. மேலும் இந்த நிகழ்வு ஃபிலிப்பைன்ஸ் ஊடகங்களின் கவனத்தையும் பெற்றது.
அவர்கள் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் தங்கள் மாணவர்களை ஏமாற்றுவதற்கு எதிரான தலைக்கவசங்களை ஒன்றிணைக்க ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Mary Joy Mandane-Ortiz
பேராசிரியர் மாண்டேன்-ஓர்டிஸ், இந்த ஆண்டு தனது ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் கடுமையான தேர்வு நிலைமைகளால் கூடுதலாக மெனக்கெட்டு படிக்குமாறு தூண்டப்பட்டதாகவும் கூறினார்.
அவர்களில் பலர் தங்கள் தேர்வுகளை முன்கூட்டியே முடித்தனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு யாரும் தேர்வு மோசடிகளில் சிக்கவில்லை என்றும் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com