Press "Enter" to skip to content

மனிதகுல வரலாறு: பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள்

  • கிரேம் கிரீன்
  • .

பட மூலாதாரம், Chris Rainier

மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன.

வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை நோக்கி இட்டுச் சென்றது. பிறர் இயற்கையின் மகத்துவத்தை போற்றும் வகையில், புனிதமான வனங்கள், புனிதமான மலைசிகரங்கள், புனிதமான பாறைகள் ஆகியவற்றுடனான அர்த்தமுள்ள தொடர்புகளை கண்டறிந்தனர்.

கனடாவின் புகைப்பட நிபுணர் கிறிஸ் ரெய்னர் என்பவர் புனிதம்; புரிதலை தேடி ( Sacred: In Search of Meaning) என்ற புத்தகத்தின் கருவாக இந்த அர்த்தம் தேடுதல் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் மற்றும் புனிதமான இடங்களை இந்த புத்தகம் ஆவணப்படுத்துகிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் ஆய்வாளரான ரெய்னர், பாரம்பரிய கலாச்சாரங்களில் கவனம் செலுத்த 40 ஆண்டுகாலத்தை செலவழித்துள்ளார்.

“1980களில் சுற்றுலா பயண புகைப்படநிபுணராக பணியைத் தொடங்கினேன். ஆன்மீக நிலப்பரப்புகள் மற்றும் புனிதமான ஆன்மீக இடங்களை கண்டறிய புனிதத்தைதேடி பயணித்தேன்,” என்றார் அவர். “தினசரி இருத்தலுக்கு அப்பால் வாழ்க்கையின் சாராம்சத்தை பெறுவதற்கான எனது ஆசையில் இது இருந்து வந்தது. ஏன் நாம் இங்கே இருக்கின்றோம்? என்ற இந்த கேள்வி மனித குலத்தின் விடியல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் வகையில் இருக்கிறது.”

இந்த கிரகத்தை புரிந்து கொள்ள, உலகைச் சுற்றி உள்ள கலாச்சாரங்களை புரிந்து கொள்வது நமக்கு முக்கியம் என்று ரெய்னர் கருதினார். “நவீனம் என்ற பெரும் சுனாமி அலைகள், பெரும் அளவிலான பாரம்பரிய கலாச்சாரங்கள், புனிதத்துவமான இடங்களை அடித்துச் சென்று விட்டன,” என்றார் . இதன் விளைவாக நாட்டுப்புற கதைகள் , மூடநம்பிக்கைகள், பல்வேறு கலாச்சாரங்களின் ஆன்மீக நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கான இடம் குறுகிவிட்டது என்று விவரிக்கிறார். “இந்த புனிதம் நிச்சயமாக அசுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. ஆனால், இணையம் என்ற பெருவெளி இணைப்பில் உலகில் இன்னும் யாரும் அறியாத பகுதிகள் இருக்கின்றன என்பதை மறக்க முனைகின்றோம். இன்னும் விசித்திரமான புனிதமான இடங்கள் மற்றும் புனிதமான நிலப்பரப்புகள் உள்ளன என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு ஆற்றில் படகை ஓட்டி செல்வது அல்லது பூங்கா ஒன்றில் நடப்பது, வனப்பகுதி ஒன்றின் இயல்பான ஓசையை தேடிச் செல்லுதல் போல புனிதமும் எளிமையான ஒன்றுதான்,” என்கிறார்.

திமிங்கல எலும்பு நடைபாதை

சைபீரியாவின் பெரிங் கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுப் பகுதியான யிட்டிகிரான் தீவின் தொலைதூரத்தில் காற்று வீசுகிறது. திமிங்கல எலும்பு நடைபாதை என்று அழைக்கப்படும் பெரிய திமிங்கலத்தின் விலா எலும்புகள் மற்றும் பின் எலும்புகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. இந்த 550 மீட்டர் நடைபாதை, கடற்கரை முடிந்த உடன் உடனே தொடங்கும் தரைப்பகுதியில் விசித்திரமான, சற்று கொடூரமானதாக இருக்கிறது.

மர்மமான 5 புனித இடங்கள்

பட மூலாதாரம், Chris Rainier

“ரஷ்யாவின் ஆர்க்டிக்கின் வடக்கிழக்கு செர்பியாவுக்கு நேஷனல் ஜியாகிராபிக் பயணத்துக்கான கப்பலில் நான் சென்று கொண்டிருந்தேன். சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் யூபிக் என்றழைக்கப்படும் பேலியோ-எஸ்கிமோ மக்களால் கட்டப்பட்ட இந்த பண்டையகால திமிங்கல எலும்பு கட்டமைப்பை நாங்கள் கண்டுபிடித்தோம்,” என ரெய்னர் விவரிக்கிறார்.

“இந்த இடத்தின் பல்வேறு பகுதிகளின் அருகிலேயே கலைப்பொருட்கள் கிடைத்தன,” என்கிறார். இந்த இடம் மக்கள் ஒன்று கூடும் இடமாக இருந்திருக்கும் என தொல்லியல் கோட்பாடு கூறுகிறது. அவர்கள் திமிங்கலத்தின் எலும்பை நேராக நிமிர்த்தினர், பெரிய வளைந்த கொம்புகள் கொண்ட ஆடு, துருவ கரடி ஆகியவற்றின் தோல்களை, கட்டமைப்பின் மீது போட்டு மக்கள் கூடும் இடமாக உருவாக்கினர். அதன் உள்ளே புனிதமான கூட்டங்கள் நடத்தினர். அவை அனைத்தும் அழிந்து விட்ட நிலையில் இப்போது அங்கு திமிங்கல எலும்புகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன,” என்றார்.

“புராண விலங்குகள் மற்றும் இயற்கை ஆன்மாக்களின் மந்திர வழிபாடு முறையிலான ஆன்ம உணர்வு இது போன்ற புனித இடங்களில் உள்ளன. இத்தகைய அழகான இந்த இடத்தில் ஒரு கூட்டம் நடப்பதாக கற்பனை செய்தேன்,” என்று மேலும் அவர் கூறினார்.

திமிங்கல எலும்பு நடைபாதை மற்றும் இதர திமிங்கல எலும்பு சிதைவுகள் (ரஷ்யா சுகோட்கா தீபகற்பம் முழுவதும் பல இடங்கள் உள்ளன) கோயில்களாக மற்றும் புனிதமான கூட்டங்கள் நடக்கும் இடங்களாக, சில உள்ளூர் மக்கள் இன்றைக்கு நினைப்பது போல திமிங்கல இறைச்சியை வெட்டவும், சேமித்து வைத்திருப்பதற்குமான இடமாக இதுபோன்ற இடங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஒருவரின் புனித ஸ்தலம் மற்றொருவரின் இறைச்சி வெட்டும் கூடமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது என தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.

ஹெக்ரா, சவுதி அரேபியா

இப்போது ஜோர்டான் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வடமேற்கே 500 கி.மீ தொலைவுக்கும் அப்பால் பெட்ரா என்ற தலைநகரை நபாட்டியன்கள் உருவாக்கினர். பின்னர் இரண்டாவது பெரிய நகராக ஹெக்ராவை உருவாக்கினர். ஜோர்டான் பகுதியானது சவுதி அரேபியாவின் அல்உலா பிராந்தியத்தில் உள்ளது. இது பண்டைகாலத்திய கல் நகரமாகும் (முஸ்லிம் மக்கள், இதனை அல்-ஹிஜ்ர் என்றும் மதாயின் சாலிஹ் என்றும் அறிந்துள்ளனர்). இதன் பூர்வீகம் கிமு 1 ஆம் நூற்றாண்டு வரையிலான வேர்களைக் கொண்டிருக்கிறது. தவிர இது நாட்டின் முதலாவது சர்வதேச யுனெஸ்கோ பாரம்பர்ய சின்னமாக உள்ளது.இங்கு 100க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட கல்லறைகள் மணற்கல் வெளியில் செதுக்கப்பட்ட விரிவான முகப்புகளுடன். உள்ளன.

மர்மமான 5 புனித இடங்கள்

பட மூலாதாரம், Chris Rainier

“பெட்ராவில் இருப்பது போல இவை அரசர்கள், ராணிகள், பிரபலமான மக்கள் ஆகியோரை புதைக்கும் இடங்களாகும்,” என விவரிக்கிறார் ரெய்னர். “இந்த வாக்கு மொத்த பகுதியும் பண்டைய கால வணிகர்கள் பயணிப்பதற்கான ஒரு பகுதியாக இருந்தன. சவுதி அரேபிய தீபகற்பத்தின் தூர கிழக்குப் பகுதியில் அரேபிய வணிக கப்பல்கள் நிறுத்தப்படும். பின்னர் ஒட்டகங்கள் வாயிலாக இந்த பகுதியைக் கடந்து வணிகர்கள் செல்வர். பின்னர் பெட்ரா பகுதிக்கும், புனிதமான நிலத்துக்கும் செல்வர். அப்படி செல்லும் மக்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்திருப்பர்,” என்றார்.

“முழுவதுமாக தட்டையான பாலைவனமாக இருந்த காரணத்தால் இந்த பகுதி வழக்கத்துக்கு மாறான ஒன்றாக இருந்தது. பின்னர் இந்த பாலைவனத்தின் மேற்பரப்பில் பாறைகள் உருவாகின. பாறைகளுக்கு உள்ளே பொறிக்கப்பட்ட புதைக்கும் அறைகளை அவர்கள் உருவாக்கினர். அவற்றுக்கு கதவுகள் அமைக்கப்பட்டன. உடல்கள் பாறை சமாதியின் உள்ளே வைக்கப்பட்டன. இங்கு மக்கள் புதையலுடன் புதைக்கப்பட்டார்களா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் அப்படி புதைக்கபட்டிருப்பதாக என்னால் கற்பனை செய்ய முடிந்தது,” என்று மேலும் கூறினார்.

பயண ஏற்பாட்டாளர்கள் ஹெக்ராவுக்கு சுற்றுலா செல்ல பயண ஏற்பாடு செய்கின்றனர். இது ஹிஜாஸ் தொடர்வண்டித் துறை என அறியப்படுகிறது. முன்பு முஸ்லிம் யாத்ரிகர்களை டமாஸ்கஸ் பகுதியில் இருந்து மெக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களுக்கு அழைத்துச் சென்றது அல்லது ஹாட் ஏர் பலூனில் புனித தலத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். “இந்த பகுதியைச் சுற்றிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என ரெய்னர் கூறினார். “அரேபிய பாலைவனத்தின் ஆழமான பகுதியில் உள்ள இந்த புனித இடத்தின் பெரிய சூழலை, அவர்கள் இப்போதுதான் அறிந்து கொள்ள தொடங்கியிருக்கின்றனர்,” என்றார்.

அனசாசி கை பதிவுகள், அமெரிக்கா

இந்த பண்டையகால பாறை கலைவடிவம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி முழுவதும் குறிப்பாக, நியூ மெக்ஸிகோவில் உள்ள உட்டா, அரிசோனா மற்றும் கொலராடோ.பகுதிகளில் காணப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய பாறை சிற்பம் என்று அறியப்படும் பெட்ரோகிளிஃப்ஸ் படங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை ஃப்ரீமாண்ட் மற்றும் அனசாசி கலாச்சாரங்களின்போது உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் மனித உருவங்கள், விலங்குகள், வேட்டையாடும் ஆயுதங்கள் மற்றும் கை பதிவுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. பல அமெரிக்க பூர்வகுடிக்களின் புனித இடமாக இந்த பகுதிகள் கருதப்படுகின்றன. அவர்கள் இதனை தங்களது கலாச்சார பாரம்பரியம், மதிப்புமிக்க கடந்த கால தொடர்புகளாக பார்க்கின்றனர்.

மர்மமான 5 புனித இடங்கள்

பட மூலாதாரம், Chris Rainier

“நியூ மெக்சிக்கோவின் சாண்டா ஃபேவில் வாழ்கின்றேன் என்ற முறையில் நான் எப்போதுமே நாட்டின் முதலாவது மக்கள் என்ற வசீகரத்தைக் கொண்டிருக்கின்றன்,” என்றார் ரெய்னர். “இந்த புகைப்படம் உட்டா பகுதியில் எடுக்கப்பட்டது. அவைகள் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கருதப்படுகிறது. அவைகள் நேர்த்தியாக காணப்பட்டன. ஃபெரிக் ஆக்சைடு கொண்ட களிமண்தொலைபேசிற மண் நிறமியை எடுத்து அதனை பாறையில் பெயிண்ட் ஆக பூசி பண்டைய கால மனிதன் தன்னுடைய கையை சிவப்பு சுவரில் வைப்பதாக நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். இந்த கைபதிவுகள் பல யுகங்களுக்கு முன்பு இருந்த சக்திவாய்ந்த எதிரொலியைக் கொண்டுள்ளன. நிழலில் உட்கார்ந்திருக்கும் வேட்டையாடும் ஒரு குழுவினர் , ஏன் நாம் நமது கையெழுத்தை இங்கே போடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம் என்று நான் கற்பனை செய்து பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை, அது இருத்தலைப் பற்றியதாக இருக்கலாம் என்றபடி, ‘நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்று சொல்கிறார்.

ஃபாலன் ரூஃப் இடிபாட்டில் இதர அனசாசி கைபதிவுகள் இருப்பதை சுற்றுலா பயணிகள் கண்டறியலாம். அதே சமயம் உட்டாவிற்கு அருகில் உள்ள ப்ளஃப், மணற்தீவு பெட்ரோகிளிஃப்ஸ் பேனலில் ஒரு புராண காலத்தை சேர்ந்த புல்லாங்குழல் வாசிக்கும் கருவுற்ற தெய்வமான கோகோபெல்லி உருவம் உள்ளிட்டவை நூற்றாண்டுகளாக பாறை ஓவியங்களாக உள்ளன.

பண்டையகால மான் கற்கள், மங்கோலியா

“வளமான வரலாற்றுடன் கூடிய குறிப்பிடத்தக்க நாடாக மங்கோலியா திகழ்கிறது,” என்கிறார் ரெய்னர். “மங்கோலியாவின் வடக்குப்பகுதி முழுவதும் பண்டையகால சமாதி பகுதிகள் ஆங்காங்கே உள்ளன. சவன்னா முழுவதும் பயணிக்கும்போது பாறைகள் அல்லது கற்பாறைகளின் பெரிய குவியலை நீங்கள் பார்க்கமுடியும். அதன் உள்ளே மிகவும் மதிக்கப்படும் ஒரு போர் வீரரின் சமாதி இருக்கும். போர் வாள்கள், நகைகள் அடங்கிய பெட்டி உள்ளிட்ட போர் வீரருக்கு சொந்தமான அவரது வாழ்க்கை முழுவதும் சேகரித்த பொருட்கள் அடங்கிய கலைப்பொருட்களுடன் பாறைக் குவியலுக்குள் அவர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றனர்,” என்றார்.

மர்மமான 5 புனித இடங்கள்

பட மூலாதாரம், Chris Rainier

கிரானைட்டால் உருவாக்கப்பட்ட மான் கற்கள் என்று அறியப்படும் பண்டைய கால பெருங்கற்கள் பெரும்பாலும் சமாதிகளுக்கு அருகே காணப்படும். “சமாதி பகுதிகளைச் சுற்றி அமைந்திருக்கும் பெரும் கற்களில் போர் வீரரின் அம்புகள், ஈட்டிகளால் வேட்டையாடப்பட்ட புராண காலத்து மான்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. போர்வீரன் ஒருவித ஆன்மீக சொர்க்கத்திற்கு செல்லும்போது, அவனுடைய ஆயுதங்கள் மான்களால் சுமந்து வரப்படுகின்றன. வடக்கு மங்கோலியாவில் மோரோனுக்கு அருகிலுள்ள உஷிஜியின் ஊவூர் பகுதியில் வெண்கல காலத்தை சேர்ந்த மான் கற்கள் உள்ளன. அங்கேதான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த கற்கள் கிமு 13 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவை,” என்று கூறினார்.

உஷ்ஜின் ஊவூரை சுற்றி 30 மான் கற்கள் உள்ளன. அதே போல பெட்ரோகிளிஃப்ஸ், கற் சிற்பங்கள் மற்றும் பாறை பகுதிகள் ஆகியவையும் உள்ளன. 100 மான் கற்களுடன் இன்னொரு வெண்கல காலத்தய பகுதி கோயிட் தாமிர் பள்ளத்தாக்கில் உள்ளது. ஆர்க்காங்காய் மாகாணத்தின் ஒரு பகுதியான இது, ஜர்கலந்தின் ஆம் என்று அழைக்கப்பட்டது. மான் கற்களின் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது. அங்கே பல்வேறு மான் கற்கள் தொகுப்புகள் நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளன.

“மங்கோலியர்கள் தங்களது கடந்த காலத்துடன் ஆழ்ந்த தொடர்பை கொண்டிருக்கின்றனர்,” என்றார் ரெய்னர். “இந்த மான் கற்கள் மிகவும் புனிதம் வாய்ந்தவையாகவும் , மங்கோலிய கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் கருதப்படுகின்றன,” என்றார்.

அங்கோர் வாட், கம்போடியா

புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில், உலகின் பெரிய ஆன்மீக சின்னமாக உள்ளது. சீம் ரியேப் நகருக்கு வெளியே 400 ச.கி.மீ சுற்றளவில் பரந்து விரிந்திருக்கிறது. கெமர் பேரரசு ஆட்சியின்போது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு தலைநகராக இருந்து கட்டமைக்கப்பட்டது. உலகின் பாரம்பரிய சின்னமாக இருக்கும் இது உண்மையில் ஒரு இந்து கோயிலாகும். 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்த கோயிலாக மாற்றப்பட்டது. இப்போது உலகின் மிகவும் முக்கியமான புத்தமத புனிதஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. துறவிகள், பெண் துறவிகள், உள்ளூர் கம்போடியர்கள், பெளத்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து பிராத்தனைகள் செய்வதுடன் காணிக்கைகள் வழங்குகின்றனர். சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ஒவ்வொரு நாள் காலையிலும் கோயில்களில் சூரியன் உதிப்பதை பார்ப்பதற்காக கூடுகின்றனர். பலருக்கு இது ஒரு ஆன்மீக அனுபவமாக இருக்கிறது.

மர்மமான 5 புனித இடங்கள்

பட மூலாதாரம், Chris Rainier

“அங்கோர் வாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என நான்கு பெரிய பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் கோயிலின் மையப்பகுதிக்கு இட்டுச் செல்கின்றன,” என்றார் ரெய்னர். “புகைப்படத்தில் உள்ள இந்த நுழைவு பகுதி, பேயோன் கோயிலுக்குள் செல்லக்கூடிய முக்கியமான நுழைவு பாதைகளில் ஒன்றாகும். இது மிகவும் சக்திவாய்ந்த இடம். அங்கே புனிதம் மற்றும் மர்ம உணர்வு அடங்கியுள்ளது. மனிதன் கட்டியதை காடு திரும்பப் பெறுவது போன்ற உணர்வை பெரும்பாலான மக்கள் பெறுகிறார்கள், பெரிய ஆலமரங்களின் பிளவுபட்டிருக்கும் மையப்பகுதியில் உள்ள கோயில்கள் பார்ப்பதற்கு ஆலமரத்தின் கதவுகளுக்குள் இருப்பது போல தோன்றுகின்றன. இந்த பேயோன் கோயில் சொர்க்கத்திற்கான புனிதப் பயணத்தின் மீதான நம்பிக்கை உட்பட இந்து மதத்தின் வளமான புராணக் கதைகளை நம் உணர்வுகளுக்குள் கட்டமைக்கிறது,” என்றார்.

அங்கோர் வளாகத்தில் 70-க்கும் மேற்பட்ட கோயில்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளின் தேடலுக்கு நிறைய அனுபவங்களை வழங்குகிறது. புத்தரின் எண்ணற்ற சிலைகள் உள்ளன. கலைவடிவங்கள், சிற்பங்கள் பெளத்தத்தின் கதைகளை சொல்கின்றன. இருப்பினும், மரியாதை நிமித்தமாக, பல இந்து சிலைகள் மற்றும் கலைப்படைப்புகளும் இங்கு உள்ளன.

நெம்ருட் சிகரம், துருக்கி

நெம்ரூட் சிகரம் 2134 மீட்டர் உயரம் கொண்டதாக துருக்கியின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. “தெய்வங்களின் சிம்மாசனம்” என்று அறியப்படும் ஆன்மீக உலகத்தின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னத்தின் ஸ்தலமாக உள்ளது. சிகரத்தின் உச்சியில், காமஜீன் ராஜ்ஜியத்தின் மன்னர் ஆண்டியோகஸ் I ஆல் கட்டப்பட்ட கிமு 1 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு மத சரணாலயம் மற்றும் புராதன புதைகுழி ஆகியவை உள்ளன.

நெம்ரூட் சிகரம் காமஜீன் மக்களுக்கான புனிதஸ்தலமாக இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதனால்தான் ஆண்டியோகஸ் I ஆம் மன்னர் தமது சமாதியை இங்கு அமைக்க வேண்டும் என்று விரும்பியதாக கூறப்படுகிறது. மலையைச் சுற்றிலும் சிங்கம் மற்றும் கழுகு பாதுகாவலர்களுடன் ஜீயஸ், ஹெர்குலிஸ் மற்றும் அப்பல்லோ, மற்றும் ஆண்டியோகஸ் மன்னர் உட்பட கிரேக்க-பாரசீக கடவுள்களின் பெரிய சிலைகள் அமைந்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் அல்லது ராபா நியூயின் மோவாய் (ஈஸ்டர் தீவு) ஆகியவை போல இந்த சிலைகள் 9 மீட்டர் உயரம் கொண்டதாக, அவை கட்டப்பட்ட காலகட்டத்தை மீறும் பொறியியலின் சாதனையைக் கொண்டிருக்கின்றன.

” நெம்ருட் சிகரம் ஒரு புனித ஸ்தலமாக ஒரு கெட்டியான நிலப்பரப்பில் நிற்கிறது,” என்றார் ரெய்னர். “ஆங்காங்கே சிதறி கிடக்கும் உடைந்த தலைகள் கொண்ட சிலைகளால் நிரம்பியிருக்கிறது. பாறை முக அமைப்புக்கள் காலப்போக்கில் காலநிலைக்கு ஆட்பட்டுள்ளன. இயற்கையானது சிலைகளை பூமிக்குள் எடுத்துச் செல்லும், மனித குலம் அழியாமல் இருப்பதற்கான முயற்சிகள் இறுதியில் மங்கிவிடும் என்ற ஓர் உருவக வழியை பரிந்துரைக்கிறது. இது புனிதமான மற்றும் பவித்ரமான இடம்,” என்றார்.

பல சுற்றுலா பயணிகள் மத்திய அனடோலியா உள்ள இந்த தொலைதூரத்தில் உள்ள சிகரத்துக்கு சூரிய உதயத்தை காண, சிலைகள் மற்றும் கிழக்கு மொட்டை மாடியில் சூரியன் ஒளிரும் போது வருகின்றனர். எனினும், சூரியன் மறைவதும் இதேபோல் மறக்கமுடியாத, ஆத்மார்த்தமான அனுபவமாக இருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »