Press "Enter" to skip to content

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/Shutterstock

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இந்த வாரம், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூடு, குஜராத் பாலம் இடிந்ததன் அதிர்ச்சி பின்னணி, மழை காலங்களில் வாகனங்களை பாதுகாப்பது எப்படி? ஈலோன் மஸ்கின் வலதுகரமாகும் சென்னை இளைஞர், விராட் கோலியின் போலி ஃபீல்டிங்கிற்கு கிளம்பிய எதிர்ப்பு’ என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். என்ன நடந்தது?

குஜராத் பாலம் விபத்து: விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை விரிவாக அறிய இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்ரீராம் கிருஷ்ணன்

பட மூலாதாரம், Sriram Krishnan

ட்விட்டரில் ஈலோன் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர்; யார் அவர்?

ட்விட்டரை வாங்கிய ஈலோன் மஸ்க், அந்த நிறுவனத்தில் தீவிர சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புக்கதவைத் திறந்து விட்டுள்ளார். இதுநாள்வரை ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை, அந்தப் பொறுப்பில் இருந்து ஈலோன் மஸ்க் நீக்கினார்.

இப்போது அதே ஈலோன் மஸ்க் மற்றொரு இந்தியரின் உதவியை நாடியிருக்கிறார். அந்த இந்தியரின் பெயர் ஸ்ரீராம் கிருஷ்ணன். சென்னையில் பிறந்த இந்த இந்திய – அமெரிக்க பொறியாளர் இப்போது ஈலோன் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார். அவரை பற்றித் தெரிந்துகொள்ள இங்கு க்ளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் மழை: வாகனங்களை பாதிப்பில் இருந்து பராமரிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இந்த மழையின் தாக்கத்தை பல வடிவங்களில் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை: வங்கதேசம், பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலியின் ‘போலி ஃபீல்டிங்’

வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றாலும் அவர் மீது வங்கதேச ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் கோபம் கொண்டிருக்கின்றனர்.

வங்கதேசத்துடனான போட்டியின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் உத்தியைப் பயன்படுத்தியதாகவும் இது ஐசிசி விதிகளுக்கு விரோதமானது என்றும் வங்கதேச ரசிகர்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர். விராட் கோலி செய்தது என்ன?

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »