- நூர் நாஞ்சி
- வணிகப் பிரிவு செய்தியாளர், பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், Getty Images
இணையத்தில் காணொளி ஸ்ட்ரீமிங் பதிவிறக்கம் செய்வது முதல் சாப்பாடு வாங்குவது வரை ஆகும் செலவை கட்டுப்படுத்தும் வாடிக்கையாளர்கள், டேட்டிங் என வரும்போது அதற்கான செலவை குறைத்துக் கொள்ள தயாராக இல்லை என்பது போலத் தோன்றுகிறது.
‘டிண்டர்’ எனும் டேட்டிங் செயலியின் உரிமையாளர், உலகம் முழுவதும் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்கு இடையேயான காலகட்டத்தில் டேட்டிங் செயலிக்கு கட்டணம் செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த செயலி தவிர, மேட்ச் குழுமத்துக்கு சொந்தமான Hinge, OKCupid ஆகிய செயலிகளும் உள்ளன. இந்த வாக்கு மொத்த செயலிகளின் விற்பனை இந்த காலாண்டில் 810 மில்லியன் டாலர்களாக (704 மில்லியன் பவுண்ட்) அதிகரித்திருக்கிறது.
ஆனால், உலகளாவிய பொருளாதார மந்தநிலை இந்த எண்ணிக்கையை பாதிக்கத்தொடங்கும் என இது எச்சரிக்கிறது.
குறிப்பாக குறைந்த வருவாய் பிரிவினர் “பிளென்டி ஆஃப் பிஷ்” (Plenty of Fish) போன்ற செயலியை நாடுவதற்கு பொருளாதார ரீதியாக பலவீனமான சூழல்கள் காரணங்களாகின்றன. இதனால் தங்களுடைய தளங்களில் இருக்கும் செயலிகளை கட்டணம் செலுத்தி குறைந்த அளவிலான மக்கள் யன்படுத்தத் தொடங்குகிறார்கள் என்கிறது மேட்ச் குழுமம்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற டேட்டிங் செயலிகளில் ஒன்றான டிண்டர் செயலியின் விற்பனை மற்றும் அதன் உபயோகிப்பாளர் எண்ணிக்கையானது செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த நிறுவனம், தனது சேவைகளுக்காக ஒரு இலவச பதிப்பையும் வழங்குகிறது.
இந்த செயலிக்குள் திரும்பி வருவதற்கு உதவியாக, இந்த சேவையை உபயோகிப்பவர்கள் தங்களது டெஸ்க் முதன்மையான கணினி மூலம் தங்களுக்குப் பிடித்தமான நபரின் படத்தை இடமும், வலமும் ஸ்வைப் செய்வதற்கு அனுமதிக்கிறது.
மொத்தமாக கணக்கிட்டால், மேட்ச் குழுமத்துக்கு 10 கோடி உபயோகிப்பாளர்கள் உள்ளனர். அதில் டிண்டர் செயலியில் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம்.
எனினும், டேட்டிங் செயலியின் சந்தாதாரர் எணிக்கை அதிகரித்த போதிலும் டிண்டர் செயலி உபயோகிப்பாளர்கள், தங்களது புரொஃபைல் மேலும் அதிக பார்வையாளர்களை பெறுவதற்கான சூப்பர் லைக்ஸ், பூஸ்ட்ஸ்தொலைபேசிற அம்சங்களில் நேரம் செலவிடுவது குறைந்திருக்கிறது.
“இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் டிண்டர் செயலின் வளர்ச்சி போதுமான அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்காது,” என்று மேட்ச் குழுமம் கணித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக மேட்ச் குழுமத்தின் செயலிகளை லட்சக்கணக்கான மக்கள் உபயோகிக்கின்றனர். இந்த காலாண்டில் உலகம் முழுவதும் மேட்ச் குழும பிராண்ட்களின் செயலிகளில் 16.5 மில்லியன் மக்கள் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ஜூலை மாதம் 16.3 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை மூன்று மாதங்களில் அதிகரித்திருக்கிறது. எனினும் பெரும்பாலான வளர்ச்சி என்பது அதன் முக்கியவாடிக்கையாளர் சந்தை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு வெளியில் இருந்து வந்திருக்கிறது. உண்மையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மேட்ச் குழும செயலிகள் உபயோகிப்பாளர் எண்ணிக்கை சற்றே குறைந்திருக்கிறது.
டிண்டர் சந்தித்த சவால்கள்

பணியில் சேர்ந்த ஒரு ஆண்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை நிர்வாகி ரெனேட் நைபோர்க் விலகியது உட்பட நிர்வாக ரீதியிலான மாற்றங்களால் பல பாதிப்புகளை டிண்டர் சந்தித்தது. இந்த பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே பொருளாதார மந்தநிலையையும் அது எதிர்கொள்கிறது.
தங்களது செயலிக்கான புதிய தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுப்பதற்கான பணி தொடர்வதாக மேட்ச் குழுமம் கூறுகிறது. டின்டர் வழங்கும் சேவைகளில் மிகவும் தவறான பரிமாற்றங்கள் நடந்ததன் காரணமாக டின்டர் பயன்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. எனவே, டின்டர் செயலியின் பெண்களுக்கான உபயோகிப்பாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் மேட்ச் குழுமம் கவனம் செலுத்துகிறது.
சர்வதேச பொருளாதார மந்தநிலை என்ற அச்சத்தால் சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக மேட்ச் குழுமம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.
வாடிக்கையாளர்கள் செலவினங்களை குறைப்பதால் தங்களது விற்பனை பாதிக்கப்படுகிறது என்று என்று கடந்த வாரம் ஆப்பிள், அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் எச்சரிக்கை செய்தன.
வாழ்க்கைக்கான செலவு அதிகரித்திருப்பதால் வாடிக்கையாளர்களின் நுகர்வு திறன் பாதிக்கப்படுவதாக இரண்டு நிறுவனங்களும் கூறியுள்ளன.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட முடிவுகளைத் தொடர்ந்து முகநூல் உரிமையாளர் மெட்டாவின் பங்குகள் 20 சதவிகிதம் அளவுக்கு கடந்த வாரம் சரிந்தது.
மேட்ச் குழுமத்தின் பங்குகள் இந்த ஆண்டு பலவீனமாக இருந்தது, அதன் முடிவுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை 16% உயர்ந்தது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com