Press "Enter" to skip to content

அமெரிக்காவில் நிர்வாண நடனக்கூடம் அமைத்து தனி சாம்ராஜ்யம் நடத்திய இந்தியர்

பட மூலாதாரம், Getty Images

பெண்களை மகிழ்விப்பதற்காக போ டை மற்றும் ஜி-ஸ்ட்ரிங்ஸ் அணிந்த கட்டழகு ஆண்கள் நடமாடும் புகைகள் நிறைந்த கிளப்புகள், பொதுவாக இந்திய-அமெரிக்க குடியேறிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவது இல்லை.

ஆனால் மும்பையில் பிறந்த ஸ்டீவ் பானர்ஜி 1979இல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண் நிர்வாண நடனக்கூட சிப்பென்டேல்ஸை நிறுவி, தெற்காசியர்களின் வழக்கமான அமெரிக்கக் கனவை முற்றிலுமாக மாற்றியமைத்தார்.

பிறகு நடந்தது வரலாறாக மாறியது. பானர்ஜி இதே போன்ற தொடர் க்ளப்புகளை ஆரம்பித்து பணத்தைக் குவித்தார். இதோடு பாலுறவு, போதைப்பொருள் மற்றும் கொலை ஆகியவற்றைச் சேர்க்கும்போது பானர்ஜியின் கதை பரபரப்பான வடிவம் பெறுகிறது.

இந்தியாவில் பானர்ஜி மற்றும் அவரது வேலை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அமெரிக்காவில் சிப்பென்டேல்ஸ் பிராண்ட் அதன் சர்ச்சைக்குரிய நிறுவனரின் பெயரை மோசமாக்கியது. ஆனால் அது இப்போது மாறி வருகிறது.

அவர் இறந்து ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு போட்காஸ்ட் மற்றும் குமேயில் நஞ்சியானி நடித்த, ஹுலுவின் சமீபத்திய நாடகத் தொடரான வரவேற்பு டு சிப்பேன்டேல்ஸ் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பானர்ஜியின் கதையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

“பெண்களின் பின்னே சுற்றும், போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் அதிக அளவில் மது அருந்தி பார்ட்டிகளில் கும்மாளம் அடிப்பவராக சிப்பென்டேல்ஸின் நிறுவனரை பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்,” என்கிறார் 2014ஆம் ஆண்டு வெளியான ’டெட்லி நடனம்: தி சிப்பண்டேல்ஸ் மர்டர்ஸ்’ என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான ஸ்காட் மெக்டொனால்ட்.

“டிஸ்னி, பிளேபாய் அல்லது போலோவுக்கு போட்டியாக உலகளாவிய பிராண்டை உருவாக்கும் தெளிவான குறிக்கோளுடன் ஸ்டீவ் மிகுந்த சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட்டார்” என்றும் அவர் கூறுகிறார்.

சிப்பண்டேல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

அவரது “கதை தனித்துவமானது” என்று வரலாற்றாசிரியர் நடாலியா மெல்மேன் பெட்ர்ஸெலா கூறுகிறார். அவரது போட்காஸ்ட், ’வரவேற்பு டு யுவர் ஃபேண்டஸி’, சிப்பண்டேல்ஸ் மீதான ஆர்வத்தை புதுப்பித்தது. கண்ணாடி அணிந்த, பழுப்பு தோல் நிறமும் பருமனான உடலும் கொண்டவரான பானர்ஜி, தனது அமைப்புகள் முன்வைத்த “வெள்ளையான, பொன்னிறமான கலிஃபோர்னியா ஆண்” என்ற கற்பனைக்கு நேர்மாறாக இருந்தார்.

அச்சு தொழில் குடும்பத்தைச் சேர்ந்த பானர்ஜி, 1960களின் பிற்பகுதியில் தனது 20வது வயதில் இந்தியாவை விட்டு கனடாவுக்கு சென்றார். விரைவிலேயே அவர் கலிஃபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்தார். லாஸ் ஏஞ்சலிஸில் சொந்தமாக கல்லெண்ணெய் பம்ப் வைத்திருந்தார்.

ஆனால் பானர்ஜிக்கு வேறு பல லட்சியங்கள் இருந்தன. கல்லெண்ணெய் நிரப்ப தங்கள் ஆடம்பரமான கார்களில் மக்கள் வரும்போது “நான் அந்த தேரை ஓட்ட விரும்புகிறேன்,” என்று அவர் சொல்வார் என்று பெட்ர்ஸெலா கூறுகிறார்.

1970களில் பானர்ஜி தனது சேமிப்பை முதலீடு செய்து லாஸ் ஏஞ்சலிஸில் ’டெஸ்டினி II’ என்று அழைக்கப்பட்ட டைவ் பார் ஒன்றை வாங்கினார். மேலும் கூட்டத்தை ஈர்க்க பேக்காமன் (Backgammon) விளையாட்டு, மேஜிக் ஷோக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மண் மல்யுத்தம் போன்ற எல்லாவற்றையும் முயன்றார்.

பொதுவாக தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான கிளப்புகளில் மட்டுமே காணப்படும் நிர்வாண ஆண்களை தனது பாரில் பெண்களைக் கவர்வதற்காக பானர்ஜி அறிமுகம் செய்யவேண்டும் என்று இரவு விடுதிகளின் விளம்பரதாரர் பால் ஸ்னைடர் 1979ஆம் ஆண்டில் யோசனை தெரிவித்தார்.

ஓர் உன்னதமான அனுபவத்தைப் பரிந்துரைக்கும் வகையில் பாரின் பெயர் சிப்பண்டேல்ஸ் என்று மறுபெயரிடப்பட்டது.

நிர்வாண நிகழ்ச்சிகள் மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டன. நெயில் முடித் திருத்தகம்கள் முதல் பெண்கள் ஓய்வறைகள் வரை பெண்கள் கூடும் எல்லா இடங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது என்று பெட்ர்ஸெலா தனது போட்காஸ்டில் கூறுகிறார்.

இது உடனடி வெற்றியைத் தந்தது. விரைவில் ஒவ்வோர் இரவும் ’சிப்பண்டேல்ஸ்’ பெண்களின் பெரும் கூட்டத்தை ஈர்த்தது.

சிப்பண்டேல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஹூக் ஹெஃப்னரின் ’பிளேபாய் பன்னிஸில்’ நடனக் கலைஞர்கள் இறுக்கமான கருப்பு பேன்ட்களுடன், கையில் சுற்றுப்பட்டைகள் (cuffs) மற்றும் காலர்களை அணிந்தனர்.
1980களில் அமெரிக்காவுக்கு “இது அதிர்ச்சியளித்தது” என்று பெட்ர்ஸெலா கூறுகிறார்.

ஆனால் 1970களின் பாலியல் புரட்சியை அடுத்து, பெண்களின் அதிகாரம் மற்றும் பாலியல் விடுதலையை வியாபாரப்படுத்தும் நேரத்தில் பானர்ஜியின் சிப்பன்டேல்ஸ் வந்தது என்று வரலாற்றாசிரியர் விளக்குகிறார்.

”பெண்களுக்கு என்று ஓர் இடம் தேவைப்பட்டது. கவலையின்றி, குற்ற உணர்வு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய இடத்தை அவர்கள் தேடினர்,” என்று கிளப் விளம்பரதாரரான பார்பரா லிகெட்டி கூறுகிறார்.

“அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கலாம். சில பானங்கள் குடிக்கலாம். பின்புறத்தைக் கிள்ளலாம். ஓர் அழகான ஆணின் ஜி-ஸ்ட்ரிங்கில் 20 டாலர் செருகலாம,” என்றும் அவர் கூறுகிறார்.

தனது கதாநாயகன்க்களான ஹெஃப்னர் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகியோருடன் போட்டி போடும் அளவுக்குப் பெரியதாக “வயது வந்தோருக்கான டிஸ்னிலேண்டை” பானர்ஜி உருவாக்க விரும்பினார்.

எம்மி விருது பெற்ற நடன இயக்குரான நிக் டி நோயாவை 80களின் முற்பகுதியில் பானர்ஜி சந்தித்தார். நிகழ்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் பானர்ஜியிடம் யோசனை கூறினார்.

டி நோயா, பாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களைப் பயன்படுத்தி ஒரு நாடகத் தயாரிப்பாக நிகழ்ச்சியை மாற்றியமைத்தார் என்று சிப்பன்டேல்ஸ் நடனக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிப்பன்டேல்ஸை நியூயார்க் நகரத்திற்கு அழைத்துச் செல்லவும், வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் மூலம் அமெரிக்கா முழுவதும் அதைப் பிரபலப்படுத்தவும் டி நோயா உதவினார்.

ஊடகங்களில் “மிஸ்டர் சிப்பெண்டேல்” என்று அழைக்கப்படும் இந்த கவர்ச்சியான நடன இயக்குனர் ’பிராண்டின்’ முகமாக மாறினார். அதே நேரம் பானர்ஜி பின்னணியில் இருந்தபடி லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து க்ளப்புகளின் இயக்கத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தன.

பதற்றம் அதிகரித்ததால், டி நோயாவும் பானர்ஜியும் தங்கள் கூட்டணியைக் கலைத்தனர். நடன இயக்குனர் தனது சொந்த நிறுவனமான US Maleஐ தொடங்கத் திட்டமிட்டார்.

டி நோயாவின் புதிய முயற்சிக்கு உதவிய சிப்பேன்டேல்ஸின் முன்னாள் இணை தயாரிப்பாளர், அது பானர்ஜிக்கு “கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்தியது” என்று ஆவணத் தொடரில் கூறுகிறார்.

பானர்ஜியை அறிந்த பலர் அவரை “பிறரை நம்பாமல் சந்தேகிப்பவர்” என்று வர்ணிக்கின்றனர். தனக்கு மட்டுமே வெற்றி கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர் அவர். “மற்றவர்கள் வெற்றி பெற்றால், அது தனது சொந்த வெற்றியிலிருந்து சென்றதாக அவர் உணர்ந்தார்,” என்று பெட்ரெஸெலா கூறுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் போட்டி ஸ்ட்ரிப் கிளப்புகள் முளைக்கத் தொடங்கின. ஒப்பந்த கொலையாளியாக மாறிய தனது நண்பர் ரே கோலனை, போட்டியாளர்களை நாசப்படுத்துவதற்காக பானர்ஜி பணியமர்த்தினார்.

1987ஆம் ஆண்டில் பானர்ஜியின் உத்தரவின் கீழ், கோலன் ஒரு கூட்டாளியை நியமித்தார். அவர் டி நோயாவை அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொன்றார்.

இந்தக் குற்றத்தில் பானர்ஜியின் பங்கு இருப்பதாக நண்பர்களும் உடன் பணியாற்றியவர்களும் சந்தேகித்தாலும் இந்தத் தொடர்பை கண்டுபிடிக்க எஃப்பிஐ புலனாய்வாளர்களுக்கு பல ஆண்டுகள் ஆனது.

ஸ்டீவ் பானர்ஜி

பட மூலாதாரம், GOPAL SHOONYA/BBC

சிப்பண்டேல்ஸ் செழித்து வளர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிற்கும் சென்றது.

1991ஆம் ஆண்டில் சிப்பென்டேல்ஸ் குழுவுடன் இங்கிலாந்து சென்றிருந்த பானர்ஜி, தனது கிளப்பின் முன்னாள் நடனக் கலைஞர்களால் தொடங்கப்பட்ட போட்டிக் குழுவின் உறுப்பினர்களைக் குறி வைக்குமாறு கோலனிடம் சொன்னார்.

கோலன், குழல்பெரி என்ற கூட்டாளியிடம் சயனைடை அளித்தார். அதை அவர்களுக்கு ஊசி மூலம் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டது என்று எஃப்பிஐ கூறுகிறது.

ஆனால் பயந்துபோன குழல்பெரி எஃப்பிஐயிடம் கோலன் பற்றி கூறிவிட்டார்.

கோலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது சதி மற்றும் கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டது. கோலனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 46 கிராம் சயனைட் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஏஜென்சி கூறுகிறது.

கைது செய்யப்பட்ட சில மாதங்கள் வரை கோலன் பானர்ஜிக்கு விசுவாசமாக இருந்தார். தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார். “வழக்கறிஞருக்கு பணம் கொடுத்து உதவ ஸ்டீவ் மறுத்த பிறகுதான் அவர் இறுதியாக ஸ்டீவுடன் உறவை முறித்துக் கொண்டார்” என்று மெக்டொனால்ட் கூறுகிறார்.

1993ஆம் ஆண்டில் எஃப்.பி.ஐ இறுதியாக பானர்ஜிக்கு எதிரான போதுமான ஆதாரங்களைத் திரட்டியது. ஸ்டீவுடனான உரையாடலை ரகசியமாகப் பதிவு செய்ய கோலனை பயன்படுத்தியது. மோசடி, சதித்திட்டம், கொலை செய்ய ஆள் அமர்த்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பானர்ஜி கைது செய்யப்பட்டார். தான் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் பானர்ஜி வாதிட்டார்.

நிக் டி நொய்யா

பட மூலாதாரம், Getty Images

சில மாதங்கள் விசாரணை நடந்த பிறகு, பானர்ஜி ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார். 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் சிப்பன்டேல்ஸ் உரிமையை அமெரிக்க அரசிடம் ஒப்படைப்பது ஆகியவை இதில் அடங்கும்.

நிறுவனம் கைவிட்டுப் போவதைத் தவிர்க்க பானர்ஜியின் வழக்கறிஞர்கள் கடுமையாக முயன்றதனர். ஆனால் அது பலனளிக்கவில்லை என்று பெட்ர்செலா கூறுகிறார். 1994 அக்டோபரில் அவருக்கு தண்டனை விதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு பானர்ஜி தனது சிறை அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

“ஒரு சில இந்திய அமெரிக்கர்களுக்கு மட்டுமே அவரது கதை தெரியும்,” என்று பெர்க்லியில் தெற்காசிய வரலாற்று நடை பயணத்தை ஏற்பாடு செய்யும் அனிர்வன் சாட்டர்ஜி கூறினார்.

பானர்ஜியின் வாழ்க்கை, “1990களின் இந்திய கலிஃபோர்னியா வணிகக் கதையின் ஃபன்ஹவுஸ் மிரர் வெர்ஷன்” என்று அவர் கூறுகிறார். மேலும் இது சமூகத்தைப் பற்றிய நடைமுறை உண்மைகளோடு ஒவ்வாத கருத்திற்கு முரண்பட்டது.

ஓர் உண்மையான, உறுதியான கலிஃபோர்னிய தொழிலதிபராக மாறுவதற்கு பானர்ஜி கடுமையாக முயன்றதை பெட்ர்ஸெலா தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார். ஆயினும் பானர்ஜியுடனான நேர்காணல் நினைவுகளில் தனித்து நின்றது அவரது இந்திய உச்சரிப்புதான்.

“மற்றவர்கள் எப்போதும் அவரை மிகவும் வெளிநாட்டவராகவும் மிகவும் இந்தியராகவும் பார்த்தார்கள் என்பது தெளிவாகிறது. மரணத்தில்கூட அவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது மக்கள் செய்த முதல் விஷயம், அவரது உச்சரிப்பைப் பின்பற்றத் தொடங்குவதுதான்,” என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »