- சிவக்குமார் ராஜகுலம்
- பிபிசி தமிழ்
பட மூலாதாரம், TWITTER
பிப்ரவரி 14ஆம் தேதி…
புரோபசல் டே, சாகலேட் டே, ரோஸ் டே, கிஸ் டே கடந்து காதலர் தினத்தைக் கொண்டாட இளைஞர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர். காதல் இயல்பானது, இயற்கையானது என்று கூறப்பட்டாலும், அதன் வெளிப்பாட்டை தீர்மானிப்பதில் திரைப்படத்திற்குப் பெரும் பங்கு உண்டு.
அதிலும், திரைப்படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் அன்று தொடங்கி இன்று வரை காதலைப் பேசிய படங்கள் மிக அதிகம். அவை சமூகத்தில் இருந்து கிளைத்தவையா அல்லது சமூகத்தில் தாக்கம் செலுத்தியவையா என்பது இன்றும் விவாதத்திற்குரிய ஒன்று.
மனித உணர்வுகளின் வெளிப்பாடாக பார்க்கப்படும் கலைகள் எதுவாக இருந்தாலும் அவை காதலைப் பேசாமல் இருந்ததில்லை. திரைப்படம்வும் அதற்கு விதிவிலக்கு அல்ல. குறிப்பாக, தமிழ் திரைப்படத்தில் காதல் மிக அதிகமாகவே பேசுபடு பொருளாக அமைந்திருக்கிறது. தேவதாஸ், அரிச்சந்திரா என புராண, இதிகாச காதல் தொடங்கி ஓ.கே. கண்மணி, லவ் டுடே என இன்றைய நவீன காதல் வரை தமிழ் திரைப்படத்தில் பேசப்படாத காதல் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆண்டுதோறும் புதுப்புது கோணங்களில் காதலை தமிழ் திரைப்படம் அணுகியுள்ளது.
புராண, இதிகாச காதல் காதைகள்

பட மூலாதாரம், NFAI
தமிழ் திரைப்படத்தின் தொடக்க கால கட்டத்தில் புராண, இதிகாசங்களில் இடம் பெற்ற காதல் கதைகளே பெருமளவில் படமாக்கப்பட்டன. 1937ஆம் ஆண்டில் தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான அம்பிகாபதி திரைப்படத்தில், மன்னரின் மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் கவித்துவமாகப் படமாக்கியிருந்தார்.
1950-களில் தமிழ் திரைப்படத்தில் காதல்
1953-ஆம் ஆண்டு சரத் சந்திரரின் நாவலை பின்பற்றி எடுக்கப்பட்ட ‘தேவதாஸ்’ திரைப்படம்தான் அதற்குப் பின்னர் வந்த காதல் கதைகளுக்கெல்லாம் ஆரம்ப அடையாளம். நாகேஸ்வர ராவும், சாவித்திரியும் படத்தில் வாழ்ந்த விதம் கண்டு மக்கள் மருகிப் போனார்கள். இதில் வந்த ‘உலகே மாயம், வாழ்வே மாயம்…’ என்ற பாடல் இன்றைக்கு ஒலித்தாலும் சோகத்தை மீட்டும். தேவதாஸ், பார்வதி என்று பெயரிடுதல் நாகரீகமாக இருந்த காலம்கூட இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டிருந்த திராவிட இயக்கத்தின் தாக்கம் திரைப்படத்தில்ும் எதிரொலித்தது. புராணங்கள், இதிகாசங்களை பேசிய தமிழ் திரைப்படம் மெல்லமெல்ல சமூகத்தைப் பிரதிபலிக்கவும், அதில் இருந்து கதைகளை உள்வாங்கிக் கொள்ளவும் தொடங்கியது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஜெமினி கணேசன் தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்ததுடன் சொந்த வாழ்க்கையிலும் காதல் நாயகனாகத் திகழ்ந்து, காதல் மன்னன் என்று பெயரெடுத்தார். சாவித்திரியுடன் அவர் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த மிஸ்ஸியம்மா குறிப்பிடத்தக்க திரைப்படம். எதிர் எதிர் அலைவரிசைகளில் இருக்கும் ஒரு பெண்ணும், ஆணும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. அவர்களை அந்த வீட்டின் சூழ்நிலைகளே சேர்த்து வைப்பதுதான் திரைக்கதை.
நவரச இயக்குநர் என்று போற்றப்படும் ஸ்ரீதரின் முதல் படமான கல்யாண பரிசு முக்கோண காதலை கதைக்களமாக கொண்டிருந்தது. சகோதரிகள் இருவரை காதலிக்கும் நாயகனாக ஜெமினி நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது.
1960 – திரைப்படத்தில் பெண்கள் நாகரிக உடைகளுக்கு மாறிய காலம்
1960-களுக்குப் பின்னர்தான் தமிழ் திரைப்படத்தில் பெண்கள் சேலையில் இருந்து சுடிதார் போன்ற பிற நவீன ஆடைகளுக்கு மாறத் தொடங்கினார்கள். தமிழ் திரைப்படத்தை ஸ்டூடியோக்களில் இருந்து வெளியே அழைத்துச் சென்றவர்களில் முக்கியமானவரான இயக்குநர் ஸ்ரீதர் தனது திரைப்படங்களில் நாயகிகளுக்கும் நவீன ஆடைகளைக் கொடுத்து அழகு பார்த்தார். வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களை மக்கள் ரசிக்கும் வகையில் கொடுத்து, அவர் பெரும் பெற்றி பெற்றார்.

ஒரு மருத்துவமனையைச் சுற்றியே முழு படமும் சுழலும் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் மிகச் சிறந்த காதல் காவியமாகப் பார்க்கப்பட்டது. புற்றுநோயால் உயிருக்குப் போராடிய முன்னாள் காதலியின் கணவரைக் காப்பாற்றிவிட்டு நாயகன் உயிர் விடும் அந்தத் திரைப்படம் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாடல் இன்றும்கூட, காதலில் தோல்வியுற்ற இளைஞர்களின் வேத வாக்கியமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
1970-களில் வெளியான காதல் திரைப்படங்கள்
தமிழ் திரைப்படம் தலைமுறை மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம் இது. எம்.ஜி.ஆர். சிவாஜி தாண்டி, கமல், ரஜினி போன்றவர்கள் இளைஞர்களாக கலக்கிய காலம் இது. சமூகம், குடும்பம் சார்ந்த படங்கள் அதிகம் வெளியான 1970-களிலும் காதலை பலவாறாகப் பேசிய படங்கள் வெளியாயின. 1975-ஆம் ஆணடு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படங்கள் பல விருதுகளை வென்றது.
ஒரு அப்பாவும் மகனும், அம்மாவும் மகளும் முறையை ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது தான் இந்தப் படத்தின் மையக்கரு. மரபுகளை மீறிய, கேட்டவுடனே முகம் சுளித்து இதுவெல்லாம் ஒரு கதையா என்று விமர்சனம் செய்தவர்களையும் கைத்தட்ட வைத்ததுதான் இந்தப் படத்தின் பிளஸ்.
“உன் மகள் உனக்கு மாமியார், என் மகன் எனக்கு மாமனார் புரட்சி, புதுமையான இந்த புரட்சியை நாம் தான் செய்யனும்” என்று மேஜர் சுந்தரராஜன் பேசும் வசனம் இந்த படத்தின் ஹைலைட் வசனம்.

1980 – காதலை தமிழ் திரைப்படம் ஆராதித்த காலம்
தமிழ் திரைப்படம் இசையின் பொற்காலம் என்று கொண்டாடப்பட்ட 1980-களின் கால கட்டத்தில் காதலை ஆராதித்த படங்கள் வரிசையாக வெளியாயின. 1980-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு தலை ராகம்’ திரைப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
இன்றைய தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்த்தால் “ஏம்ப்பா… ஒருத்தன்… ஒரு பொண்ணுகிட்ட `ஐ லவ் யூ’ன்னு சொல்லாம தவிக்கறதையா ரெண்டரை மணி நேர படமா எடுத்திருக்காங்க?” என்று ஆச்சர்யப்பட நேரிடலாம். காதல் என்கிற பெயரில் ஒரு பெண்ணை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துரத்தித் துரத்தி துன்புறுத்துவது, தன்னையும் தண்டித்துக்கொள்வது எத்தனை பெரிய அநீதி என்று உணர்த்தியது இந்தத் திரைப்படம்.
1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் ஒரு மிகுதியாக பகிரப்பட்டது செட்டர் படமாகப் பேசப்பட்டது. காதலுக்கு வீட்டுக்குள் இருந்தும், சமூகத்தில் இருந்தும் எந்தெந்த விதங்களில் எதிர்ப்புகள் கிளம்பும் என்று வரிசையாகப் பல படங்களில் தமிழ் திரைப்படம் பேசியது. கிளிஞ்சல்கள், பன்னீர் புஷ்பங்கள் என்று அந்த வரிசையில் பல படங்கள் வெளியாகின.
1986-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கியிருந்த மௌன ராகம் திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று. காதலில் தோல்வியுற்ற நாயகி, முரட்டு சிங்கிள் ஒருவரை மணமுடித்த பின்னரும், காதலன் நினைவில் மணவாழ்க்கையை வாழ முடியாமல் விவாகரத்து செய்யலாம் என்ற முடிவுக்குச் சென்று பின்னர் மனம் மாறுவதை கதைக் களமாகக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம்.
புன்னகை மன்னன், மூன்றாம் பிறை, குணா போன்ற படங்கள் வாயிலாக காதலின் பல்வேறு பரிமாணங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கி நடிகர் கமல்ஹாசன் காதல் மன்னன் என்று பெயரெடுத்தார்.
1990-களில் புதுமையான காதல் கதைகள்
1990-களின் மத்தியில் புதுமையான காதல் கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாகின. 1991-ஆம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படம் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று. காதலைச் சொல்லத் தயங்கும் பாத்திரத்துக்கு தமிழ் திரைப்படத்தின் பிம்பமாக நடிகர் முரளி காட்டப்படக் காரணமான படம் இது. தொடர்ச்சியாகப் பல படங்களில் நாயகியிடம் தன் மனதைத் திறப்பதற்கு அல்லாடும் நாயகனாக முரளி நடித்திருப்பார்.
விஜய், அஜித், பிரசாந்த் ஆகியோர் திரையுலகிற்கு அறிமுகமான தொடக்கத்தில் வரிசையாக காதல் படங்களில் நடித்திருந்தனர். பார்க்காமலே காதலைப் பேசிய காதல் கோட்டை, மென்மையான காதலைப் பேசிய காதலுக்கு மரியாதை, காதலின் மேன்மையைக் கொண்டாடிய பூவே உனக்காக போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
மௌன ராகம் கொடுத்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படம் புதிய மிகுதியாக பகிரப்பட்டது செட்டரானது. அதுவரை முழு படத்திலும் காதலை மட்டுமே காட்டி, காதல் வெற்றியா, அல்லது தோல்வியா என்பதை மட்டுமே பேசிய தமிழ் திரைப்படத்தில், காதல் ஜோடி மணமான பின்னர் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசிய படம். மாதவன் – ஷாலினி ஜோடி வெகுவாக ரசிகர்களை ஈர்த்தது. பிரசாந்த் நடித்த ஜோடி, ஜீன்ஸ், பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களும் ரசிகர்களுக்கு விருந்தாயின.

பட மூலாதாரம், Twitter
இந்தக் காலகட்டத்தில் வெளியான சேது படம் சத்தமின்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களில் ஒன்று. சசி இயக்கத்தில் லிவிங்ஸ்டன் நடித்திருந்த சொல்லாமலே படத்தில் உச்சகட்டமாக, காதலுக்காக நாயகன் தனது நாக்கையே அறுத்துக் கொள்வார். இதுபோன்று காதலுக்காக நாயகனோ, நாயகியோ எந்தத் தியாகத்தையும் செய்வதாகக் காட்டிய படங்கள் ஏராளம்.
2000-களில் காதல், லட்சியம் பேசிய தமிழ் திரைப்படம்
நட்பையும், காதலையும் பேசிய தமிழ் திரைப்படம், புதிய மில்லனியத்தில் காதலுடன் இளைஞர்களின் எதிர்கால லட்சியத்தை அதிகம் பேசத் தொடங்கியிருந்தது. விக்ரம் நடித்த தில், அஜித் நடிப்பில் வெளியான முகவரி ஆகிய திரைப்படங்கள் காதலுடன் இளைஞர்களின் லட்சியத்தையும் முன்னிறுத்தின. அதாவது, காதல்தான் வாழ்க்கை என்று வலியுறுத்திச் சொல்லி வந்த முந்தைய படங்களைப் போலல்லாமல், லட்சியத்தையும் நினைவில் இருத்திய படங்கள் இவை.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் திரைப்படத்தில் காதலைப் பேசிய இயக்குநர்களில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கியமானவர்கள். நகரத்தின் அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் நடுத்தர வர்க்க இளைஞன் மனதில் அரும்பும் காதலை அப்படியே கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் செல்வராகவன். அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. காதல் கொண்டேன், இரண்டாம் உலகம் போன்ற அவரது படைப்புகள் காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Ajayan Bala/Twitter
மின்னலே படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்த கௌதம் வாசுதேவ் மேனன், மென்மையான காதலின் மேன்மையைத் தன் பாணியில் கொடுத்து இளைஞர்களை வசீகரித்தார். இளைய தலைமுறையின் காதலை, நடைமுறையை, பக்குவத்தை விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருந்தார். இளைஞர்கள் பலரும் இன்றைக்கும் இதைத்தான் தங்களின் படமாகக் கருதுகிறார்கள்.
காதல், ஆட்டோகிராஃப், அழகி போன்றவையும் முக்கியமானவை. ஆட்டோகிராஃப் படம் வெளியான பிறகு, தங்களது முன்னாள் காதலிகளைத் தேடி திருமண அழைப்பிதழ் கொடுத்த இளைஞர்களும் உண்டு. இளம் வயதில் காதல் வயப்பட்டு, விதி வசத்தால் பிரிந்து, ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்க நேரிடும் முன்னாள் காதலர்களின் தவிப்பை வெளிப்படுத்திய ‘அழகி’யும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒரு திரைப்படம்.
இன்றைய நவீன கால படங்கள்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையப் புரட்சிக்குப் பின்னர் வெளியாகும் இன்றைய திரைப்படங்கள் காதலைக் காட்டும் போக்கு வெகுவாக மாறிவிட்டது. காதலை சொல்லத் தயக்கம், முக்கோண காதல், அபூர்வ காதல், பார்க்காமலே காதல், காதல் தியாகங்கள், காதலும் நட்பும், காதலும் லட்சியமும் என்று பேசிய தமிழ் திரைப்படம் இன்று காதலை காட்டும் விதமும் வெகுவாகவே மாறிவிட்டது.

பட மூலாதாரம், Pradeep Ranganathan/Twitter
மணமாகாமலே ஒன்றாக வசிக்கும் லிவ்-இன் டுகெதர் உறவைப் பேசிய ஓ காதல் கண்மணி, காதலர்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கையே அவர்களின் காதலை வளர்க்கும் என்பதைக் கருவாகக் கொண்ட லவ் டுடே போன்ற திரைப்படங்களுக்குக் கிடைத்த வெற்றி, அவற்றை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றன.
தமிழ் திரைப்படத்தில் காதல் குறித்து எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட அஜயன் பாலாவிடம் பேசினோம். தமிழ் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், அதில் பெண்கள் காட்டப்படும் விதமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“தமிழ் திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே காதலை களமாகக் கொண்ட பல இடங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளது. புராண, இதிகாச காதல்களைப் பேசிய ஒவ்வொரு கால கட்டத்திலும் காதலைச் சொன்ன விதம் வேறுபட்டே வந்துள்ளது. 1950 மற்றும் 1960-களில் வெளியான திரைப்படங்களில் பெண்களுக்குத் தங்களது மன உணர்வுகளை, குறிப்பாகக் காதலை வெளிப்படுத்த இடம் கொடுக்கப்பட்டதே இல்லை. அவ்வாறு காதலை வெளிப்படுத்தும் பெண் வில்லியாகவே காட்டப்பட்டு வந்துள்ளார்,” என்று அவர் கூறினார்.
1970-களில் மக்களின் யதார்த்த வாழ்க்கையைப் படமாக்கிய கலைஞர்கள், அதில் காதலுக்கு வீட்டிலும், சமூகத்திலும் எழும் பிரச்னைகளைப் பேசின. 1980-களில் வெளியான ஒரு தலை ராகம் காதலை சற்று பின்னோக்கி இழுத்துச் சென்றாலும், அடுத்த ஆண்டில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் சமூகப் பிரச்னைகளுடன் காதலை அழுத்தமாகச் சொன்னது.
இந்தல் காலகட்டத்தில் காதல் படங்களில் நெருக்கமான காட்சிகளும் இடம் பெற்றன. குறிப்பாக, கமல்ஹாசன் படங்களில் இடம் பெற்ற முத்தக் காட்சிகள் பேசப்படும் ஒன்றாக இருந்தன. இந்தக் கால கட்டத்தில், தமிழ் திரைப்படத்தில் காதலில் ஆணுக்கு இருந்த சுதந்திரமும், வெளியும் பெண்ணுக்குத் தரப்படவில்லை. 1990-களில் வெளியான புது வசந்தம் திரைப்படம் பெண்ணுக்கு ஆண் நண்பன் இருக்கலாம், அதில் தவறில்லை என்பதை வலியுறுத்திச் சொன்னது,” என்று அவர் மேலும் கூறினார்.
“1990-களில் காதலின் பல பரிமாணங்களைக் காட்டிய தமிழ் திரைப்படத்தில் பெண்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆண் – பெண் இடைவெளி படிப்படியாகத் தகர்க்கப்பட்ட கால கட்டம் இது. சிம்ரன், ஜோதிகா போன்ற நாயகிகள் திரையில் வந்தபோது பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அதிக இடம் தரப்பட்டது. தனி ஒருவன் படத்தில் நாயகியே நாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் அளவுக்கு தமிழ் திரைப்படம் பெண்களின் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இன்றைய திரைப்படங்களில் காதல் கையாளப்படும் விதத்தைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை.
தமிழ் திரைப்படத்தில் காதலும், அதில் பெண்கள் காட்டப்பட்ட விதமும் அதிக மாற்றம் பெற்றதில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் படித்து ஐ.டி போன்ற துறைகளில் பணிபுரிந்து சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம்,” என்பது அஜயன் பாலாவின் கருத்து.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com