Press "Enter" to skip to content

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆட்டம் காட்டிய மழை; 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images

அயர்லாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

அயர்லாந்துக்கு சோர்வை கொடுத்து, தனி ஆளாக களத்தில் அதிரடி காட்டியிருக்கிறார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. 56 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் விளாசினார்.

இந்தியாவுக்கு வாழ்வா சாவா ஆட்டம்

அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. முன்னதாக பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த இந்தியா, பலம் வாய்ந்த இங்கிலாந்திடம் தோற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் வகிக்கிறது. அயர்லாந்தை வெல்லும் பட்சத்தில் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். அதேசமயம், மறுபுறம் அயர்லாந்து அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். ஹர்மன் ப்ரீத்துக்கு இது 150வது டி20 ஆட்டம். மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை எனும் பெயர் பெற்றிருக்கிறார் ஹர்மன் ப்ரீத் கவுர்

பவர் பிளேயில் பக்குவமாக ஆடிய பேட்டர்கள்

இந்தியாவின் அதிரடி பேட்டராக அறியப்படும் ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஜோடி ஓபனிங் செய்தது. பவர்பிளேவில் மட்டையிலக்குடை பறிகொடுக்காமல், இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஆறு ஓவர்களில் இந்தியா மட்டையிலக்கு இழப்பின்றி 42 ஓட்டங்கள் சேர்த்தது.

10வது சுற்றில் ஷஃபாலி வர்மா 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 62 ரன்களுக்கு முதல் மட்டையிலக்கு பார்ட்னர்ஷிப் உடைந்தது. பின்னர் வந்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் 13 ரன்னிலும் ரிச்சா கோஷ் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

சரிவில் இருந்து மீட்ட ஸ்மிருதி மந்தனா

ஒருபுறம் மட்டையிலக்குடுகள் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடினார் ஸ்மிருதி. 3 முறை கேட்ச் வாய்ப்பு கொடுத்தும் அதனை அயர்லாந்து நழுவவிட்டது. இதற்காக அந்த அணி பெரும் விலையை கொடுக்க நேரிட்டது. அயர்லாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஸ்மிருதி மந்தனா கடும் நெருக்கடியை கொடுத்தார். பொறுமையாக ஆடிய அவர், 40 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

56 பந்துகளில் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதியின் பங்களிப்பால் இந்திய அணி கணிசமான ஸ்கோரை எட்டியது. அவரைத் தொடர்ந்து வந்த தீப்தி சர்மா டக் அவுட்டானதால், இறுதிக்கட்டத்தில் ஜெமிமா ரோட்ரிகஸ் பொறுப்புடன் செயல்பட்டு 12 பந்துகளில் 19 ஓட்டங்கள் விளாசினார்.

இந்திய மகளிர் அணிக்கு ஓட்டத்தை குவிக்க பங்காற்றியதில் ஸ்மிருதி மந்தானா முதன்மையானவர். களத்தில் நங்கூரமிட்டு நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து அவர் சேர்த்த 87 ரன்களால் மட்டுமே இந்தியா 155 ரன்களை எட்ட முடிந்தது. சரி பாதி ரன்களைக் கூட இதர பேட்டர்களால் எடுக்க முடியவில்லை. 20 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 6 மட்டையிலக்கு இழந்திருந்த நிலையில் அயர்லாந்துக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை

மகளிர் டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஏமி ஹன்டர் ஓட்டத்தை அவுட்டானார். அதே ஓவரின் 5வது பந்தில் ஓர்லா டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்த சரிவில் சிக்கிய அயர்லாந்தை கேபி லீவிஸும் லாரா டெலானியும் இந்தியாவிடம் இருந்து மீட்கப் போராடினர். 9வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அயர்லாந்து அணி அதுவரை 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 54 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றதாக அறிவிக்கபபட்டது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி.

ஆட்டநாயகியாக ஸ்மிருதி மந்தனா தேர்வானார். வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »