பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.
19 ஓட்டத்தை வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா கோப்பையைப் பறிகொடுத்தது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 மட்டையிலக்கு இழப்புக்கு 156 ஓட்டத்தை எடுத்த நிலையில்
இரண்டாவது பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பம் முதலே மட்டையாட்டம் செய்ய தடுமாறிக்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா, ஆட்டத்தின் பிற்பகுதியில் அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்காவின் எந்த வீராங்கனையும் பெரிதாக சோபிக்காத நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லாரா வோல்வார்ட் மட்டும் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தார்.
ஆனால், அணியின் ஸ்கோர் 109 ரன்னாக இருக்கும் போது, 48 பந்துகளில் 61 ஓட்டங்கள் சேர்த்திருந்த அவரும் அவுட் ஆனது தென்னாப்பிரிக்காவுக்கு பேரடியானது. அவருக்கு அடுத்ததாக க்ளோயி ட்ரையான் 23 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 மட்டையிலக்குகளை இழந்து 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனி அடித்த 74

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார்.
இரண்டு அணிகளிலும் அரையிறுதியில் விளையாடிய அதே அணியே மாற்றமின்றி களமிறங்கியது.
மட்டையாட்டம்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹீலி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொருபுறம் பெத் மூனி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாபுறமும் விரட்டினார்.
ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் அணியின் ஸ்கோர் 36 ஆக இருந்தபோது தனது மட்டையிலக்குடை பறிகொடுத்தார் ஹீலி. அதன்பின்னர் களத்திற்கு வந்த கார்ட்னர், மூனியுடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
இவர்களது இணை 46 ரன்களை குவித்து பிரிந்தது. கார்ட்னர் அவுட் ஆன பிறகு அடுத்தடுத்த வீராங்கனைகள் வருவதும் போவதுமாகவே சென்றது ஆஸ்திரேலியாவின் ஆட்டம். அதேநேரம் ஒரு முனையில் மூனி மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். இவர் 74 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இரு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் பெத்.
தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், மரிசானே காப் ஆகிய இருவரும் தலா 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.
5 முறை உலக சாம்பியனாக இருந்துள்ள, நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 156 ஓட்டத்தை எடுத்து சவாலான இலக்கை நிர்ணயித்தது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com