Press "Enter" to skip to content

சென்னை கோட்டையில் ‘பதுங்கிப் பாய்ந்த’ ராஜஸ்தான்; 175 ரன்களை சேஸ் செய்யுமா தோனி & கோ?

பட மூலாதாரம், BCCI/IPL

தொடக்கத்தில் வேகமெடுத்தது ராஜஸ்தானின் மட்டையாட்டம். மிடில் ஆர்டரில் அந்த வேகத்தை மிதமாக கட்டுப்படுத்தினார் ஜடேஜா. சுழலுக்கு கைக்கொடுக்கும் சென்னை ஆடுகளத்தில் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். வெற்றிகரமாக சேஸ் செய்து மஞ்சள் படைக்கு விருந்து படைக்குமா சி.எஸ்.கே?

‘கேப்டன்’ தோனிக்கு 200-ஆவது ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி சார்பில் ஆகாஷ் சிங் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் மஹீஷ் தீக்சனாவும் களமிறக்கப்பட்டார்.

பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 200-ஆவது ஆட்டத்தில் களமிறங்கினார் எம்.எஸ்.தோனி.

IPL

பட மூலாதாரம், BCCI/IPL

பட்லரின் அரைசதமும் படிக்கலின் நிதானமும்

யாசஷ்வி ஜெய்ஷ்வால் – ஜாஸ் பட்லர் ஜோடி ஓபனிங் செய்தது. முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கினார் ஜெய்ஷ்வால். இருப்பினும் துசார் தேஷ்பாண்டே வீசிய பந்தில் ஷிவம் துபே வசம் கேட்ச் கொடுத்து 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படிக்கல் பட்லருடன் இணைந்து நிதானம் காட்டினார்.

2வது மட்டையிலக்குடிற்கு பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி 88 ஓட்டங்கள் வரை சேர்த்தது. பவர்பிளேவில் மட்டுமே ராஜஸ்தான் அணி 57 ரன்களை குவித்தது. ஆட்டத்தில் ராஜஸ்தானின் கை ஓங்கியிருந்தது. மட்டையாட்டம்கில் படிக்கலும் பட்லரும் சென்னை களத்தில் மிரட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த `மேஜிக்` சுழற்பந்துவீச்சாளரை கொண்டு வந்தார் எம்.எஸ்.தோனி

ராஜஸ்தான் வேகத்திற்கு பிரேக் போட்ட ஜடேஜா

IPL

பட மூலாதாரம், BCCI/IPL

ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது 9வது ஓவர்தான். அதனை ரவீந்திர ஜடேஜா வீசினார். அரைசதம் விளாசும் முனைப்பில் வேகமாக ஆடிக்கொண்டிருந்த படிக்கலை தனது சுழற்பந்துவீச்சு மூலம் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்து வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனையும் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

அடுத்தடுத்து 2 மட்டையிலக்குகளால் ராஜஸ்தானின் ஓட்டத்தை குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. ஜடேஜாவின் சுழல் சென்னை அணிக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.

சென்னை ஆடுகளத்திற்கு நன்கு பரிட்சயமான அஷ்வினை இடது கை சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதமாக முன்கூட்டியே மட்டையாட்டம் ஆட அனுப்பி வைத்தது ராஜஸ்தான் அணி.

முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மொயின் அலி தவறவிட்டார். தனது பங்கிற்கு பொறுப்புடன் ஆடிய அஷ்வின், 22 பந்துகளில் 30 ஓட்டங்கள் சேர்த்து விடைபெற்றார்.

மொயின் அலி செய்த ‘3 தவறுகள்’

தீக்‌ஷனா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை படிக்கல் எதிர்கொண்டார். 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பந்து எட்ஜில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த மொயின் அலி வசம் கேட்சாக சென்றது. ஆனால் மொயின் அலி கேட்சை தவறவிட்டார். பதிலுக்கு அடுத்த பந்தே சிக்சருக்கு பறக்கவிட்டார் படிக்கல். அந்த சுற்றில் மட்டும் 17 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான்.

ஜடேஜா வீசிய 9வது சுற்றில் அஷ்வினை கோல்டன் டக் அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொடுத்த கேட்சை மீண்டும் அதே பாணியில் நழுவவிட்டிருந்தார் மொயின் அலி.

ராஜஸ்தானின் வேகம் ஒருபக்கம் கட்டுக்குள் வந்தாலும் மறுபக்கம் நிதானமாக ஓட்டத்தை சேர்த்துக்கொண்டிருந்தார் அஷ்வின். அவர் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தபோதே அவரை ஓட்டத்தை அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையும் சொதப்பலான ஃபீல்டிங்கால் அதை தவறவிட்டார் மொயின் அலி.

பாதி தூரம் வரை ஓடிவிட்டு ஓட்டத்தை எடுக்காமல் மீண்டும் க்ரீஸிற்குள் திரும்பினார் அஷ்வின். பெரிய இடைவெளியில் ஓட்டத்தை அவுட்டாக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும் தோனியின் கைக்கு பந்தை வழங்காமல் வேறு திசையில் வீசினார்.

சென்னைக்கு 176 ஓட்டங்கள் இலக்கு

30 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அஷ்வினின் கேட்சை பிடித்தார் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மகாலா. அப்போது அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக 16வது ஓவரை வீசினார் மொயின் அலி. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பட்லரை 52 ஓட்டங்களில் வெளியேற்றினார் மொயின் அலி.

அடுத்து வந்த ஹெட்மயர் 18 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாச ராஜஸ்தான் அணி 20 சுற்றுகள் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 175 ஓட்டங்கள் சேர்த்தது. முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் 95 ஓட்டங்கள் விளாசியிருந்தபோதிலும் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களை மட்டுமே வழங்கியது சென்னை அணி. அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் அதாவது கடைசி 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே சென்னை அணி வழங்கியது சேசிங்கிற்கு ஓரளவு கைக்கொடுக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »