பட மூலாதாரம், Radha krishnan
வைகை, பாண்டியன், கோவை, பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 54 ரயில்களின் புறப்படும் நேரம், வருகை நேரம் ஆகியவை இன்று முதல் (அக்டோபர் 1) மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வைகை, கோவை விரைவு ரயில்களின் நேரம் வந்தே பாரத் தொடர் வண்டிசேவைக்காக மாற்றப்பட்டுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதுரை – சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிபயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் தொடர் வண்டிசேவையாக உள்ளது. 46 ஆண்டுகளாக இந்த தொடர் வண்டிஇயக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸின் பிறந்தநாளை தொடர் வண்டிபயணிகள், தொடர் வண்டிஆர்வலர்கள் ஆகியோர்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டிக் கொண்டாடினர்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும்படியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட 8 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் தொடர் வண்டிதிட்டம் தொடங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1:50 மணிக்குச் சென்றடையும். இந்த தொடர் வண்டிவிருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட 6 தொடர் வண்டிநிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை இரவு 10:40 மணிக்குச் சென்று சேரும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் தொடர் வண்டிதிருநெல்வேலி சென்னை இடையிலான 653 கி.மீ தூரத்தை 7.50 மணி நேரத்தில் சென்றடையும்.

பட மூலாதாரம், Railway PRO
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்ய உணவுக்கு 364 ரூபாய் உட்பட 1665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு சொகுசுப் பெட்டியில் உணவுக்கு 419 ரூபாய் உட்பட 3055 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
விருதுநகரில் இருந்து சாதாரண பெட்டியில் 1505 ரூபாய், சிறப்பு வகுப்புப் பெட்டியில் 2725 ரூபாய், மதுரையில் இருந்து செல்ல சாதாரண பெட்டியில் 1425 ரூபாய், சிறப்புப் பெட்டியில் 2535 ரூபாய், திண்டுக்கலில் இருந்து சாதாரண பெட்டியில் 1330 ரூபாய், சிறப்பு வகுப்புப் பெட்டியில் 2350 ரூபாய், திருச்சியில் இருந்து சாதாரண பெட்டியில் 1070 ரூபாய், சிறப்புப் பெட்டியில் 1895 ரூபாய், விழுப்புரத்தில் இருந்து சாதாரண பெட்டியில் 755 ரூபாய், சிறப்புப் பெட்டியில் 1280 ரூபாய் என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
வைகை எக்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் நேரத்தில் மாற்றம்
இந்நிலையில் வந்தே பாரத் ரயில், பிற ரயில்களின் வருகைக்காக நின்று செல்லாமல் இருக்க வைகை, கோவை விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு தொடர்வண்டித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரை தொடர் வண்டிநிலையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்படும் (12636) வைகை விரைவு தொடர் வண்டிஇனி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6:40 மணிக்கே மதுரையிலிருந்து புறப்படும்.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு தொடர் வண்டிஇனி இரவு 9:15 மணிக்கு பதிலாக 9:30 மணிக்கு மதுரை தொடர் வண்டிநிலையம் வந்தடையும்.
மதுரை- கோவை இடையிலான (16722) கோவை விரைவு தொடர் வண்டிகாலை 7:25 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக இனி 25 நிமிடங்கள் முன்பாக காலை 7:00 மணிக்கே புறப்பட்டுச் செல்லும் என தெற்கு தொடர்வண்டித் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Railway PRO
வைகை விரைவு ரயிலின் பயண நேரம் அதிகரிக்குமா?
அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து வைகை விரைவு காலை 6.40-க்கே புறப்பட்டு பிற்பகல் 2.10 மணிக்கு அதாவது 7 மணிநேரம் 30 நிமிடங்களில் சென்னை வந்தடையும்.
சென்னையில் இருந்து வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு 9:15 மணிக்கு வந்தடைய வேண்டிய தொடர் வண்டிஇரவு 9:30 மணிக்குத்தான் அதாவது 7 மணிநேரம் 40 நிமிடங்களில் மதுரையைச் சென்றடையும். புதிய மாற்றத்தின்படி தற்போதைய பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரிக்கும்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் வந்தேபாரத் தொடர் வண்டிஅறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது என்னும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதைப் பார்க்கின்றனர்.
குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக் கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Radha krishnan
ரயில்களின் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார் தொடர் வண்டிபயணியான ராதாகிருஷ்ணன்.
“வைகை, கோவை விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதற்கான மிக முக்கியக் காரணம் வந்தே பாரத் ரயிலுக்கு வழிவிட வேண்டும் என்பதைத் தாண்டி இரு ரயில்களும் குறித்த நேரத்தில் சென்னைக்குச் சென்றடைய வேண்டும் என்பதுதான்.
ஏனென்றால், மதுரையிலிருந்து 7:10 மணிக்குப் புறப்படும் வைகை விரைவு தொடர் வண்டிதிருச்சி அருகே வந்தே பாரத் ரயிலுக்காக இணை தொடர் வண்டிபாதையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக வைகை தொடர் வண்டிதாமதமாக சென்னை செல்லும் சூழல் ஏற்படுகிறது.
இனி வரும் காலங்களில் அதிகாலை 6: 40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். இதனால் வந்தே பாரத் ரயிலுக்கு செங்கல்பட்டின் அருகே வழிவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னை எழும்பூரை சரியான நேரத்திற்குச் சென்று சேரும்,” என்கிறார்.
“அதேநேரம் வைகை அதிவிரைவு தொடர் வண்டிமுன்பு 9 மணிக்குள்ளாக மதுரை தொடர் வண்டிநிலையத்தை வந்து அடைந்தது.
தற்போது, கூடுதலாக 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதால் அருகில் இருக்கக்கூடிய விருதுநகர், சிவகாசி, சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்குச் செல்லும் தொடர் வண்டிபயணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதில் நேர மாற்றம் செய்தால் பயணிகள் பயன் அடைவார்கள்,” என்றும் அவர் கூறுகிறார்.
ரயில்களின் சேவை நேர மாற்றம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை தொடர்வண்டித் துறை கோட்ட மேலாளர் பி.அனந்த், ரயில்களின் நேர மாற்றம் குறித்து நாங்கள் முடிவு எடுப்பது கிடையாது. தொடர்வண்டித் துறை நிர்வாகம் தொடர் வண்டிபயணிகளின் தேவை, பாதுகாப்பு, நேரத்திற்கு ரயில்கள் சென்று சேர்வது, தொடர் வண்டிபயணிகளுக்குச் சிறந்த பயண அனுபவம் கிடைக்க வேண்டும் என்பன போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ரயில்களின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன,” என்றார்.

பட மூலாதாரம், P.Ananth DRM
தொடர் வண்டிஇயக்குதல் பிரிவின் தோல்வியால் வைகை தொடர் வண்டிதாமதம்
வந்தே பாரத் தொடர் வண்டிஇயக்கப்படுவதால் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வைகை விரைவு தொடர் வண்டியில் பயணிக்கும் பயணிகள் திருச்சியில் ஒரு மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகக் கூறுகிறார் மதுரை தொடர்வண்டித் துறை கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் வைகை, தேஜஸ், குருவாயூர் என மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக வந்தே பாரத் தொடர் வண்டிஇயக்கப்பட்டது வரவேற்கதக்கது.
அதேநேரம், சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் தொடர் வண்டிதிருச்சிக்கு மாலை 6:40க்கு சென்றடைகிறது. ஆனால் சென்னையில் இருந்து மதியம் 1.50க்குப் புறப்படும் வைகை விரைவு ரய்கல் மாலை 6:45க்கு திருச்சியை வந்தடைய வேண்டும். எனினும் வந்தே பாரத் தொடர் வண்டிகடந்து செல்வதற்காக சுமார் 35 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை திருச்சி தொடர் வண்டிநிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகாத்திருக்கின்றது.
காரணமின்றி திருச்சி தொடர் வண்டிநிலையத்தில் காத்திருப்பதால் தொடர் வண்டிபயணிகள் தொடர்வண்டித் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தொடர் வண்டிவேகத்டடைக் குறைத்து இயக்கி வந்து ஸ்ரீரங்கம் தொடர் வண்டிநிலையம் வந்து பின் அங்கிருந்து வந்தே பாரத் கடந்து செல்வதற்கு ஏதுவான நேரத்தில் வைகை தொடர் வண்டிதிருச்சி வந்து சேர்கிறது. இதனால் பயணிகளுக்கு சுமார் 45 நிமிடம் வீணாகிறது,” என்றார்.

‘வந்தே பாரத் தொடர் வண்டியால் எந்த ரயிலுக்கும் பாதிப்பு இல்லை’
வந்தே பாரத் தொடர் வண்டிஇயக்கப்படுவதால் வேறு எந்த ரயிலுக்கும் பாதிப்பு இல்லை என்று தெற்கு தொடர்வண்டித் துறை தலைமை செய்தி தொடர்பாளர் குகனேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் தொடர் வண்டிசுமார் 70 நிமிடத்தற்குப் பிறகு புறப்பட்டு 50 நிமிடத்திற்கு முன்பாக தொடர் வண்டிநிலையங்களைச் சென்றடைகிறது. இதனால் சில இடங்களில் சில ரயில்களுக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. திருச்சி தொடர் வண்டிநிலையத்தில் வைகை விரைவு தொடர் வண்டிஒரு மணிநேரம் காத்திருந்ததாக தொடர் வண்டிபயணிகள் எழுப்பும் புகார் குறித்து தொடர்வண்டித் துறை துறை உடனடியாக விசாரணை நடத்தியது.
விசாரணையில் ஓரிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்றைய தினம் வைகை தொடர் வண்டிஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. உடனடியாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.
எனவே இதைக் காரணம் காட்டி ரயில்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படுவதாகச் சொல்வதில் உண்மை இல்லை. வைகை ரயிலை பொறுத்தவரை 15 நிமிடங்களுக்கு தொடர் வண்டிகாத்திருக்க நேரிடும், அதுவும் சரி செய்யப்படும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருவதுடன் புதிய தொடர் வண்டிநிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது போன்ற பல காரணங்களால் ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது.
வந்தே பாரத் போன்ற புதிய ரயில்கள் இயக்கப்படும்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் மற்ற எந்த ரயிலின் வேகமும் குறைக்கப்படவில்லை,” என்றார்.
இந்தக் கட்டுரையில் பிபிசி தமிழுக்காக செய்தியாளர் பிரபுராவ் ஆனந்தன் கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com