பட மூலாதாரம், Getty Images
2003 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும், அவரது அணியினரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதுவரையிலும் தோற்கடிக்கப்படாத ஆஸ்திரேலியாவுடன் விளையாடினர்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு அப்போது சென்றதால் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.
ஆனால் இந்த ஆட்டம் இந்தியர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது என்பதுடன், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணிக்கு மோசமான தோல்வியை அளித்தனர்.
2007 ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அவர் தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.
சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திறமையான பேட்ஸ்மேன் தற்போது மீண்டும் களத்தில் உள்ளார். இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
இப்போது அவர் இந்த மதிப்புமிக்க உலகக் கோப்பையைப் பெற முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் சிறந்த பயிற்சியாளர்கள் பட்டியலில் டிராவிட்டின் பெயர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் ராகுல் டிராவிட்டின் ‘மேஜிக் டச்’ இருக்கிறது.
ஆனால் அவர் எப்படி ஒரு பழம்பெரும் பேட்ஸ்மேன் என்ற நிலையிலிருந்து தன்னை ஒரு பயிற்சியாளராக மாற்றிக் கொண்டார். அவர் திரைக்குப் பின்னால் இருக்க விரும்புகிறாரா, அல்லது அவரது அணியின் வலுவான செயல்திறன் மூலம் தனது இருப்பை உணர்த்துகிறாரா?
பதில் அவரது புத்திசாலித்தனமான விளையாட்டு நிர்வாகத்தில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டிராவிட் தனது வாழ்க்கையில் கடின உழைப்பாளி என்று அறியப்படுவதுடன் பெரும் புகழையும் பெற்றுள்ளார். மிக எளிதாக அவர் மட்டையிலக்குடுகளை இழந்த அரிதான சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால்தான் அவர் ‘தி வால்’ அல்லது ‘மிஸ்டர் டிபெண்டபிள்’ என்றும் அழைக்கப்பட்டார்.
2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய சோதனை போட்டியில் வெற்றிபெற முடியாத நிலை ஏறக்குறைய உறுதியாகிவிட்ட போது, டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண் உடன் இணைந்து 376 ஓட்டங்கள் எடுத்த மறக்க முடியாத பந்துவீச்சு சுற்றுஸுடன் ஆட்டத்தை மாற்றியபோது அவரது மிக முக்கியமான மட்டையாட்டம் திறன் வெளிப்பட்டது.
2004-ல் பாகிஸ்தானுக்கு எதிரான சோதனை போட்டியில் ராகுல் டிராவிட் 12 மணி நேர சுற்று இன்றும் சிறந்த விளையாட்டுத் திறன்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது.
2011 இல் இந்தியாவின் மோசமான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டிராவிட் தனது சக வீரர்கள் மத்தியில் உறுதியாக இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா 4-0 என்ற அவமானகரமான தோல்வியை சந்தித்தாலும், டிராவிட் அப்போதும் 602 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி வரை களத்தில் இருக்கும் அவரது ஸ்டைல் அவரது பயிற்சி பாணியிலும் தெரிகிறது.
ஆனால் நீங்கள் இன்னும் நெருக்கமாகப் பார்க்கும் போது, இந்த பதவிக்காலமும் அவருக்கு மிகவும் எளிதானது அல்ல என்பதை நீங்கள் காணலாம். விளையாடிய நாட்களைப் போலவே, டிராவிட் ஒரு பயிற்சியாளராக கடினமாக உழைத்தார், விமர்சனங்களை எப்போதும் புறக்கணித்தார் என்பதுடன் அவரது தனி அடையாள பாணியை கைவிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
குழப்பத்தில் இருந்து மீட்டு உச்சத்திற்கு…
அவரது வெற்றி வெற்றிடத்திலிருந்து வந்தது அல்ல. சர்வதேச அளவில் செயல்படத் தயாராக இருக்கும் இந்தியாவின் மூத்த அணியின் திறமை எங்கிருந்து வருகிறதோ அந்த அடித்தளத்திலிருந்தே அவர் தொடங்கினார்.
அவர் 2016 இல் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட மற்றும் A (ஜூனியர் நேஷனல் சைட்) அணிகளின் தலைமை பயிற்சியாளராக ஆனார். இது தேசிய அளவிலான கவர்ச்சியைப் பெற்றிராத பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால் இதில் அவர் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை 2018-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை எடுத்துச் சென்றார். மூன்று ஆண்டுகள் ஜூனியர் நிலை வரை திறமைகளை வளர்த்த பிறகு, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
நேஷனல் கிரிக்கெட் அகாடமி ஒரு பிரீமியம் மையமாகும். அங்கு வீரர்கள் தங்களுடைய உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். அல்லது காயங்களில் இருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையைப் பெறுகிறார்கள்.
அவர் என்சிஏவில் இருந்த போது, இந்திய கிரிக்கெட் பெரும் கொந்தளிப்பான கால கட்டத்தை கடந்து கொண்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோப்பைக்காக நாடு காத்திருக்கும் நிலை நீண்டு கொண்டே இருந்தது. இந்தியா கடைசியாக 2013ல் ஐசிசி போட்டியில் வென்றது.
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்த பின்னணியில், 2021ல் டிராவிட்டிடம் அணியின் பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே ஜூனியர் மட்டத்தில் டிராவிட்டிடம் இருந்து பயிற்சி அல்லது வழிகாட்டுதலை பெற்றுள்ளனர் என்பதே உண்மை.
எனவே, அது அப்படி இல்லாவிட்டாலும், டிராவிட்டிற்கு மிகவும் எளிதாகத் தோன்றியது. அதன் பின் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டன, 2022 இல் விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு வெளியேறியபோது, பிரச்னைகள் மேல் மட்டத்திற்கு வந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஷமி, லோகேஷ் ராகுலுக்கு ஆதரவு
டிராவிட் தனது வழக்கமான பாணிக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சலசலப்பை விட்டு, தோல்வியால் வருத்தப்படாமல், செயல்முறையை நம்பும்படி தனது அணிக்குக் கூறினார்.
2023ல் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் அவரது கவனம் நிலைத்திருந்தது. இப்போட்டிக்காக அவர்கள் பலவிதமான வீரர் தேர்வுகளை முயற்சிக்க வேண்டியிருந்தது – அணி இழப்புகளைச் சந்தித்தாலும் கூட.
அவர் தனது வீரர்களை பெரிதும் ஆதரித்தார். கே.எல்.ராகுலை அணியில் சேர்ப்பது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் இந்த பேட்ஸ்மேனுக்கு ஆதரவாகவே நின்றார்.
இன்றைக்கு ராகுல் அவரது மட்டையாட்டம்கால் மட்டுமல்ல, மட்டையிலக்கு கீப்பிங் திறமையாலும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்.
2003 போட்டியில் ராகுல் டிராவிட் தன்னலமின்றி மட்டையிலக்கு கீப்பராக செயல்பட்டார். இதனால் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் அணியில் விளையாட முடியும்.
லோகேஷ் ராகுல் ஒரு மட்டையிலக்கு கீப்பர் இல்லை. ஆனால் அவர் மற்ற மட்டையிலக்கு கீப்பரைப் போல் சிறந்த வேலையைச் செய்து வருகிறார்.
பலர் ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாடும் முதல் நான்காவது பேட்ஸ்மேன் ஆவார்.
டிராவிட் தனது பந்துவீச்சாளர்களில், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் நிறைய கவனம எடுத்துக் கொண்டார். இதில் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடங்குவர்.

பட மூலாதாரம், Getty Images
மிகச் சிறந்த இந்திய அணியை கட்டமைத்தது எப்படி?
உண்மையில், ராகுல் டிராவிட்டின் செயல்பாட்டில் இந்திய அணி சரியான வீரர் தேர்வைக் கொண்டிருப்பதையும், ஒரு பெரிய போட்டிக்குச் செல்வதற்கு முன்பு சரியான நேரத்தில் ஃபார்மில் இருப்பதையும் உறுதி செய்வதை உள்ளடக்கியது.
அவர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் நம்பகமான உறவை உருவாக்கினார். அவர் இந்த போட்டியில் தனது வியூக ரீதியான முடிவுகள் மற்றும் தைரியமான மட்டையாட்டம் மூலம் அனைவரையும் கவர்ந்துவருகிறார்.
அணியை மேம்படுத்துவதில் டிராவிட் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவுகள் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்தியா, பாகிஸ்தானையும், இலங்கையையும் மோசமாக தோற்கடித்து, ஆசிய கோப்பையை வென்றது.
மேலும் இந்த போட்டியில் இதுவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார். இந்த லெஜண்ட் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான கடைசி தடை மட்டுமே உள்ளது. அது இதுவரை ஒரு வீரராக அவரது எல்லைக்கு அப்பாற்பட்டது.
அவர் நிச்சயமாக கோப்பையைப் பெற ஆர்வமாக இருப்பார். ஆனால் போட்டி தொடங்கிய பிறகும், பெரும்பாலும் போட்டி முடிந்த பிறகும் அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார் என்பதை உறுதியாகக் கூறலாம்.
விண்டேஜ் ராகுல் டிராவிட் அப்படிப்பட்டவர் தான். அவர் எப்போதும் தனது வேலையை அமைதியாக செய்ய விரும்புகிறார்.
Source: BBC.com